Saturday, November 6, 2010

உத்தமபுத்திரன் - ந.சு.ச.வெ

சிவா மாமா (தனுஷ்) வாங்கி வரும் முகூர்த்தப்புடவைக்காக நம்ம ஸ்ரேயா காத்து இருக்காங்க. இந்த படத்துல ஜெனிலியாதான
ஹீரோயின்னு நீங்க நினைக்கிற மாதிரிதான் நானும் நினைச்சேன்.
(நான் கூட தியேட்டர் மாறி வந்துட்டோமோன்னு நினைச்சேன்!)
ஆனா வீட்ல அரேன்ஜ் பண்ற கல்யாணம் பிடிக்காம, காதலிச்சவரை மாமா தனுஷ் உதவியோட குடும்பத்தாருக்கு தெரியாம ரகிசயமா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறதோட ஸ்ரேயாவின் பணி ஓவர்.

இதனால் தனுஷோட குடும்ப மெம்பர்ஸ் எல்லாம் அவர வீட்டை விட்டு வெளியில்
அனுப்புறாங்க. நண்பர்களுடன் தங்கும் தனஷ் விடுமுறையில் ஊருக்கு பயணம் போகையில் அவர்களின் நண்பன் ஒருவன் சோகத்தில் இருக்க . விசாரிப்புக்குப்பின் அவரோட காதலிக்கும் வேறு நபருக்கும் கல்யாணம், என்பது தெரிய வர மண்டபத்தில் நுழைந்து அவரை தூக்கி வந்தால்,
அந்தப்பெண் ஜெனிலியா! (மண்டபம் மாறி சென்று விட , பெண்ணும் மாறி விடுகிறது)
ஜெனிலியாவிற்கும் அந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. நான் கடவுள் மொட்டை முருகன், தனுஷ் அன்ட்கோவை துரத்தும் பொழுது
லாரியில் அடிபட்டு கோமா ஸ்டேஜிற்கு போகிறார்.


அப்புறம் ஜெனிலியாவை தன் வீட்டிலே, பெரியப்பா பாக்கியராஜின் குருஜிஅனுப்பிய பெண் என பொய் சொல்லி
தங்க வைக்கிறார் தனஷ். பின்னாலேயே தானும் வீட்டாரை சமாதன படுத்தி வீட்டுக்குள் நுழையும் தனுஷ்
ஜெனியை லவ்வுகிறார். இதனிடையே குருஜியை பாக்யராஜ் சந்திக்கும்போது குட்டு வெளிப்பட, ஜெனியின் உறவினர்கள் ஜெனியை தூக்கி வந்து அவரை
வீட்டுச்சிறை வைக்கிறார்கள்.

பெற்றோரை இழந்த ஜெனியின் சொத்தை அடைவதற்காக அவரை, தங்கள் மகனுக்கு கல்யாணம் முடிக்க அண்ணன் ஆஷிஸ் வித்யார்தியும் தம்பி ஜெயபிரகாஷும் போட்டி போடுகிறார்கள். இரு குடும்பத்துக்கும் பொதுவான ஆடிட்டர்(!) விவேக்.

ஜெனியை மீட்பதற்காக விவேக்கிடம்
உதவியாளராக சேரும் தனுஷ், ஜெனியால் முட்டிக்கொள்ளும் அவரின் இரண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க தன் குடும்பத்தாரை அங்கே வர வைத்து ஒரு நாடகாமாடி அவர்களை சேர்த்தும் வைக்கிறார். அதன்பின் ஜெனியை கல்யாணம் செய்ய முயற்சிக்கிறார்.

பாக்கியராஜ், விவேக், தனுஷ், வித்யார்தி, ஜெயபிரகாஷ், சுந்தர்ராஜன், மயில்சாமி இதோட சேந்து ஒரு பட்டாளமே அடிக்கிற லூட்டி இருக்கே, சிரிப்புக்கு பஞ்சமில்லை!

