Monday, October 25, 2010

எக்ஸின் அழைப்பு 7

என்ன ஆச்சு விஷ்வா, எடேன் போனை...ம்...ஹூம்...ரிங் போய் கொண்டே இருந்தது. ஆனால் அவனோ லைனை கட் செய்து கொண்டே இருந்தான்.

ச்சே...என்ன காதலன் இவன், நான் கால் செய்கிறேன் மடையன் கட்
பண்ணிகிட்டே இருக்கான்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து விஷ்வா கால் செய்தான்,
எனக்கோ கோபமாய் வந்தது.

வெறுப்புடன் ஹலோ என்றேன். சாரி ஜோ ஒரு முக்கியமான வேலையாய் இருந்தேன் அதான் நீ கால் பண்ணும்போது கட் செய்தேன்...

என்னை விட அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு, நான் எவளோ சந்தோசமான விசயம் சொல்ல நினைத்தேன் தெரியுமா.

சாரி ஜோ, நாம எப்பவும் மீட் பண்ற இடத்துக்கு நாளைக்கு வாயேன், எல்லாத்தையும் விவரமா சொல்றேன், சரி ஏதோ சந்தோசமான விசயம் சொல்றேன்னியே என்ன அது.

ரொம்பதான் ஆசை, நாளை வரை நான் விடுமுறையில்தான் இருக்கேன். அதற்கடுத்த நாள் நேர்ல வரேன் அப்போ சொல்றேன் என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.

ஆவலாய் விஷ்வாவை பார்க்க புறப்பட்டேன், எனக்கு முன்பே அவன் வந்திருந்தான்.

ஹே...விச்சு, அப்படி என்ன முக்கியமான வேலை உனக்கு.

சொல்றேன் ஜோ எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்ட் ஒருத்தன் கொஞ்சம் ஜாலியான பேர்வழி.....

அனைத்தையும் ஜோவிடம் சொல்லி முடிக்க அவள் என்னை சற்றே
ஏளனமாக பார்ப்பது போல் இருந்தது.

இப்படிப்பட்ட ஒரு ஆள்கிட்ட போய் ஏன் சகவாசம் வச்சுக்கிற விஷ்வா.

இல்ல ஜோ நீ நினைக்கிற மாதிரி அவன் மோசமான கேரக்டர் இல்ல,
கொஞ்சம் ஜாலியான பேர்வழி...

அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசறியே விஷ்வா...இதோட இந்த பேச்சையும் அவன் சகவாசத்தையும் நிறுத்திக்கோ. நான் சொல்ல வந்தது நம்ம கல்யாணத்தைபத்தி. எங்க அப்பாகிட்ட நம்ம காதல் விசயத்தை சொல்லிட்டேன், அவர் சம்மதம் சொல்லிட்டார்.
உங்க வீட்டுல நீ சொல்லியாச்சா.

இன்னும் சொல்லல ஜோ, எனக்கு சில கடமைகள் இருக்கு அத முடிச்ச அப்புறமா நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமே...

Picture Thanks:visualparadox.com

என்ன இப்படி இழுக்குற, அப்போ உனக்கு என்னை பிடிக்கலையா, இல்லை உன் பிரெண்ட் மாதிரி பழகிட்டு கழட்டி விட்ரலாம்ன்னு பிளான் பண்ணிருக்கியா.

அய்யோ ஜோ, ஏன் இப்படி எல்லாம் பேசுற...நான் அப்படிப்பட்டவன் இல்ல, நான் உன்னை நிஜமாவே விரும்புறேன். ஆனா என் சூழ்நிலை
இப்போ கல்யாணம் பண்ணிக்க முடியாது.

அப்படி என்ன பெரிய சூழ்நிலை, இது காதலிக்கிறதுக்கு முன்னாடி உனக்கு தெரியாதா? உன் வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போயேன். நானும் அவங்களை எல்லாம் பாத்து பேசி பழக வசதியா இருக்கும்.

தடாலடியா போய் நின்னா எப்படி ஜோ, அவங்க உன்னை பத்தி தவறா ஏதாவது நினைச்சிட்டா அல்லது பேசிட்டா
என்னால தாங்க முடியாது.

அவ்ளோ அன்பு இருக்கிற ஆள், என்னை உன்னோட பிரென்ட்ன்னு சொல்லி அறிமுகப்படுத்தி வை, மிச்சத்தை நான் பாத்துக்கிறேன்.

நான் தொடர்ந்து வற்புறுத்தவே, வேறு வழி இல்லாது விஷ்வா என்னை அவர்கள் வீட்டாரிடம் அறிமுகப்படுத்துவதாக ஒப்புக்கொண்டான்.

அவன் வீட்டிற்கு போய் வந்தபின் அப்பாவிடம் விவரங்களை கூறினேன்.

