Monday, October 18, 2010

எக்ஸின் அழைப்பு 5


அவனைப்பார்த்தவுடனே எனக்கு பற்றி கொண்டு வந்தது, வா சுதா
மனிதாபிமானே துளி கூட இல்லாதவங்க கூட நான் பேச விரும்பல.

ஏய்...ஜோதி என்னடி ஆச்சு இவர உனக்கு முன்னமே தெரியுமா.

நான் சொல்றேன் சுதா, நான்தான் விஷ்வா போன வாரம் சாலை விபத்து ஒன்னு நடந்த சமயம் நான் அந்தப்பக்கம் எங்க நிறுவனத்தின் வாகனத்துல போய் கிட்டு இருந்தேன். அப்போ உங்க பிரெண்ட் ஜோதி அடிபட்ட நபர
ஹாஸ்பிட்டல் கொண்டு போறதுக்காக என்கிட்டே உதவி கேட்டாங்க.

போலிஸ் கேஸ் போடுவாங்க விசாரணை கோர்ட்டுன்னு அலைய வேண்டி வருமே, அதோட எங்க நிறுவனமும் என் மீது
ஆக்சன் எடுக்கும் என்ற பயத்தில் முடியாது என சொல்லிவிட்டு அந்த
இடத்தை விட்டு சென்று விட்டேன். ஆனா மனசு கேட்கல 108 போன்
பண்ணிட்டு அதோட அதை மறந்துவிட்டேன்.

ஆனா லேட்டாதான் தெரிய வந்தது அந்த விபத்துல அடிபட்டது
எனக்கு வேண்டப்பட்டவங்கன்னு. உங்க பிரண்ட்தான் விவேகமா
செயல்பட்டு அவங்க உயிரை காப்பாத்தி இருக்காங்க. அதான் அவங்களுக்கு
நேரில் நன்றி சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஹாஸ்பிட்டல்ல நிலைமையை எடுத்து சொல்லி ஜோதியோட நம்பர
வாங்கினேன், ஆனா ஜோதிகிட்ட நாந்தான்னு அறிமுகப்படுதிக்கிற
அளவுக்கு எனக்கு தைரியம் வரல. என் மேல எனக்கே வெறுப்பா
இருந்திச்சி.

அதுக்காக இப்படிதான் டார்ச்சர் பண்ணுவீங்களா சார் என வெடித்தாள் ஜோதி.

நான் செஞ்சது தப்புதான், தயவு செய்து என்ன மன்னிச்சிருங்க ஜோதி,
நீங்க மட்டும் அன்னைக்கி சரியான நேரத்துல உதவலைன்னா அவங்களை
காப்பாத்தி இருக்க முடியாது, உங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை சொல்ற அருகதை கூட எனக்கு இல்லன்னு நினைக்கிறேன்.

அவன் பேசப்பேச, என் இறுக்கம் சற்றே குறைந்தது. அதன்பின் அவன்
நிலை புரிந்து கொண்டேன். அடுத்தடுத்த நாட்களில் இயல்பாக எங்கள்
சந்திப்பு அமைந்ததா, அல்லது அவனே வேண்டும் என்றே உருவாக்கிய
சந்திப்பா என்று தெரியவில்லை அடிக்கடி சந்தித்து கொண்டோம்.

எங்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. ஆனால் இது வெறும் நட்பா இல்லை காதலா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவனுடன் பேசுவது எனக்கு பிடித்திருந்தது. அவன் என்ன நினைக்கிறான்
என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு விடை சொல்வது போல்
இன்றய சந்திப்பு நிகழ்ந்தது.

நானும், விஷ்வாவும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருந்தோம்,
ஓட்டிற்குள் இருந்து தலை நீட்டும் ஆமையாய் தன் காதலை
மெல்ல வெளிப்படுத்தினான் விஷ்வா.


Picture:Thanks fotoserach.com

இது சாத்தியமா விஷ்வா, என்றேன். உனக்கு என்னை பிடிசிருக்குதானே அப்புறம் என்ன பிரச்சினை என்றான்.
இல்ல எங்க வீட்டுல சம்மதம் வாங்கணுமே.

சரியான நேரத்துல உங்க வீட்டுல விசயத்தை சொல்லிவிடேன் என்றான்.