இசை விஜய் ஆண்டனி, ஒரு பாட்டு மட்டும் எனக்கு பிடிச்சது.
தெலுங்கு படமான "ரெடி"யின் ரீமகேதான் இது. இயக்கம்:மித்ரன் ஜவஹர்.

சிரித்து விட்டு வரலாம்!

உத்தமபுத்திரன் : நகைச்சுவை சரவெடி! Picture Thanks:indaiglitz

35 comments:

philosophy prabhakaran said...

என்னது ஸ்ரேயா "கெளரவ தோற்றத்தில்" நடித்திருக்கிறாரா... நெஜமாவா...

இந்தக் கதையை ஏற்கனவே எதிரி அப்படின்ற படத்துல எடுத்துட்டாங்களே...

philosophy prabhakaran said...

வடை எனக்கா :)

LK said...

சுட சுட விமர்சனம் தந்ததற்கு நன்றி

S.Sudharshan said...

நானும் ரசித்தேன் ..ஆனால் விவேக்கிற்கு கொடுத்திருக்கும் பாத்திரமும் அவர் நடிப்புமே இதில் அருமையிலும் அருமை ...:)

சசிகுமார் said...

லீவு விட்டா வீட்ல இருக்குகிறது இல்ல போல

கவிதை காதலன் said...

நான் இன்னும் படம் பார்க்கலை தலைவா.. பார்த்திட்டு சொல்றேன்.. விமர்சனம் அருமை

RVS said...

நல்ல விமர்சனம். நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

@philosophy prabhakaran
வாங்க பிரபாகர், நெசமாத்தான் ஸ்ரேயா கெஸ்ட் ரோல்ல நடிச்சிருக்காங்க. இது தெலுங்கு படத்தோட ரீமேக்.

தீபாவளி ஸ்பெசல் வடை உங்களுக்கேதான்.

@LK
நன்றி கார்த்திக்.

@S.Sudharshan
ஆமா சுதர்சன், சிரித்து முடியல.
நன்றி உங்கள் கருத்துக்கு.

@சசிகுமார்
ஹி...ஹி...ஒரு பொழுது போக்குதான்... நன்றி சசி.

@கவிதை காதலன்
பாருங்க காதலரே, அழுகாச்சி இல்ல, பன்ச் டயலாக்ஸ் இல்ல. நல்லா இருக்கு, நன்றி.

@RVS
கருத்துக்கு நன்றி RVS.

r.v.saravanan said...

இதோ படம் பார்க்கிறதுக்கு டிக்கெட் எடுத்துட்டு தான் நெட் சென்ட்டர் வந்து உட்கார்ந்தேன் உங்கள் விமர்சனம் படித்தேன்

விமர்சனத்திற்கு நன்றி சைவ கொத்து பரோட்டா

கே.ஆர்.பி.செந்தில் said...

ம்... பாப்போம் தல...

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
பாருங்கள் சரவணன், கருத்துக்கு நன்றி.

@கே.ஆர்.பி.செந்தில்
ரைட்டு, நன்றி பாஸ்.

மாதேவி said...

நன்றி. அப்புறம்....

சைவகொத்துப்பரோட்டா said...

@மாதேவி
அப்புறம் என்ன, எண்டு கார்ட் போட்டுட்டாங்க...ஹி...ஹி...
தீபாவளி வாழ்த்துக்கள் மாதேவி, நன்றி.

ஜெய்லானி said...

கதையை எங்கேயோ கேட்டமாதிரி இருக்கேன்னு பாத்தேன் .நல்லவேளை ரீமேக்ன்னு போட்டீங்க ..!!ஹா..ஹா.. :-))

Nithu Bala said...

விமர்சனத்திற்கு நன்றி..படம் பார்த்த உணர்வே வந்து விட்டது :-)

அலைகள் பாலா said...

o.k apa pakalam

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜெய்லானி
அப்போ ரெடிய பாத்துட்டீங்க போல! நன்றி ஜெய்லானி.

