Monday, November 1, 2010

காதல் வந்தாலே...

என்னை விட
மெல்லிய மலரா
அதிசயித்தது
நீ சூடிக்கொண்ட
மல்லிகை.
*********************************************

ஸ்வரங்கள்
வசப்படவில்லை
அதனாலென்ன
சங்கீதமாய் பேசும்
உன் இதயம்
என் வசம்.


********************************


என் வீட்டு பூச்செடிகளுக்கெல்லாம்
உன் மீது கோபமாம்
அவைகளை விட
சிறப்பாய்
புன்னகைப்பூக்களை
சிந்திக்கொண்டிருக்கிறாயே!



******************************************************

Picture Thanks:photo.net , Photographers direct.com, commentsxo.com

41 comments:

Philosophy Prabhakaran said...

அது உங்களுக்கும் வந்துடுச்சா...

Philosophy Prabhakaran said...

ஆரம்பத்தில் இருந்து படிக்காததால் உங்களது எக்சின் அழைப்பை படிக்க முடியவில்லை... பிறிதொரு நாளில் நேரம் கிடைக்கும்போது முழுமையாக படிக்கிறேன்..

Unknown said...

meeeeeeeeeee
the 3rd..
photos..so nice..

and then lirics...

one more vairamuthu on the way....

continue sir...

எல் கே said...

//ஸ்வரங்கள்
வசப்படவில்லை
அதனாலென்ன
சங்கீதமாய் பேசும்
உன் இதயம்
என் வசம்.///

மூன்றில் இதுதான் பிடித்தது

Unknown said...

காதல் வந்தாலே இப்படித்தாங்க.....அதுவா வரும்.

இசைக்குறிப்பில் இதயம் அருமை.

ஸ்ரீராம். said...

முதல் கவிதை 'அட'...! சூப்பர்.

க ரா said...

ம்ம்ம்.. காதல் ரசம் சொட்டுது.. பின்றீங்க நண்பா :)

எல் கே said...

சரி சரி இனி நிறைய காதல் கவிதைகளா எதிர் பாக்கலாமா

RVS said...

"ஆ.ஹேன்... வந்துருச்சு.. ஆசையில்...... ஓடிவந்தேன்..." அப்படியா சை.கொ.ப? ;-) ;-)

Chitra said...

காதல் ரசம் சொட்டுதே! nice. :-)

Anonymous said...

எங்க அண்ணாத்தைய யாராவது காப்பாத்துங்கப்பா.. அவருக்கும் காதல் கிறுக்கு பிடிச்சிக்குச்சு..

தமிழ் உதயம் said...

காதலை அழகாக, எளிமையாக சொல்லி விட்டிர்கள்.

Unknown said...

எல்லாம் காதல் கவிதையா இருக்கு.. சமூகம் பக்கமும் உங்க பார்வைய திருப்புங்க கவிஞரே

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்குங்க ..

மங்குனி அமைச்சர் said...

மிகச்சரியான போடோ செலக்சன் , நல்லா இருக்கு சார்

சசிகுமார் said...

பள்ளத்தில் விழுந்து விட்டீர்களா வாழ்த்துக்கள்.

Anonymous said...

அட அட.. காதல் :)

Praveenkumar said...

எக்ஸ்சின் அழைப்பு ஒரு வழியா முடிந்த பிறகு.. நிண்ட இடைவெளிககுப்பிறகு தங்கள் கவிதைகள் படித்ததில் மகிழ்ச்சி. மிகவும் அருமையா இருக்கு நண்பரே..!

Prasanna said...

அசத்திட்டீங்க அசத்தி :)

சைவகொத்துப்பரோட்டா said...

@philosophy prabhakaran
ஹி...ஹி...ரொம்ப காலமாவே இருக்கு நன்றி பிரபாகர்.

@siva
ப்ளாக் ஆரம்பித்த பிறகுதான் கவிதை பழகுகிறேன் சிவா, கருத்துக்கு நன்றி.

@LK
மகிழ்ச்சி! நன்றி கார்த்திக்.



@கலாநேசன்
அனுபவித்து எழுதினீர்கள் போல :))
நன்றி கலாநேசன்.

@ஸ்ரீராம்.
எழுதும்போதே எனக்கும் இது மிக பிடித்தது, நன்றி அண்ணா.

