Monday, December 13, 2010

ஓவர்

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே...
என் மொபைல் சிணுங்கியது, மணி பார்த்தேன் அதிகாலை மூன்று மணி.
இந்த நேரத்தில் அழைப்பது...அட! எங்கள் டீம் லீடர்தான்.
அகாலவேளையில் அழைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக முக்கியமான
ப்ராஜெக்ட் ஒன்று காத்திருக்கிறது.

சொல்லுங்க பாஸ் என்றேன் உற்சாகமாய்...

சொன்னார்...

கவனமாக கேட்டுக்கொண்டேன், பேசி முடித்த மூன்று நிமிடம் கழித்து
MMS - வந்தது.

அதன்பின் தூக்கம் வரவில்லை, நட்சத்திரத்தை எண்ணி பொழுதை
கழிக்கலாம் என முடிவு செய்து மாடிக்கு சென்றேன். கதவை திறந்ததும்
மார்கழி குளிர் சில்லென பனிக்கட்டி வைத்த மாதிரி தாக்கியது.
குளிர் தாங்காமல் உடல் நடுங்கியது, நட்சத்திரங்களுக்கு குட் நைட் சொல்லிவிட்டு நேரே சமையலறைக்குள்
புகுந்தேன்.

சூடாக இருந்த காபி குளிருக்கு மிக இதமாய் இருக்க, டீவியிடம் சரணடைந்தேன் மியூசிக் சேனலில் பல்லாங்குழியின் வட்டத்தில் பார்த்த ஒற்றை நாணயத்தைப்பற்றி சினேஹா சிலாகித்து கொண்டிருந்தார்.

குளித்தால் குளிரை விரட்டலாம் போல இருந்தது...குளித்தேன்.
இப்போது, என்னை கொஞ்சம் கவனி என்றது வயிறு. இரவு வாங்கி வந்த ப்ரெட்டை டோஸ்ட் செய்து சாப்பிட்டுவிட்டு மணி
பார்த்தேன் 4 .20 Am.

வீட்டைபூட்டிவிட்டு பைக்கை உதைக்க, அதிகாலைப்பனியுடன் கொண்டிருந்த நட்பினால் கிளம்ப மறுத்தது. ஆத்திரத்தில் ஓங்கி விட்ட உதைக்குப்பின் கிளம்பியது.

சாலை சுத்தமாக கழுவியது போல் இருந்தது, ட்ராபிக் இல்லாத சாலையில் பயணிப்பது தனி சுகம்தான்,
விதவிதமான எரிச்சலூட்டும் ஹாரன் சத்தங்கள்...வூட்ல சொல்லிட்டு வந்திட்டியா போன்ற
வசனங்கள் இன்றி, சாலை மிக அமைதியாய் இருந்தது.
விளக்கு கம்பங்கள் பனியில் குளித்து கொண்டே உற்சாகமாய் தங்கள் பணியினை செய்து கொண்டிருந்தன.

நிதானமாய் சென்றேன், இதே வேகத்தில் சென்றால் கூட இன்னும் பத்து நிமிடத்தில் பீச்சை அடைந்து
விடலாம். வானத்தில் பிளாஷ் லைட் அடித்து கொண்டிருப்பதை பார்த்தால் மழை வரும்போல் இருந்தது.

பைக்கை ஓரமாய் நிறுத்திவிட்டு ஜோக்கிங் ட்ராக்கின் அருகாமையில் இருந்த கிரவுண்டில் வார்ம்அப் பயிற்சிகளை ஆரம்பித்தேன். சற்று நேரம் கழிந்த பின்னர்,
குளிரை மீறி உடல் வியர்க்க ஆரம்பித்திருந்தது.

இப்போது பீச்சில் சில கார்களும், பைக்குகளும் முளைக்க ஆரம்பித்திருந்தது.

ஈரமாயிருந்த சிமெண்ட் பெஞ்சை துடைத்துவிட்டு உட்கார்ந்தேன்.
சற்றே மூச்சு வாங்கியது. கொஞ்சம் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல இருந்தது, என் பையில்
துலாவிய பின்புதான் தெரிந்தது, தண்ணீர் பாட்டிலை எடுத்து வரவில்லை என்பது. ஆயாசமாய் செய்வதறியாது சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
வந்திருந்த சொற்ப "தொப்பைகளும்" அவற்றை கரைக்க வேண்டி கடமையே கண்ணாய், ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் அவரை கவனித்தேன், சோம்பல் முறித்துக்கொண்டே கார் டிக்கியில் உட்கார்ந்தவாறே ஷூ அணியும் முயற்சியில் இருந்தார்.