@Nithu Bala
அப்போ, டிக்கெட் செலவு மிச்சம்ன்னு சொல்லுங்க :))
நன்றி Nithu.

@அலைகள் பாலா
பார்க்கலாம் பாலா, நன்றி.

பிரசன்னா said...

அப்டியா சொல்றீங்க.. பாக்கலாம் :)

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரசன்னா
ஆமா பிரசன்னா :)) நன்றி.

அன்புடன் மலிக்கா said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆக படம் பாத்தாச்சி.. அதான் கதசொல்லிட்டீங்கள். இதுபோதும்..

Jaleela Kamal said...

4 pathivu vanthuviddathaa>
piraku vareen.

ஜீ... said...

Nice! :)

ஈரோடு தங்கதுரை said...

விமர்சனம் நல்லாருக்கு ...! நானும் பார்த்திட்டேன். பாடல் தான் சரியில்லை. படம் நீங்கள் சொன்னது போலத்தான் கொஞ்சம் சிரிக்கலாம் ..!

இராமநாதன் said...

பாஸ்.. இந்த படம் மொக்க‍ பாஸ்..
நெகட்டிவ் கமெண்ட்ஸ் நிரைய எதிர்பார்க்கிறேன்.. பிரபாகரன் சொல்வதுபோல் முதல் பாதி எதிரி கதையை தழுவுகிறது, பிற்பாதி விஜயின் புன்ன‍கை பூவே படக்க‍தையை தழுவுகிறது.. முடிவு எல்லா தமிழ் சினிமாவை போல.

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்புடன் மலிக்கா
வாங்க கவிஞரே! இதுவே போதுமா, ரைட்டு. நன்றி மலிக்கா.

@Jaleela Kamal
மறக்காம வந்திருங்க :)) நன்றி அக்கா.

@ஜீ...
நன்றி ஜீ.

@ஈரோடு தங்கதுரை
பாத்தாச்சா! ஆமா பாஸ் அதேதான், பாடல் ரசிக்கும்படி இல்ல. நன்றி தங்கதுரை.

@இராமநாதன்
நம்ம ஹீரோ, பத்து பதினஞ்சு பேர வீடு கட்ற மாதிரி காமிக்காம கொஞ்சம் நகைச்சுவையா கதைய கொண்டு போனதால எனக்கு பிடிச்சது பாஸ். இந்த படமே ரீமேக்தான! கருத்துக்கு நன்றி இராமநாதன்.

Chitra said...

நகைச்சுவை படம்ங்கறீங்க ...... மொக்கை படம்ங்கறாங்க ....... தெலுகு ரீமேக் வேற.... அவ்வ்வ்வ்....

சைவகொத்துப்பரோட்டா said...

@Chitra
நகைச்சுவை, சிரிக்கும் வகையில் இருக்கு சித்ரா, நன்றி.

ஸ்ரீராம். said...

கொஞ்சமாவது பொழுது போகிறமாதிரி சிரிக்க முடிந்தால் சரி...அபபடி இருக்கா?

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
வாங்க அண்ணா, அதேதான்! உங்க எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ஹுஸைனம்மா said...

சிரிப்புப் படமா? அப்பப் பாக்கணும்.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஹுஸைனம்மா
அதேதான் ஹுஸைனம்மா,நன்றி.

Anonymous said...

என்ன அண்ணாத்தை.. வர வர பதிவு குறைஞ்சுகிட்டே போகுதே.. ரொம்ம்ம்ப பிசியா??
அடிக்கடி எழுதுங்கப்பா..

சைவகொத்துப்பரோட்டா said...

@இந்திரா
வேலைப்பளு அதிகரித்தது கொஞ்சூண்டு காரணம்.

(எழுத, சரக்கு குறைந்தது(ம்) முதல் காரணம்)

அடுத்த பதிவு வெள்ளியன்று வரும். விசாரிப்புக்கு நன்றி தங்கச்சி.

மதுரை சரவணன் said...

nalla kaamadi padam.. pakirvkku nanri.

cineikons said...

Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)