Friday, February 5, 2010

வெங்காயம் ஓர் அ(ல)சல்.

நண்பர்களிடையே சூடான விவாதங்கள் நடக்கும்போது ஒருவன் இன்னொருத்தனை பார்த்து
போடா வெங்காயம் அப்படின்னு சொன்னான் (உன்னை பார்த்துதானே, அப்படின்னு கேட்காதீங்க!).

எவ்வளுவு சுளுவா திட்டி புடுராங்கையா. வெங்காயத்தில எம்பூட்டு மகத்துவம் இருக்குன்னு தெரியாமா. (அது சரி அவர் திட்டுனது வெங்காயத்தை இல்லையே!!)

சில நேரங்களில் நமக்கு வாந்தி வருவது போல் இருக்கும், ஆனா வராது....
ஒரே அவஸ்தையாய் இருக்கும். இந்த மாதிரி நேரத்துல சின்ன வெங்காயத்தை (மறக்காது தோல
உறிச்சி) சாப்பிடுங்க, சாப்பிட பிடிக்கலையா அத வாசனை பிடிங்க. அப்புறம் பாருங்க அந்த பீலிங் போயே போயிரும், அட வாந்தி பீலிங்க சொன்னேன்.




சில பேர் இரவுல தானும் தூங்காம அடுத்தவங்களையும் தூங்க விடாம "லொக்கு லொக்குன்னு"
இருமிக்கிட்டு இருப்பாங்க. உங்களுக்கும் இப்படி இருமல் இருக்கா, எடுங்க வெங்காயத்தை, வதக்குங்க, சாப்பிடுங்க, அட இருமல் போயே போகும். (போச்சான்னு சொல்லணும் பின்னூடத்துல)

சிலர் பேச வாயை திறந்தாலே ஜவ்வாதும், சந்தனமும் கலந்த ஒரு வாசனை(!!) அடிக்கும். அது நம்மள புலி மாதிரி இரண்டு அடி பின் வாங்க வைக்கும். இதற்கு பல காரணங்கள் (பல் விளக்கமா இருக்குறதும் ஒரு காரணந்தேன்) இருந்தாலும் வாய்ப்புண்ணும் ஒரு காரணமே.

அப்படி வாய்ப்புண் இருந்தால், வெங்காயத்தை பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கி
சாதத்துடன் கலந்து காலை வேளைகளில் சாப்பிட்டு பாருங்க. இந்த "ஆளை விரட்டும் வாசனை" பிரச்சனை தீரும்.

"தேள் கடி" பட்டுவிட்டால், வெங்காயத்தை இரண்டு துண்டா நறுக்கி, கடி பட்ட இடத்துல, விஷம் இறங்கும் வரை தேய்ச்சா வலி குறையும். (இத ஒரு முதல் உதவியா மட்டும் பயன் படுத்துங்க)

இப்ப எங்க போனாலும் சுலபமா, இலவச இணைப்பா ஏகப்பட்ட தொற்று நோய்கள் பரவுது. அந்த மாதிரி இடங்களுக்கு போக நேர்ந்தால் உங்களோட இரண்டு அல்லது மூன்று
வெங்காயத்தையும் எடுத்திட்டு போங்க, ஓரளவுக்கு தொற்று நோய்
நமக்கு வராம இது பாதுகாக்கும்.
(கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி)

டிஸ்கி:மேலே சொல்லப்பட்ட அந்தனையும் நான் படித்து தெரிந்து கொண்ட விசயங்கள் மட்டுமே.



*************************************************************************




அடடே, இது நல்லா இருக்கே அப்படின்னு உங்க மனசு சொன்னா ஓட்டு போட்டுட்டு போங்க. நீங்க
பெற்ற இன்பத்த(!!) எல்லோரும் பெறட்டும். (தமிழ்மணத்திலும் போடலாம்)
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

20 comments:

எறும்பு said...

