Sunday, February 7, 2010

மறு ஜென்மம்

அவளை பார்த்த உடனே எனக்கு உள்ளே பல்ப் (பச்சை கலர்) எரிந்தது. கல்யாணம் செய்தால் இவளையே செய்ய வேண்டும், இல்லை என்றால் பிரமச்சாரியாகவே இருந்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன்.

அவள் பெயர் மஹா, பெயருக்கு பொருத்தமாக மஹாலட்சுமி மாதிரி (ஜீன்ஸ் போட்ட) இருப்பாள்.
எங்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள். (நான்தான் அவளுக்கு பாஸ்)

சில நேரங்களில் பணி நிமித்தமாக வெளியூர் செல்லும்பொழுது அவள் என்னுடன் வருவாள்.
ஆனால் வரம்பு மீறி நடக்கும் மனிதன் நானில்லை என்பதானால் இதுவரை எந்த விதமான
"அசம்பாவிதமும்" நடந்ததில்லை.

நான்தான் அவளை காதலிக்கிறேன், அவள் என்னை காதலிக்கிறாளா, இல்லையா என்பது எனக்கு தெரியாது.

இந்த சமயத்தில்தான் என் வீட்டில் அப்பா கல்யாண பேச்சை எடுத்தார் ஒரு பெண்ணின் புகைபடத்தை
காட்டினார், என் மனசு முழுதும் மஹா இருந்ததால், தைரியமாக அவளை நான் விரும்பும் விசயத்தை அப்பாவிடம் கூறினேன்.

அப்பா கோபத்தில் கத்தினார், நம்ம ஸ்டேடஸ் என்ன, அவ நம்ம கிட்ட
வேலை செய்யற அடிமை இனம்டா என்றார்.

அதற்கு மேல் நான் அங்கு நிற்க பிடிக்காமல் காரை எடுத்து கொண்டு ஒரு தெளிவான முடிவோடு மஹா வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தினேன்.

மஹாவின் வீட்டு அழைப்பு மணியின் விசையை தட்டும் முன் உள்ளே மஹாவின் பேச்சு குரல் கேட்டதால், சத்தமில்லாமல் சன்னல் பக்கம் நெருங்கி வீட்டின் உட்புறத்தை பார்த்தேன்.

மஹா, என் வயதை ஒத்த யாரோ ஒருவனிடம் பேசி கொண்டிருந்தாள்,
அவன் கிட்டதட்ட, அந்த கால வில்லன் நடிகர் சிபி ராஜ் சாயலில் இருந்தான். (எனக்கு வில்லன்?)

சிவா, எப்படா என்ன கல்யாணம் பண்ண போற, ஆபீஸ்ல அது விடற "லுக்கே" சரி இல்ல, அது என்ன ஒரு தலையா காதலிக்குதுன்னு நினைக்கிறேன், பயமா இருக்கு.

ஓ... இப்ப அதுங்க எல்லாம் இந்த அளவுக்கு முன்னேறி ஆச்சா, எல்லாம் நம்ம முன்னோருங்க செஞ்ச தப்பு, "சும்மா கிடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி" அப்படிங்கற
கதையா அதுங்களுக்கு, நம்மள மாதிரி "சிந்திக்கிற திறனையும், உணர்ச்சிகளயும்" கொடுத்து, இப்ப அதுங்க நம்மை விட தொழில் நுட்பத்துல முன்னேறி, நம்மளையே அடிமை ஆக்கி வச்சிருசிங்க பாரு என்ற பொழுதே....

நான், என் இதயம்(?) நொறுங்கி சத்தமில்லாமல் வெளியேறினேன், ம்... அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக பிறக்க வேண்டும்...

இன்றைய நாள் என் வாழ்வின் கருப்பு தினம், ஆமா இன்னைக்கு
தேதி என்ன,













நான் நினைத்த விநாடியில் என் டிஜிட்டல் விழிப்படலம்
காட்டியது:14.02.2056

**************************************************************


அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

42 comments:

புலவன் புலிகேசி said...

சுவாரஸ்யம்..

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி புலவரே :))

Paleo God said...

அட!

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..:))

ஸ்ரீராம். said...

அட!