@இராமசாமி கண்ணண்
டேஸ்டு எப்படி :)) நன்றி ராம்.

@LK
அப்பப்போ...வரும், நன்றி கார்த்திக்.

@RVS
அதேதான்! நன்றி RVS.

@Chitra
ரசம் நல்லா இருக்கா :)) நன்றி சித்ரா.

@இந்திரா
இது "பிடிக்கா"தவங்க உண்டா! நன்றி தங்கச்சி.

@தமிழ் உதயம்
நன்றி நண்பரே.

@கே.ஆர்.பி.செந்தில்
கொஞ்சம் சிறப்பாக கவிதை வசப்பட்டபின், நிச்சயம் எழுதுறேன், நன்றி பாஸ்.

@புதிய மனிதா..
நன்றி நண்பரே.

@மங்குனி அமைசர்
கருத்துக்கு நன்றி அமைச்சரே.

@சசிகுமார்
ஹா...ஹா...விழுந்து ரொம்ப நாளாச்சு சசி, நன்றி.

@Balaji saravana
நன்றி பாலாஜி.

@பிரவின்குமார்
மகிழ்ச்சி! நன்றி பிரவின்.

@பிரசன்னா
அப்படியா! நன்றி பிரசன்னா.

ஹுஸைனம்மா said...

உங்களையும் தொத்திகிடுச்சா அது!! வாழ்த்துகள். :-))))

சைவகொத்துப்பரோட்டா said...

@ஹுஸைனம்மா
நன்றி ஹுஸைனம்மா.

r.v.saravanan said...

அசத்தல் சைவ கொத்து பரோட்டா வாழ்த்துக்கள் தொடருங்கள் இது போல் இனி

Anisha Yunus said...

ஆஹா படத்துலயாவது மல்லிகையை பார்க்க முடிஞ்சதே அதே மிக மிக சந்தோஷம். நன்றிண்ணா.

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசிக்கவிதையும் படமும் செம மேட்ச்!

Philosophy Prabhakaran said...

இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பதிவுலக குழந்தையாகவே இருப்பீர்கள்... TagLine ஐ மாத்துங்க சை.கொ.ப...

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சரவணன்.

@அன்னு
மகிழ்ச்சி,நன்றி அன்னு.

@ப்ரியமுடன் வசந்த்
நன்றி வசந்த்.

@philosophy prabhakaran
சரி நண்பா, கருத்தில் கொள்கிறேன். கூடிய விரைவில் மாற்றி விடுகிறேன்.

priyamudanprabu said...

//ஸ்வரங்கள்
வசப்படவில்லை
அதனாலென்ன
சங்கீதமாய் பேசும்
உன் இதயம்
என் வசம்.///

///////

ITS NICE

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு.

erodethangadurai said...

கவிதை வரிகள் அனைத்தும் அருமை அருமை ..வாழ்த்துக்கள்.. ! உங்களுக்கு என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!

சைவகொத்துப்பரோட்டா said...

@ஈரோடு தங்கதுரை
நன்றி தங்கதுரை. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள் சைவ கொத்து பரோட்டா

சைவகொத்துப்பரோட்டா said...

@r.v.saravanan
நன்றி சரவணன். உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மூன்றுமே பொருத்தமான படத்துடன் அருமையா இருக்குங்க.. :-))

அதிலும் "ஸ்வரங்கள் வசப்படவில்லை.........உன் இதயம் என் வசம்" ரொம்ப பிடிச்சிருக்கு..

Happy Deepavali..!!

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
நன்றி ஆனந்தி. உங்களுக்கும், உங்கள்
குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப நன்றி.. :-))

உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!!

Unknown said...

அருமை...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

vasu balaji said...

தீபாவளி நல்வாழ்த்துகள்

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
நன்றி ஆனந்தி. முறுக்கு சாப்பிடீங்களா :))

@சிநேகிதி
நன்றி சிநேகிதி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

@வானம்பாடிகள்
நன்றி அய்யா,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஈ ரா said...

நன்று.. சை.கொ.ப

சைவகொத்துப்பரோட்டா said...

@ஈ ரா
கருத்துக்கு நன்றி ஈ ரா.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)