//வெங்காயத்தை பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கி
சாதத்துடன் கலந்து காலை வேளைகளில் சாப்பிட்டு பாருங்க. இந்த "ஆளை விரட்டும் வாசனை" பிரச்சனை தீரும்.//

அதென்னமோ உண்மைதான்.. நாம யாரையும் விரட்ட வேண்டாம்.. அந்த வாசனைல ஒரு பய கிட்டக்க வரமாட்டான்.
:)

அண்ணாமலையான் said...

ரைட்டு

சைவகொத்துப்பரோட்டா said...

//நாம யாரையும் விரட்ட வேண்டாம்.. அந்த வாசனைல ஒரு பய கிட்டக்க வரமாட்டான்.
:)//

எறும்பு சார், சரியான குறும்பு :))
நன்றி உங்கள் கருத்துக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

தங்கள் வரவு நல்வரவாகுக அண்ணாமலையாரே. (உங்களின் அடுத்த இடுகை எப்போ வரும்)

கிச்சான் said...

தோழர்
சைவகொத்துப்பரோட்டா அவர்களே !
உங்களோட இந்த பதிவு ரொம்ப அருமை
அதை விட சொல்லி இருக்கிற மொழி நடை
அருமை

Thenammai Lakshmanan said...

இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா நன்றி சைவக் கொத்துப்பரோட்டா

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி கிச்சான் அவர்களே :))

சைவகொத்துப்பரோட்டா said...

நன்றி தேனம்மை தங்களின் தொடர் வருகைக்கும், கருத்துக்கும்.

Paleo God said...

படிச்சி மட்டும் சொல்லாம செஞ்சி பார்த்துட்டும் சொல்லிடுங்க..:))

settaikkaran said...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை-மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியா ரே

இந்தப் பாட்டையும் போட்டிருந்தீங்கன்னா, உங்களுக்கு வெங்காயவேந்தர்னு பட்டமே கிடைச்சிருக்கும். கோட்டை விட்டுட்டீங்களே அண்ணே!

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட் ஷங்கர், ஆமா அதுக்காக தேள் கிட்ட கடி எல்லாம் வாங்கணுமே.... எஸ்கேப்....:))

சைவகொத்துப்பரோட்டா said...

ஒரே ஒரு பாட்டால, பட்டமே போச்சா.... பேருக்கேத்த (ரசிக்கும்படியான) சேட்டைதான் :))

ஸ்ரீராம். said...

"அப்புறம் பாருங்க அந்த பீலிங் போயே போயிரும், அட வாந்தி பீலிங்க சொன்னேன்"

வேற ஃபீலிங்குக்கும் இது நல்லதுன்னுதான் விரத நாட்களில் இதைத் தவிர்த்து விடுவார்களாமே..

சைவகொத்துப்பரோட்டா said...

//வேற ஃபீலிங்குக்கும் இது நல்லதுன்னுதான் விரத நாட்களில் இதைத் தவிர்த்து விடுவார்களாமே..//

வாங்கண்ணா, உணவுபண்டங்கள் அனைத்தையும் தவிர்த்தல்தானே விரதம். ஆனாலும் உங்க
பின்னூட்டம் படிச்ச உடனே சிரிப்பு வந்திருச்சி :))

புலவன் புலிகேசி said...

பாட்டி வைத்தியம் சூப்பரு..

சைவகொத்துப்பரோட்டா said...

அப்படியா, இனிமேல் வெங்காயம் சாப்பிடுங்கள் நண்பா.

lolly999 said...

புண் பட்ட இதயத்தை உங்கள் பதிவுகள் மூலம் ஆற்றிக்கொள்கிறோம் மிக நன்றாக உள்ளது

சைவகொத்துப்பரோட்டா said...

// lolly999 said...
புண் பட்ட இதயத்தை உங்கள் பதிவுகள் மூலம் ஆற்றிக்கொள்கிறோம் மிக நன்றாக உள்ளது//


அப்படியா, மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

r.v.saravanan said...

வெங்காயம் இருந்தால் நோயே மாயம்

கரெக்டா

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
வெங்காயம் இருந்தால் நோயே மாயம்

கரெக்டா//


அத்தேதான்!!!
நன்றி சரவணன்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)