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..:)


ஷங்கர்,
அவர்தான் அசம்பாவிதங்கள் நடத்தாத நல்லவர்னு சொல்லியிருக்கார் இல்லே...அதனால ரூம் போட்டுருக்க மாட்டார்.

நல்லா இருக்குங்க கதை..

VISA said...

அடடே இது ரொம்ப நல்லா இருக்கேன்னு என் மனசு சொல்லுது ....ரொம்ப நேர்த்தியா எழுதியிருக்கீங்க...

சைவகொத்துப்பரோட்டா said...

//அட!

ரூம் போட்டு யோசிப்பீங்களோ..:))//

அத்தி பூத்த மாதிரி தோணுறத அப்படியே எலி வழியா கணினிக்குள்ள அனுப்புறது ஷங்கர்.

ஹையோ...ஹையோ... :))

சைவகொத்துப்பரோட்டா said...

//அவர்தான் அசம்பாவிதங்கள் நடத்தாத நல்லவர்னு சொல்லியிருக்கார் இல்லே...அதனால ரூம் போட்டுருக்க மாட்டார்.

நல்லா இருக்குங்க கதை..//

ஸ்ரீராம் அண்ணா, "நான் அவன் இல்லை"(ச்சு..ம்மா...), நன்றி.

சைவகொத்துப்பரோட்டா said...

//அடடே இது ரொம்ப நல்லா இருக்கேன்னு என் மனசு சொல்லுது ....ரொம்ப நேர்த்தியா எழுதியிருக்கீங்க...//

அப்படியா, மகிழ்ச்சி விசா, பாராட்டுக்கு நன்றி.

Muruganandan M.K. said...

நல்ல சஸ்பன்ஸ். சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

மதுரை சரவணன் said...

iththuvum nallaa irukke. super. niraya sinthikiringka.

DREAMER said...

நல்லா இருக்கு...

//அந்த கால வில்லன் நடிகர் சிபி ராஜ் சாயலில்//
இந்த இடம் கதை படித்து முடித்த பிறகு யோசித்து பார்க்க, மிக அருமை...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப சூப்பரா இருக்கு சார்

அருமையான கதை , நெஞ்சைத் தொட்டுட்டீங்க ரொம்ப நல்லாருக்கு ..

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்ல சஸ்பன்ஸ். சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

நன்றி, டாக்டர்.

சைவகொத்துப்பரோட்டா said...

//iththuvum nallaa irukke. super. niraya sinthikiringka.//

நன்றி சரவணன்.

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லா இருக்கு...

//அந்த கால வில்லன் நடிகர் சிபி ராஜ் சாயலில்//
இந்த இடம் கதை படித்து முடித்த பிறகு யோசித்து பார்க்க, மிக அருமை...//

நன்றி DREAMER (அடிக்கடி கனவுகள் வருமோ :) )

சைவகொத்துப்பரோட்டா said...

//ரொம்ப சூப்பரா இருக்கு சார்

அருமையான கதை , நெஞ்சைத் தொட்டுட்டீங்க ரொம்ப நல்லாருக்கு//

அப்படியா, மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்,
நண்பர் ஸ்டார்ஜன்.

DR said...

அடடே, இது நல்லா இருக்கே...

ஜீவன்சிவம் said...

அற்புதமான கற்பனை

Thenammai Lakshmanan said...

ரோபோவின் காதல் அருமை சைவக்கொத்துப்ப்ரோட்டா

கலகலப்ரியா said...

=))... superb..

Raghu said...

ந‌ல்லாயிருக்கு பாஸ், ஒரு ப‌க்க‌ க‌தையா வெளியிட‌ற‌துக்கு, ப‌த்திரிக்கைக்கு அனுப்ப‌லாமே:)

சைவகொத்துப்பரோட்டா said...

//அடடே, இது நல்லா இருக்கே...//

நன்றி தினேஷ்.

சைவகொத்துப்பரோட்டா said...

//அற்புதமான கற்பனை//

மிக்க மகிழ்ச்சி, ஜீவன்சிவம்.

சைவகொத்துப்பரோட்டா said...

//ரோபோவின் காதல் அருமை சைவக்கொத்துப்ப்ரோட்டா//

அப்படியா, நன்றி தேனம்மை தங்களின் தொடர் கருத்துகளுக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

//.=))... superb..//


மிக்க நன்றி ப்ரியாக்கா :))

சைவகொத்துப்பரோட்டா said...

