Monday, October 4, 2010

எந்திரன் சிட்டி

இந்த காதல் எந்திரன் சிட்டியையும் விட்டு வைக்கவில்லை! எந்திரனுக்கு மனித உணர்வுகளை கொடுத்து விட்டு பின்பு அது படு(த்தும்)ம் பாடுகளை ரசிக்கும் விதமாய் சொல்லி இருக்கிறார்கள்.

முதல் பாதி சூப்பர் மேன் போல எந்திரனின் அதீத சக்திகளை மசாலா கலவையுடன் காட்டும் காட்சி அமைப்புகள், சிறுவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்! வசீகரனை விட ரோபோ சிட்டியே அதிகம் கவர்கிறார். ஆமா விஞ்ஞானி என்றாலே தாடியுடனும், பாகவதர் முடியுடனும்தான் இருக்க வேண்டுமா! விஞ்ஞானி ரஜினியை இன்னும் கொஞ்சம் வசீகரமாய் காட்டி இருக்கலாம்.
ஹனிபாவிற்கு எந்திரன் மால் "வெட்டும்" காட்சி, கலகலப்பு.
தண்ணி போட்டு வண்டி ஓட்டுரியா, என ஒருவர் கேட்க இல்லை பெட்ரோல்
போட்டு ஓட்டுறேன் என்று ரோபோ பதில் சொல்லும் இடங்களில்
சந்தானம், கருணாசின் வேலையை ரோபோ ரஜினியே செய்து
விடுகிறார்.கிராபிக்ஸ் காட்சிகள் நம்பும்படி அழகாய் செய்து இருக்கிறார்கள்!

இரண்டாம் பாதி முழுவதும் ரோபோ ரஜினி மட்டுமே, ஐஸை கடத்தி வைத்து கொண்டு போடும் ஆட்டங்கள் லக...லக...
சிறுவர்களையும் கவரும் விதமாய் இருக்கிறான், எந்திரன்.

ரஸ்கி(!):நானும் ஒரு எந்திரன் கதை எழுதி இருக்கேன்!! இங்கே
சென்றால் படிக்கலாம். எல்லாம் ஒரு சுய விளம்பரந்தேன் :))
picture:Thanks hindai.in/tamilcinema

29 comments:

denim said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/

LK said...

short and crisp

நாடோடி said...

ரெம்ப‌ சின்ன‌ விம‌ர்ச‌ன‌ம்... ந‌ல்லா இருக்கு ந‌ண்ப‌ரே..

தமிழ் உதயம் said...

.
எந்நிரன் விமர்சனம் எழுதாத பதிவர்களே இல்லங்கிற மாதிரியாயிடுச்சு.

RVS said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்

ஸ்ரீராம். said...

சுருக்கமா எழுதி விட்டீர்கள்.

ஹுஸைனம்மா said...

நீங்களும் களத்துல குதிச்சாச்சா? :-)))

r.v.saravanan said...

சுருக்கமான‌ விம‌ர்ச‌ன‌ம் ந‌ல்லா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

@denim
நன்றி நண்பரே.

@LK
நன்றி கார்த்திக்.

@நாடோடி
நன்றி ஸ்டீபன். நிறைய எழுதினால் படம் பார்க்காதவர்களுக்கு, அவர்கள் பார்க்கும்போது
சுவராசியம் குறைந்து விடும். அதனால் சுருக்கி விட்டேன்.

@தமிழ் உதயம்
ஹே...நானும் பதிவர்தான் :)) நன்றி நண்பரே.

@RVS
நன்றி ஆர்.வீ.எஸ்.

@ஸ்ரீராம்.
ஆமாம் அண்ணா, நன்றி.

@ஹுஸைனம்மா
ஆம் :)) நன்றி ஹுஸைனம்மா.

@r.v.saravanan
நன்றி சரவணன்.

சுடர்விழி said...

சுருக்கமான ஆனால் தெளிவான விமர்சனம் !நல்லா இருக்கு !!!

Anonymous said...

Padam Odumaa?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நல்ல இருக்கு நண்பரே உங்களின் சுருக்கமான விமர்சனம் . பகிர்வுக்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

@சுடர்விழி
நன்றி சுடர்விழி.

@Anonymous
அனானிக்கு நன்றி.

@பனித்துளி சங்கர்
நன்றி சங்கர்.

அஹமது இர்ஷாத் said...

ம்ம்..

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹமது இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

Ananthi said...

///ஹனிபாவிற்கு எந்திரன் மால் "வெட்டும்" காட்சி, கலகலப்பு///

எஸ் எஸ்.. எனக்கும் ரொம்ப பிடித்த ஜோக்.. :-))

என்ன நக்கலா???ன்னு கேட்கும் போது...
இல்ல நிக்கல்ன்னு சொல்றதும்...டாப்... :-))

சைவகொத்துப்பரோட்டா said...

@Ananthi
வாங்க! பாத்தாச்சா!! ஆமா, நிக்கலும் டாப்புதான். நன்றி ஆனந்தி.

சசிகுமார் said...

அருமை வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

@சசிகுமார்
நன்றி சசி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நல்லா இருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவா சொன்னா நல்லயிருக்கும்.

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்
விரிவாக்கினால், நீங்கள் படம் பார்க்கும்போது சுவராசியம் குறைந்து விடுமோ என்று நினைத்தேன்.
நன்றி டாக்டர்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சுவாரசியமா இருக்கு சை கொ ப..:))

சைவகொத்துப்பரோட்டா said...

@தேனம்மை லெக்ஷ்மணன்
நன்றி அக்கா.

ஜிஜி said...

சுருக்கமான,அருமையான பதிவு..
இதை எனது பதிவில் போட்டுள்ளேன்..

சைவகொத்துப்பரோட்டா said...

@ஜிஜி
நன்றி ஜிஜி.

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள். மிக அருமை.

Anonymous said...

அப்பாடா.. நீங்களாவது சுருக்கமா எந்திரன் பதிவு போட்டீங்களே..
படம் வந்தாலும் வந்தது. ஆளாளுக்கு வளச்சு வளச்சு எழுதித் தள்ளிட்டாங்க..
இதுக்காகவே உங்களுக்கு பாராட்டு விழா நடத்தணும் அண்ணாத்தை.

சைவகொத்துப்பரோட்டா said...

@ஈரோடு தங்கதுரை
ஆமா, இது விமர்சனம்தான :)) நன்றி தங்கதுரை.

@இந்திரா
ஹி...ஹி..எங்கே, எப்போ.

Speed Boy said...

நல்ல கருத்துக்கள். மிக அருமை

http://funage16.blogspot.com/

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)