Monday, November 16, 2009

தமிழ் திரை படம்

சமீபத்தில் வந்த படத்தில் இது என்னை கவர்ந்த ஒன்று, காமெராவை பார்த்து ஹீரோ வீர வசனம் பேசும் காட்சி இல்லை, நாயகி துகில் உரிக்க வில்லை, வில்லன் டேய், டோய், என கத்த வில்லை, (என்னதான் இருக்கு...)





படிக்காத கூட்டத்தில் இருந்து ஒருவன் படித்து வந்தால் அவனை இறுமாப்பும், தன்னை விட ஒரு (பல) படி குறைவாகும் மதிக்கும் ஒரு கூட்டம் அவனை எப்படி பார்க்கிறது என்பதை இயக்குனர் மனதை தொடும் விதம் கூறி இருக்கும் பாணி அருமை, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வர்க்கம், "இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசும் நீங்கள் ஏன் ஆங்கிலம் பேச வில்லை என கேட்கும் பொழுது, "நான் என் மக்கிளடம் பேசினால் அவர்களுக்கு புரியாது, உங்களிடம் பேசினால் உங்களுக்கு பிடிக்காது" போன்ற வனசங்கள் யதார்த்தம்.





அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நபர்களை, பொன் வண்ணன் கேரக்டர் மூலமாக சாடி உள்ள பாணி அருமை.





சில காட்சிகளில் வந்தாலும், பொன் வண்ணனிடம் ஆக்ரோசமாக (கையால் நடக்கும்) மோதும் நபரின் பாத்திர படைப்பு அழகு.





சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் பார்க்க வேண்டிய படம் "பேராண்மை", நேரம் கிடைத்தால் பாருங்கள்.





இயக்குனர் ஜன நாதனுக்கு இந்த வேளையில் நன்றி, அனைவரும் ரசிக்கும்படி நல்ல படம் கொடுத்தமைக்கு.













No comments:

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)