தங்கையிடம் பேசிவிட்டு விரைவாக வீட்டை அடைந்தால், கதவில் பூட்டு தொங்கியது. பக்கத்துக்கு வீட்டு அம்மா வந்து சாவி கொடுத்துவிட்டு அம்மாவை அழைத்து கொண்டு என் தங்கை J.K.ஹாஸ்பிட்டல் சென்று விட்டதாக கூறினார்கள்.
என்ன ஆச்சும்மா, எங்கம்மாவுக்கு.
திடீர்ன்னு மயக்கம் வந்து விழுந்திடாங்கப்பா, என் கணவரும் துணைக்கு போயிருக்கார். பதட்டப்படாம போயிட்டு வாப்பா.
விரைவாக J.K. சென்றேன், தங்கையை பார்த்து என்ன ஆச்சு என்றேன். பயப்பட வேண்டாம், அம்மாவுக்கு லோ பிரஷர் அதோட இன்னைக்கி விரதம் இருக்கிறேன்னு
ஒண்ணுமே சாப்பிடல அதனால மயக்கம்ன்னா. அம்மாவை பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. பக்கத்துக்கு வீட்டு அங்கிளுக்கு நன்றி சொன்னேன். அண்ணா உனக்கு என் பிரெண்ட் ரேவதி தெரியும்தானே என புதிர் போட்டாள் தங்கை.
ஆமா தெரியுமே அவளுக்கென்ன என்ற போது,
அருண் அம்மாவுக்கு
என்ன ஆச்சு என்றபடியே விஷ்வா வந்தான்.
ஒன்னும் இல்லைடா, இப்போ நார்மலாதான் இருக்காங்க. ஆமா
உனக்கு எப்படி விசயம் தெரியும்.
இல்ல, கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ வேற கோபமா போன மாதிரி இருந்திச்சு, அதான் உன்ன பாத்து சமாதானமா பேசலாம்ன்னு உன் வீட்டுக்கு போனேன்,
பக்கத்து வீட்டம்மா சொன்னங்க அதான் உடனே வந்தேன் என்றான்.
சொல்லும்மா ரேவதிக்கு என்ன ஆச்சு என்றேன், அவள ஒரு கார்காரன் இடிச்சிட்டு நிக்காம போயிட்டான், அங்கே இருந்த யாரோ ஒருத்தங்க அவள சரியான நேரத்துக்கு இங்க கொண்டு வந்ததால உயிரை காப்பாத்த முடிஞ்சது.
அப்படியா! நீ போய் அவள பாத்தியா.
இல்லைன்னா இப்போ மயக்கத்துல இருக்கா, சாயந்திரம்தான் பாக்க முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டார்.
அதன்பின் விஷ்வா, அம்மாவை பார்த்துவிட்டு கிளம்பிவிட்டான்.
நாங்கள் இருந்து ரேவதியை பார்த்துவிட்டு மாலையில் வீடு திரும்பினோம்.
இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நட்சத்திரங்களை என்ன ஆரம்பித்த பொழுது தங்கை வந்து என் கணக்கை கலைத்தாள். அண்ணா ரேவதியை கொண்டு வந்து ஹாஸ்பிட்டல்ல சேர்த்தது ஒரு பெண்தான் தெரியுமா! அந்த நேரம் ரோட்ல போன யாருமே அவளுக்கு உதவ முன்வராத
போது அந்த பெண்தான் தைரியமா செயல்பட்டிருக்கா!
ரொம்ப புத்திசாலியா இருப்பா போலிருக்கு என்றவாறே, எழுந்தேன்.
சரிமா நீ போய் அம்மாவுக்கு தேவையான மாத்திரையை கொடுத்திட்டு
தூங்கு என தங்கையை அனுப்பிவிட்டு நானும் படுக்கையில் விழுந்தேன், தூக்கம்தான் வர மாட்டேன் என அடம் பிடித்தது.
காலையில் அலாரம் சத்தம் கேட்டு விழிக்கையில் கண்ணெல்லாம்
ஒரே எரிச்சல், இன்னைக்கி வேலைக்கு போலாமா வேண்டாமா என
மனசு பெண்டுலமாய் ஆட, தொலைபேசி அழைத்தது. இந்த காலை வேளையில் யாராக இருக்கும். அட விஷ்வா!
ஹலோ விஷ்வா சொல்லுப்பா, என்ன விசயம்.
அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்கு அருண்.
சுகமா இருக்காங்க விஷ்வா, பயப்படும்படி இன்னும் இல்லை, ரொம்ப
நன்றி நீ இவ்ளோ அக்கறையா விசாரிக்கறதுக்கு.