சுலபமாக சொல்லிவிட்டான், என் அப்பா கண்டிப்பானவர். அவர்
சாந்தமான மனநிலையில் இருக்கும்போது என் விசயத்தை அவரிடம் கூறினேன். என்ன வியப்பு தாம் தூம் என குதிக்க வில்லை பையன் எங்கே வேலை செய்றான், அட்ரஸ் குடு அவனைப்பற்றி விசாரிச்சிட்டு அப்புறம் இந்த காதல் வேணுமா
வேண்டாமான்னு சொல்றேன் என்றார்.

இல்லைப்பா அவர் ரொம்ப நல்ல...

இங்க பாரு ஜோதி, காதலிக்கும்போது எல்லோரும் நல்லவனாத்தான்
காட்டிக்குவான், அப்புறம்தான் சுயரூபங்களே வெளி வரும். நாமதான்
கவனமா இருக்கணும். பயப்படாத அவன் நல்ல குணமும், வேலையும் உள்ளவனா இருந்தா, எனக்கு எந்தவித ஆட்சேபனையும்
இல்லை என்று அப்பா சொன்னவுடன் எனக்கு உடல் எடை இழந்தது போல் இருந்தது.

யோசிக்கும்போதுதான் ஒரு விசயம் நினைவில் உறுத்தியது,
இத்தனை நாள் அவனோட பழகி இருக்கோம். அவனோட இருப்பிடத்தை பத்தியோ வேலை பற்றியோ ஒரு தடவ
கூட நாம கேட்டதில்லையே.
உடனே விஷ்வாவிற்கு போன் செய்தேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 6

28 comments:

Praveenkumar said...

இன்னும் அந்த X-ஐ கண்டுபிடிக்கலையா சார். ரொம்ப சுவராஸ்யமாக போகிறது. அடுத்து என்ன நடந்திருக்கும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கு..!! அடுத்த அழைப்புல சந்திக்கிறேன் சார்.

எல் கே said...

aavalai thoondugireergal

Anonymous said...

டாப் கியருல்ல போகப் போகுது போல.. நைஸ்!

//ஓட்டிற்குள் இருந்து தலை நீட்டும் ஆமையாய் //

எனக்கு உடல் எடை இழந்தது போல் இருந்தது.//

உருவகம் நல்லா இருக்கு பாஸ்!

//அவனோட இருப்பிடத்தை பத்தியோ வேலை பற்றியோ ஒரு தடவ
கூட நாம கேட்டதில்லையே.//

தப்பா எடுத்துக்க வேண்டாம், கொஞ்சம் இடிக்குற மாதிரி இருக்கே பாஸ்!
அடுத்த பதிவுக்கு வெய்டிங் :)

Chitra said...

சூப்பரா போகுதுங்க...

க ரா said...

நல்லா போகுது நண்பரே :)

Anisha Yunus said...

//இத்தனை நாள் அவனோட பழகி இருக்கோம். அவனோட இருப்பிடத்தை பத்தியோ வேலை பற்றியோ ஒரு தடவ
கூட நாம கேட்டதில்லையே.//

இந்த எடத்துலதேன் எல்லாரும் கோட்டை விடுறது...கதைல மட்டும் மாற்றியா வரும்...ஹி ஹி ஹி... நடத்துங்க... நடத்துங்க.. :)

பத்மா said...

hmm waiting for the next episode

ஸ்ரீ.கிருஷ்ணா said...

intresting thala...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

intresting thala...

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரவின்குமார்
வாங்க பிரவீன், கண்டிப்பாக வாருங்கள்,
சந்திப்போம்.

@LK
மகிழ்ச்சி கார்த்திக்.

@Balaji saravana
வாங்க பாலாஜி, தவறாக நினைக்கவில்லை மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களின் விமர்சனங்களே என் படைப்புகளை மெருகேற்ற உதவும்.

@Chitra
நன்றி சித்ரா.

@இராமசாமி கண்ணண்
வாங்க ராம், நன்றி.

@அன்னு
சரியா சொன்னீங்க! நன்றி அன்னு.

@பத்மா
நன்றி பத்மா.

@புதிய மனிதா..
நன்றி பாஸ்.

Unknown said...

naan appovey cholala neenga nalla kadhai eluthrenganu...

kalakrengana..bt romba days agauthu oru pathiuku adutha pathivukum...

nandri..entha paguthi enakku konjam emmatramey..tugnu..love-a cholidrangala????

konjam speed kurainthathu pola erukkuna...

