Tuesday, October 12, 2010

எக்ஸின் அழைப்பு 4


சரி அவன் பேசி முடிக்கட்டும், என காத்திருந்தேன்.

ஐந்து நிமிடம் கடந்த பின்,
வா அருண் போகலாம் என்றபோது விஷ்வாவின்
முகம் சற்றே வாடியது போல் இருந்தது.

என்ன விஷ்வா ஏதாவது பிரச்சனையா?

அதெல்லாம் ஒன்னும் இல்லை அருண், என்றவன் ஏதும் பேசாமலே
வண்டியை செலுத்தினான். வீட்டில் அம்மாவை சந்தித்து பேசி விட்டு கிளம்பினான்.

அடுத்த நாளும் விஷ்வாவை சந்தித்தேன். பேசி கொண்டிருக்கும்போதே
நிறைய தொலைபேசி அழைப்புகள் அவனுக்கு வந்த வண்ணமாகவே
இருந்தது.


picture:thanks freephoto.com

என்ன விஷ்வா, ரொம்ப பிஸியா இருக்கியா...

இல்ல அருண் இதெல்லாம் என்னோட கேர்ல் பிரண்ட்ஸ் கிட்ட வர
அழைப்புகள்.

அடேங்கப்பா, அப்போ உனக்கு ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பாங்க
போலிருக்கே, அப்புறம் ஏம்பா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க.

அட நீ வேற அருண், கல்யாணம் ஆகி நமக்குன்னு ஒருத்தி வந்துட்டா இப்படி ஜாலியா இருக்க முடியுமா, உனக்குத்தான் என்னைபத்தி தெரியுமே இதெல்லாம் ச்சும்மா டைம் பாஸ்
கேசுங்க.

இதெல்லாம் தப்பில்லையா விஷ்வா.

இந்த பொண்ணுங்களும் நீ நினைக்கிற மாதிரி இல்லைப்பா, இன்னைக்கி அவங்களுக்காக நான் செலவு பண்றேன், நாளைக்கே என்னை விட செலவு செய்ற ஆள் கிடச்சா என்னை மறந்திருவாங்க.

ச்சே..எல்லோரும் அப்படி இருக்க மாட்டாங்க.

உனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் அருண். வேணுமின்னா ரெண்டு பொண்ணுங்க நம்பர் தரேன், பழகி பாக்குறியா.

இதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை...சாரி விஷ்வா நான்
கிளம்புறேன்.

இதுக்கு போய் கோவிச்சுக்கலாமா, வா அருண் காப்பி சாப்பிடலாம்.

இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இன்னோர் முறை பாக்கலாம் விஷ்வா, எனக்கு கோபம் எல்லாம் இல்ல,
ஆனா உன்னோட செய்கையில் எனக்கு உடன்பாடில்லை.

அவனிடம் கோபம் இல்லை என்று சொன்னாலும், பெண்களை பற்றி அவன் கொண்டிருந்த எண்ணத்தை
நினைக்கையில் எனக்கு கோபமாகத்தான் இருந்தது.

ச்சே...இந்த விஷ்வா சரியான ப்ளேபாய்யா இருப்பான் போலிருக்கே,
என்று நினைத்தவாறே இருக்கும்போது என் மொபைல் ரிங்கியது.
என் தங்கைதான், ஹலோ என்றவாறே அவள் பேசுவதை கேட்ட
எனக்கும் சற்றே பதட்டம் கூடியது.

சரிம்மா, நீ கவலைப்படாதே இதோ இப்போவே வந்திடறேன் என
அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு விரைவாக கிளம்பினேன்.

அழைப்பு தொடரும் அழைப்பு 5

33 comments:

LK said...

ரொம்ப சஸ்பென்ஸ் வைக்கறீங்க

புதிய மனிதா.. said...

நல்லதா போகுது ...

siva said...

hm

nalla erukkuna

annal konjama erukirathu pola erukku..
verivil next pathiupodunga
waiting.

RVS said...

XXXX - முடிஞ்சிடிச்சு. இன்னும் எவ்ளோ எக்ஸ் போகும் பாஸ். உங்களோட சஸ்பென்சு ரகளை தாங்கலை.

Chitra said...

சீக்கிரம் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க.

Balaji saravana said...

நல்லா இருக்கு.. வெய்டிங் அடுத்த பதிவுக்கு..

தமிழ் உதயம் said...

தேவை அடுத்த அத்தியாயம்.

சசிகுமார் said...

எப்பா சாமி புண்ணியமா போகும் சீக்கிரம் கதையை முடிங்க சஸ்பென்ஸ் தாங்க முடியல.

Anonymous said...