அவரை நோக்கி நிதான நடை போட்டேன், சூரியபந்து கடலில் இருந்து லேசாக தலை தூக்க ஆரம்பித்து இருந்தது, மேக மூட்டமாய் இருந்ததால்
சூரியனாரின் வெளிச்சம் இருண்ட கிணத்துக்குள், இரண்டு கட்டை டார்ச் லைட் அடித்தது போல்
பலவீனமாய் இருந்தது.


அவருக்கு அருகில் சென்று நின்ற பொழுதும் அவர் என்னை கவணித்ததாய் தெரியவில்லை.
என் மொபைலை எடுத்து மீண்டும் ஒருமுறை MMS -ல் படத்தை பார்த்து உறுதி செய்து விட்டு...

எங்கள் லீடர் கொடுத்த பிளான்படி, அவரை "அதா"க்கினேன்.

உற்சாகமாய் எங்கள் லீடரை தொடர்பு கொண்டு "ஓவர்" என்றேன்.
*************************************************

Picture Thanks: freelargephotos.com/

37 comments:

ஸ்ரீராம். said...

என்னங்க இது...காரண காரியம் இல்லாம காலங் கார்த்தால ஒரு பெரியவரைப் போய்...'அதாக்கி'ட்டீங்க... இதான் டீம் வொர்க்கா...அடப் பாவமே...

சி.பி.செந்தில்குமார் said...

kaalailayee kummiyaa?காலைலயே கும்மியா?

Unknown said...

//வந்திருந்த சொற்ப "தொப்பைகளும்" அவற்றை கரைக்க வேண்டி கடமையே கண்ணாய், ஓடிக்கொண்டிருந்தார்கள்.//
:-)

Unknown said...

என்ன டீம் வொர்க்? ஸ்ஸ்ஸ்ஸபா!!

வைகை said...

பாஸ் உங்க நம்பர் கொடுங்க! சென்னைல ரமேசு ரமேசுன்னு ஒரு பதிவர் இருக்காரு!! அவர.................

vasu balaji said...

இப்ப இதுக்கெல்லாமும் டீம் வந்துடுச்சா. ரைட்டு:))

Chitra said...

எங்கள் லீடர் கொடுத்த பிளான்படி, அவரை "அதா"க்கினேன்.


.....சரியா போச்சு!

சசிகுமார் said...

//வீட்டைபூட்டிவிட்டு பைக்கை உதைக்க, அதிகாலைப்பனியுடன் கொண்டிருந்த நட்பினால் கிளம்ப மறுத்தது. ஆத்திரத்தில் ஓங்கி விட்ட உதைக்குப்பின் கிளம்பியது.//

இந்த வரிகள் மிக அருமை

RVS said...

ஷார்ப் க்ளைமாக்ஸ். அமர்க்களம். ;-)
வார்த்தை பிரயோகங்கள் நிறைய இடத்தில் மிக நன்றாக இருந்தது. ;-)

ஹுஸைனம்மா said...

அவ்வ்வ்... ’ப்ரொஃபஷனல் கில்லர்’னு சொல்வாங்களே, அது இதானா? ப்ராஜக்ட் லீடர், டீம், அது இதுன்னு ஏதோ எம்.என்.ஸி. ரேஞ்சுக்குப் பேசி...

வார்த்தை ஜாலங்கள் அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
ஹி..ஹி... லேபல் பாக்கலியா அண்ணா

@சி.பி.செந்தில்குமார்
ஆமா செந்தில், லைட்டா ஒரு கும்மி :))

@ஜீ...
புன்னகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜீ.

@வைகை
அவ்வ்வ்.......நான் அவன் இல்லை, நண்பா.

@வானம்பாடிகள்
ப்ளான் பண்ணி பண்றாங்க போல :))
நன்றி அய்யா.

@Chitra
கடமை தவறாத ஊழியர் போல :))
நன்றி சித்ரா.

@சசிகுமார்
நன்றி நண்பா.