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Myooou Cyber Solutions said...

உங்க கதையின் போக்கு நன்றாக உள்ளது.எப்ப இந்த கதைக்கான முடிவு வரும் என்று ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கின்றேன்.
http://www.mxstar.blogspot.com/

RVS said...

அன்பின் சை.கொ.ப.
ஒரு பாகத்திருக்கும் அடுத்த பாகத்திற்கும் இடைவெளி அதிகம் உள்ளது. ஃபாலோ பண்ண கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. ஆனா ஒரு தத்துவம் சொன்னீங்க பாருங்க... "காதலிக்கும் போது எல்லோரும் நல்லவனாகத்தான் இருப்பான்" அப்படின்னு.. பின்னீட்டீங்க.. போங்க.. ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காதீங்கன்னா.. ;-) ;-)

நாடோடி said...

தொட‌ர்க‌தை ந‌ல்லா போகுது சை.கொ.ப‌.. தொட‌ர்கிறேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

@siva
நிஜமாவே நல்லா இருக்கா :))
பணிச்சுமை காரணமாக உடனே அடுத்த பார்ட் எழுத முடிவதில்லை, இனி முயற்சிக்கிறேன் சிவா.
ஆமா உங்களுக்கு தமிழ்ல டைப் பண்ண உதவிக்கு நம்ம "தமிழ் ஆசான்" போஸ்ட்க்கு கீழே இருக்காரே, அடுத்த முறை
பயன்படுத்துங்க. நன்றி சிவா.

@Eeva
நன்றி ஈவா.

@AT.Max
நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.

@RVS
பணிச்சுமைதான் இடைவெளிக்கு காரணம், அடுத்த பார்ட் உடனே எழுத முயற்சிக்கிறேன் RVS. தத்துவமா அது...ரைட்டு :))

@நாடோடி
தொடர்வதற்கு நன்றி ஸ்டீபன்.

சசிகுமார் said...

ஆகா ஓரளவிற்கு தெளிவு வந்து விட்டது இந்த கதையில் நன்றி

ஸ்ரீராம். said...

ஊர் பேர் தெரியாமலேவா காதலிப்பார்கள்....அட கஷ்டமே....ரொம்ப இடைவெளி தராமல் அவ்வப்போது எழுதுங்கள்...

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
அப்படியா!! உங்களுக்குத்தான் நான்
நன்றி சொல்ல வேண்டும் நண்பா :))
நன்றி சசி.

@ஸ்ரீராம்.
காதலுக்கு கண் இல்லை அண்ணா :))
இடைவெளி குறைக்க முயற்சி செய்கிறேன், நன்றி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மொத்த அழைப்பும் படிச்சு முடிச்சிட்டேன்...
சூப்பரா எழுதுறீங்க.. அதெப்படிங்க.
அழகா ஒரே கோர்வையா எழுதுறீங்க...
நல்லா இருக்குங்க... பகிர்வுக்கு நன்றிங்க..

விஷ்வா போன் எடுத்தாரா...? என்ன சொன்னாரு?
சரி வெயிட் பண்றேன்.. அடுத்த பதிவிற்கு.. :-))

Thenammai Lakshmanan said...

அருமையா இருக்கு சை கொ ப..

அன்புடன் மலிக்கா said...

சுவாரஸ்மாக இருக்கு சை கொ பா.

அடுத்து எப்போது.. ஆவல்தான்..

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
உற்சாகமாய் இருக்கிறது, நன்றி ஆனந்தி.

@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி அக்கா.

@அன்புடன் மலிக்கா
வாங்க மலிக்கா அடுத்த பார்ட் நாளை, நன்றி.

thiyaa said...

அருமையா இருக்கு

Unknown said...

உங்க கதை நல்லா போயிட்டு இருக்குங்க..வாழ்த்துக்கள் !

r.v.saravanan said...

நல்லா இருக்கு

அடுத்து எப்போது சை கொ பா.

சைவகொத்துப்பரோட்டா said...

@தியாவின் பேனா
நன்றி தியா.

@ஜிஜி
பாராட்டுக்கு நன்றி ஜிஜி.

@r.v.saravanan
வாங்க சரவணன், அடுத்த பார்ட் நாளை, நன்றி.

Jaleela Kamal said...

அப்பா படிச்சாச்சு

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)