இப்புடியே போய்கிட்டு இருந்தா எப்புடி??
இதுக்கு ஒரு முடிவே கிடையாதா??
அவ்வ்வ்வ்வ்

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல சஸ்பென்ஸ். அருமை சை கொ ப..

என்னோட பதிவை பாருங்க.. லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலருக்கு உங்க படைப்புக்களை இன்றோ ., நாளையோ அனுப்புங்க..

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
கூடிய விரைவில் சஸ்பென்சை உடைச்சிரலாம் :)) நன்றி கார்த்திக்.

@புதிய மனிதா..
நன்றி நண்பரே.

@siva
தொடர்ந்து படிப்பதற்கு நன்றி சிவா.

@RVS
ஹா...ஹா...சொல்லாடல் சூப்பர், நன்றி RVS.

@Chitra
சொல்லிடறேன், நன்றி சித்ரா.

@Balaji saravana
நன்றி பாலாஜி.

@தமிழ் உதயம்
போட்டுறலாம், நன்றி நண்பரே.

@சசிகுமார்
ஹி..ஹி..நன்றி சசி.

@இந்திரா
விரைவில் முடியும் தங்கச்சி, நன்றி.

@தேனம்மை லெக்ஷ்மணன்
படித்தேன் அக்கா, அழைப்பிற்கு நன்றி, அனுப்புகிறேன்.

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே விரிவாக எழுதுங்க ... முடிவை நோக்கி பரபரங்குது மனசு ..

Riyas said...

ரசிக்க வைக்கிறது உங்கள் எழுத்துக்கள் தொடருங்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி பாஸ்.

@Riyas
நன்றி ரியாஸ்.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா போகுது சை.வ‌.கொ.. நீங்க‌ளும் தொட‌ருங்க‌ள், நானும் தொட‌ர்கிறேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

@நாடோடி
நன்றி ஸ்டீபன்.

அஹமது இர்ஷாத் said...

continue S.K.Parotta intresting..

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

ஸ்ரீராம். said...

தங்கை வேறயா....தன் வினை தன்னைச் சுடும்னு தங்கை மூலமா ஏதாவது பாடம் கிடைக்குமோ?

DREAMER said...

நண்பா இன்றுதான் 4 பாகமும் படிச்சேன். நல்லாயிருக்கு! சீக்கிரம் தொடரவும்..!

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
ஹி...ஹி...பார்ப்போம் அண்ணா.

@DREAMER
வாங்க நண்பா!! மகிழ்ச்சி.

Jaleela Kamal said...

த்ஙகைக்கு என்ன ஆச்சு , சீக்கிரம் போடுங்க. சஸ்பென்ஸ் மண்டைய குடையுது

சைவகொத்துப்பரோட்டா said...

@Jaleela Kamal
சொல்லிடறேன், நன்றி அக்கா.

பாரத்... பாரதி... said...

"ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்" சக்தியொடு , பரிசல்காரன்-வலைப்பதிவர்க்கு,ரோஜா பூந்தோட்டம் வலைப்பதிவர்கள் கொலை மிரட்டல்..
மேலும் படிக்க http://bharathbharathi.blogspot.com/2010/10/blog-post_14.html

சைவகொத்துப்பரோட்டா said...

@பாரத்... பாரதி...
படித்தேன் பாரதி,நன்றி.

philosophy prabhakaran said...

சமீப காலமா உங்க கன்டினியுட்டி மிஸ் ஆகுதே... என்ன காரணம்... யார் செய்த தாமதம்... தொடர்ந்து எழுதுங்க பாஸ்...

சைவகொத்துப்பரோட்டா said...

@philosophy prabhakaran
வாங்க பிரபாகரன் சார்! செவ்வாய்கிழமை அடுத்த பார்ட் போட்டுறலாம், நன்றி.

மாதேவி said...

படித்துவிட்டேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@மாதேவி
வாங்க! நன்றி மாதேவி.

r.v.saravanan said...

நண்பா இன்றுதான் படிச்சேன் நல்லாயிருக்கு

தாமதத்திற்கு மன்னிக்கவும்

பிரசன்னா said...

நல்லா இருக்கீயளா :)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

என்ன ரெம்ப நாளா பதிவைக் காணவில்லையே!

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
வாங்க நண்பரே, இதற்கு ஏன் மன்னிப்பெல்லாம். நீங்கள் வந்ததே
மகிழ்ச்சிதான்! நன்றி சரவணன்.

@பிரசன்னா
சுகமாய் இருக்கிறேன், தாங்களும் நலம்தானே. நன்றி பிரசன்னா.

@Dr.எம்.கே.முருகானந்தன்
வாங்க டாக்டர், நாளை வரும். நன்றி.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)