//ந‌ல்லாயிருக்கு பாஸ், ஒரு ப‌க்க‌ க‌தையா வெளியிட‌ற‌துக்கு, ப‌த்திரிக்கைக்கு அனுப்ப‌லாமே:)//

மிக்க நன்றி ரகு, ஆலோசனைக்கும், கருத்துக்கும்.

அன்புடன் மலிக்கா said...

அடடடா இப்படியெல்லாம் யோசிப்பீங்கள் ,ம்ம்ம்ம் யோசிங்க யோசிங்க நல்லாத்தான் யோசிக்கிறீங்க அத்திப்பூ பூத்தாலும் அழகாய் பூத்திருக்கு..

ஆதி மனிதன் said...

2056 இல் கூட வெளியில் சொல்லாத (ஒரு தலை) காதல் இருக்குமா என்ன? அப்ப நானெல்லாம் அப்பாவி இல்ல. நா சொல்லாம விட்டது 1980s - ல.

சைவகொத்துப்பரோட்டா said...

//அடடடா இப்படியெல்லாம் யோசிப்பீங்கள் ,ம்ம்ம்ம் யோசிங்க யோசிங்க நல்லாத்தான் யோசிக்கிறீங்க அத்திப்பூ பூத்தாலும் அழகாய் பூத்திருக்கு..//

மிக்க நன்றி மலிக்கா.

சைவகொத்துப்பரோட்டா said...

//2056 இல் கூட வெளியில் சொல்லாத (ஒரு தலை) காதல் இருக்குமா என்ன? அப்ப நானெல்லாம் அப்பாவி இல்ல. நா சொல்லாம விட்டது 1980s - ல.//

வாங்க ஆதிமனிதன், அவர் ரொம்ப நல்லவரு, நீங்க ரொம்ப ரொம்ப நல்லவர் :))
ஆனா பாருங்க 2056, உங்களை 1980-க்கு அழைத்து சென்று விட்டது, நன்றி.

குரு said...

எந்திரன் பட கதைய release பண்ணிடிங்க..... சூதானமா இருங்க

சைவகொத்துப்பரோட்டா said...

//எந்திரன் பட கதைய release பண்ணிடிங்க..... சூதானமா இருங்க//

வாங்க குரு (ஏன் இந்த நீண்ட இடைவெளி) "அந்த காலத்துல" (2010-ம் வருஷம்) ரஜினி நடிப்பில் வெளி
வந்துச்சே அந்த படமா....... :))

Unknown said...

நல்லா இருக்குங்க.., வாழ்த்துக்கள்..,

பா.ராஜாராம் said...

:-))

சைவகொத்துப்பரோட்டா said...

//நல்லா இருக்குங்க.., வாழ்த்துக்கள்..,//

நன்றி நேபா மூடி வருகைக்கும், கருத்துக்கும். (திறந்து பார்த்துட்டேன்)

சைவகொத்துப்பரோட்டா said...

// :-)) //

அப்படியா, மிக்க மகிழ்ச்சி பா.ரா.

cheena (சீனா) said...

அன்பின் சைகொப

தேனு சொன்னத வழி மொழிகிறேன்

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா

சைவகொத்துப்பரோட்டா said...

// cheena (சீனா) said...
அன்பின் சைகொப

தேனு சொன்னத வழி மொழிகிறேன்

நல்வாழ்த்துகள் சைகொப
நட்புடன் சீனா//

நன்றி அய்யா.

ஹுஸைனம்மா said...

அட, நீங்க ’எந்திரன்’ ஷங்கர் மேலே காப்பிரைட் கேஸ் போடலாமே!! ;-)))

சைவகொத்துப்பரோட்டா said...

@ஹுஸைனம்மா
நல்லா கிளப்புறீங்களே! :))
(சங்கர் மாதிரியே நம்ம சிந்தனை ஓடி இருக்கு :)) )
நன்றி ஹுஸைனம்மா.

தாராபுரத்தான் said...

கதையல்ல..கவனமாக படித்தால் தமிழகத்தின் கதையேயில்ல இருக்கு..

சைவகொத்துப்பரோட்டா said...

@தாராபுரத்தான்
ஹி...ஹி...நன்றி அய்யா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)