நன்றி எல்லாம் சொல்லி என்னை அன்னியப்படுத்தாதே அருண்.
இன்னைக்கி ஈவினிங் முடிஞ்சா என்னோட கடைப்பக்கம் வாயேன்,
முக்கியமான விசயம் ஒன்னு உன்கிட்ட சொல்லணும்.
சரி வரேன் விஷ்வா என்றுவிட்டு வேலைக்கு போகலாம் என்ற
முடிவோடு குளியலறை நோக்கி நகர்ந்தேன்.
கடந்து விட்டது இரண்டு நாட்கள், நான் சொன்ன நேரத்தில் விஷ்வாவை பார்க்க முடியவில்லை. அவன் தொலைபேசிக்கு அழைத்தால் அவன் அட்டென்ட் செய்யவில்லை.
அவன் கடையும் பூட்டி இருந்தது. பக்கத்துக்கு கடைகளில் விசாரித்தேன், அவர்களும் தெரியாது என கை விரித்தார்கள். என்ன ஆச்சு இவனுக்கு, போனிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
அழைப்பு தொடரும் Picture Thanks:123 vectors.com அழைப்பு 7
20 comments:
ஓரளவு புரியுது.. இரண்டு பாதையில் பயணித்த கதை இனி ஒரே பாதையில்
75 பதிவுக்கு மேல போட்டாச்சு... இன்னும் என்ன பதிவுலக குழந்தை... பேர மாத்துங்க நண்பா...
என்ன ஆச்சு விஷ்வாக்கு?
தொடரும் போட்டுட்டீங்களே பாஸ் :)
Very nice. :-)
nice thala keep rockz...
நாவலாக வெளியிடலாம் நண்பா. அந்த அளவிற்கு கதையில் சஸ்பென்ஸ்
என்ன ஆச்சு விஷ்வாவுக்கு? ;-)
அழைப்பு 7ழை ஆவலுடன் எதிர்பார்த்து.
@LK
அதேதான்! நன்றி கார்த்திக்.
@philosophy prabhakaran
அப்படியா! எண்ணிக்கை முக்கியமல்ல நண்பா, கருத்துக்கு நன்றி பிரபாகர்.
@Balaji saravana
அடுத்த பார்ட்டில் பாப்போம், நன்றி பாலாஜி.
@Chitra
"தொடர்" கருத்துக்களுக்கு நன்றி சித்ரா.
@புதிய மனிதா.
பாராட்டுக்கு நன்றி நண்பரே.
@சசிகுமார்
தொடர்ந்து கருத்துரை இடும் சசிக்கும் நன்றி.
@RVS
வாங்க, பார்க்கலாம்! நன்றி RVS.
@தமிழ் உதயம்
நன்றி நண்பரே.
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் நகர்கிறது உங்களின் அழைப்புத் தொடர் இதில் முந்தையப் பதிவுகளை இன்னும் நான் வாசிக்கவில்லை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன் . பகிர்வுக்கு நன்றி
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
ஊக்கத்திற்கு நன்றி சங்கர்.
//75 பதிவுக்கு மேல போட்டாச்சு... இன்னும் என்ன பதிவுலக குழந்தை... பேர மாத்துங்க நண்பா... //
அதானே???
நல்லாத்தான் ஸ்டார்ட் ஆகுது...கடசில தங்கமணியக்கா மாதிரி இழுத்து விட்டுடாதீங்க :)
@அன்னு
கருத்துக்கு நன்றி அன்னு.
அடுத்த அழைப்பை எதிர் பார்த்து
@r.v.saravanan
நன்றி சரவணன்.
சற்று தாமதம்
ஆகா இப்போதுதான் கதை சூடு பிடித்து உள்ளது
அடுத்த பதிவை விரைவில் போடவும் ....
சுவராஸ்யம் நண்பரே..தொடருங்கள்..
//75 பதிவுக்கு மேல போட்டாச்சு... இன்னும் என்ன பதிவுலக குழந்தை... பேர மாத்துங்க நண்பா//
அவர் 100வது பதிவில் மாற்றுவார் போல
. ம்ம்ம் கதை நல்ல போகுது...
@siva
அடுத்த பார்ட் திங்கள், நன்றி சிவா.
@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.
@Jaleela Kamal
கின்டர் கார்டன் சேர்ந்தவுடன் "k .g குழந்தை" என மாற்றி விடுகிறேன் :))
நன்றி அக்கா.
தொடர்!! அசத்துங்க!!
Post a Comment