சரிம்மா, இனி ஆக வேண்டியதை நான் பாத்துக்குறேன். அவனைபற்றிய தகவல்கள் அத்தனையும் தீர விசாரிச்சிட்டு அப்புறம் என்னோட முடிவ சொல்றேன். அதுவரைக்கும் நீ தேவை இல்லாம எந்த கனவையும் வளத்துக்காதே,
புரிஞ்சு நடந்துக்கோ ஜோதி. பெஸ்ட் ஆப் லக் என அப்பா சொல்ல, அவர் விசாரித்தபின் எடுக்கப்போகும் முடிவினை ஆவலுடன்
எதிர்பார்த்து நாட்களை கடத்தினேன். இடையே இரண்டு முறை விஷ்வாவை சந்திக்கவும் செய்தேன், ஆனால் அப்பா அவனை "விசாரிப்பதை" மட்டும் அவனிடம் சொல்லவில்லை.

இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் அப்பவே என்னை பார்க்க வந்திருந்தார்.
வழக்கமான குசலம் விசாரிப்பகளுக்குப்பின் அப்பா சொல்லப்போகும்
விசயத்தை ஆவலுடன் கேட்க தயாராய் இருந்தேன். அவரோ விஷ்வாவைதவிர அணைத்து விசயங்கள் பற்றியும் பேசிகொண்டிருந்தார். நானே கேட்டு விட்டேன், அப்பா விஷ்வா விசயம் என்ன ஆச்சு, என்றேன்.

அப்பா, ஆழமாக ஒருமுறை பார்த்துவிட்டு, சொல்ல ஆரம்பித்தார்.

அழைப்பு தொடரும் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

16 comments:

Anonymous said...

சூப்பரா போகுது பாஸ்!
வெய்டிங் :)

க ரா said...

இந்த பரோட்டாவும் நல்லா இருக்குங்க :)

RVS said...

ம்.. நல்லா இருக்கு அப்புறம்.. ;-)

எல் கே said...

adutha alaippiruku waiting

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்குங்க தல ..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அப்படி என்னங்க சொன்னார், ஜோதி அப்பா?? முக்கியமான இடத்துல சஸ்பென்ஸ்.. ஹ்ம்ம்ம்... :-)))

தமிழ் உதயம் said...

இராமசாமி கண்ணண் said...

இந்த பரோட்டாவும் நல்லா இருக்குங்க :)


வழிமொழிகிறேன்.

சசிகுமார் said...

அடுத்த பதிவிற்காக வெயிட்டிங் ரொம்ப காக்க வைக்காதிங்க நாளைக்கே போட்டுருங்க முடிந்தா இன்னைக்கு கூட போடுங்க ரொம்ப ஆல்வலா இருக்கு சைகொப

Thenammai Lakshmanan said...

நல்ல சஸ்பென்ஸாதான் போகுது சை கொ ப.. பாராட்டுக்கள்..

ஸ்ரீராம். said...

ம்....சொல்லுங்க...அப்புறம்...என்ன சொன்னார் அவர்?

சைவகொத்துப்பரோட்டா said...

@Balaji saravana
நன்றி பாலாஜி.

@இராமசாமி கண்ணண்
அப்போ இன்னொரு பார்சல் போட்டுறலாமா :)) நன்றி ராம்.

@RVS
என்ன ஆகுதுன்னு புதன்கிழமை பார்போம், நன்றி RVS.

@LK
நன்றி கார்த்திக்.

@புதிய மனிதா..
நன்றி பாஸ்.

@Ananthi
புதனன்று பார்ப்போம், நன்றி ஆனந்தி.

@தமிழ் உதயம்
சாருக்கும் பார்சல் ஒன்னு, நன்றி நண்பரே.

@சசிகுமார்
ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி சசி,
அடுத்த பார்ட் புதன் கிழமை.

@தேனம்மை லெக்ஷ்மணன்
பாராட்டுக்கு நன்றி அக்கா.

@ஸ்ரீராம்.
புதனன்று சொல்லி விடுகிறேன் அண்ணா.

Unknown said...

சீக்கிரம்... சீக்கிரம் ..

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
வாக்களித்து விட்டேன் சசி, நன்றி.

@கே.ஆர்.பி.செந்தில்
நாளை (புதன் கிழமை) அடுத்த பார்ட், நன்றி பாஸ்.

Unknown said...

சற்று தாமதம்
காரணம் உங்கள் ப்ளாக் ஓபன் ஆகவே ரொம்ப நேரம் எடுக்குது.

ம் ரொம்ப ரொம்ப எதிர்ப்பர்போடு..

சைவகொத்துப்பரோட்டா said...

@siva
பக்கம் திறக்க தாமதமாகிறதா, தகவலுக்கு நன்றி சிவா. ஏன் என்று பார்க்கிறேன், தொடரை தொடர்வதற்கு நன்றி.

அதிரை என்.ஷஃபாத் said...

sooperu :)

www.aaraamnilam.blogspot.com

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)