@RVS
விமர்சனத்திற்கு நன்றி RVS.

@ஹுஸைனம்மா
விமர்சனத்திற்கு நன்றி ஹுஸைனம்மா.

Anonymous said...

இரண்டாம் முறை படித்ததும் தான் புரிந்தது அண்ணாத்தை..

ஓவரோ ஓவர்.

சைவகொத்துப்பரோட்டா said...

@இந்திரா
புரியலையா! அப்போ, நான் எளக்கியவாதி ஆயிட்டேனா :))

Ahamed irshad said...

சூப்ப‌ர் கொத்து..எதிர்பாராத‌து..

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

VISA said...

எழுத்து நடை Interesting. நல்ல இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

@VISA
மகிழ்ச்சி, நன்றி விசா.

Unknown said...

அதாவது
எதுக்காக
அது
வரைக்கும்
இருந்து
எதை
எடுக்கணுமோ
அதை
கொண்டு வந்து விட்டீங்க

மிக ஆரோயக்கியமான பதிவு

சைவகொத்துப்பரோட்டா said...

@siva
சிவா, விசு படம் பாத்தீங்களா :))
இது சிறுகதை நண்பா, நன்றி.

r.v.saravanan said...

எழுத்து நடை ஓகே

சிறுகதை நல்லாருந்தது நண்பா

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
நன்றி சரவணன்.

எல் கே said...

நடத்துங்க

சைவகொத்துப்பரோட்டா said...

@LK
வாங்க கார்த்திக், ஊருக்கு போய் வந்தாச்சா!

arasu said...

நீங்கதான் வெப்பன் சப்ப்லையரா?

சைவகொத்துப்பரோட்டா said...

@cottongrower
நான் அவன் இல்லை, ஹையோ...ஹையோ....:))
ஆமா உங்க ப்ளாக் பக்கம் திறக்கவில்லையே, நன்றி.

Muruganandan M.K. said...

அதாக்கல் சூப்பர்

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்
வாங்க மருத்துவர் அய்யா, கருத்துக்கு நன்றி.

Jaleela Kamal said...

மிக அருமையாக படிக்க படிக்க கூட வே நாங்க்ளும் அப்படி வந்தாற் போல இருந்தது. பீச், ஆளிலில்லா ரோடு.

ஏன் பிரட் டோஸ்ட் உஙக்ள் கடையில் அன்று பரோட்டா போடலையா?

இப்ப என் வலை இப்படி http://samaiyalattakaasam.blogspot.comமாற்றி இருக்கேன் முடிந்த போது வந்த்து கருத்தை தெரிவிக்க்கவும்.

Jaleela Kamal said...

இந்த சூரிய உதயம் சின்ன வயதில் வீட்டு பால்கனியில் நின்றால் சூரிய உதயமும், மறைவதும் நன்றாக தெரியும், அந்த ஞாபகம் வந்துவிட்டது

சைவகொத்துப்பரோட்டா said...

@Jaleela Kamal
ஆஹா! மகிழ்ச்சியாக இருக்கிறது, விரிவான விமர்சனத்திற்கு நன்றி அக்கா.

மாணவன் said...

//உற்சாகமாய் எங்கள் லீடரை தொடர்பு கொண்டு "ஓவர்" என்றேன். //

இதுக்கு பேர்தான் ஓவரோ...

நல்லாருக்கு நண்பரே

தொடருங்கள்..........

பகிர்வுக்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

@மாணவன்
வாங்க மாணவன் சார், கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

'எங்கள்' பக்கம் ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை சை.கொ.ப?

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்
அண்ணா, நம்ம வீட்டுப்பக்கம் வராமல் இருப்பேனா, வந்து கொண்டுதான் இருக்கிறேன். கமெண்ட் போட இயலவில்லை, பணிச்சுமை சற்று கூடுதலாய் இருக்கிறது. இதோ இப்போ வந்து கமெண்ட் இடுகிறேன். விசாரிப்புக்கு நன்றி அண்ணா.

ஸ்ரீராம். said...

நன்றி சைவகொத்துபரோட்டா.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்
மகிழ்ச்சி அண்ணா.

Prabu Krishna said...

பதிவர்கள் உதவி செய்வார்களா???


http://selvanuran.blogspot.com/2010/12/blog-post.html

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)