Sunday, April 25, 2010

கல்லூரி

தினமும் பள்ளிக்கூடம் சென்று திரும்பும் பொழுது வழியில் உள்ள அந்த கல்லூரியினை
கடந்து போகும் பொழுதெல்லாம் நினைத்துகொள்வேன், இந்த கல்லூரியில்தான் சேர
வேண்டும்.

அது ஒரு தனியார் கல்லூரி என்றாலும், எங்கள் மாவட்டத்தில் மிக சிறந்த கல்லூரி அதுவேயாகும்,
அந்த கல்லூரி சூழலே எனக்கு மிகவும் பிடித்திருந்தது, முகப்பில் ஆரம்பித்து கல்லூரியின் மத்தி வரை குளுமையான மரங்களின் அணிவகுப்பு!!!

இது கல்லூரியா இல்லை தோப்பா என பலமுறை வியந்து இருக்கிறேன், எங்கள் தெருவில் உள்ள வேலு தாத்தாதான் அங்கு உள்ள செடி, மற்றும் மரங்களை பராமரிக்கும் வேலைகளை செய்து வந்தார். வேலு தாத்தா அந்த மரம், செடிகளை தன் குழந்தைகள் என பலமுறை பெருமிதமாக கூற கேட்டிருக்கிறேன். மேலும் கட்டு கோப்புடன் சென்று படித்து திரும்பும் அண்ணா, அக்காக்கள் என நிறய விஷயங்கள் எனக்கு பிடித்து போயிற்று.







அப்பாவிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன், அப்பா என் கல்லூரி படிப்பை நான் இங்கதான்
படிக்க போறேன்.

இதுல நிறய காசு கேப்பாங்கடா, நீ நிறய மார்க் ஸ்கோர் பண்ணு, அப்பதான் கட்ட வேண்டிய
டொனேசன் கொஞ்சம் குறைப்பாங்க.

அப்பா சொன்ன அப்புறம் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன், முழு ஆண்டு தேர்வும்
எழுதி முடித்தாகி விட்டது. எனக்கு நிச்சயம் 95% மதிப்பெண் கிடைக்கும். நன்றாக
படித்து இருந்ததால், எனக்கு தேர்வு மிக சுலபமாகவே இருந்தது.

விடுமுறைக்கு இரண்டு வாரங்கள் வெளியூரில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு
சென்று வந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்த பின்புதான் கவனித்தேன், வேலு தாத்தா வீடு பூட்டியே கிடந்தது,
தாத்தாவையும் காணவில்லை.

புதுசா சேக்கப்போற டிபார்ட்மென்ட்க்கு கட்டடம் கட்டறதுக்காக மரங்களை எல்லாம் வெட்டிடாங்கடா, வேலு தாத்தாவையும் வேலைய விட்டு நிப்பாட்டிடாங்க என்றான் நண்பன்.

நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.

இப்போது நான் "சேர விரும்பிய" கல்லூரியில் எனக்கு ஸ்காலர்ஷிப் அவர்களே கொடுப்பதாக கூறி
வந்த வாய்ப்பினை, "ஏனோ" என் மனம் ஏற்கவில்லை.
************************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்) நன்றிகள் பல.

63 comments:

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.//
ஹ்ம்ம்.. இதற்கு பாராட்டுக்கள்.. (உங்க கதை தானே... இல்ல கற்பனை கதையா)

//இப்போது நான் "சேர விரும்பிய" கல்லூரியில் எனக்கு ஸ்காலர்ஷிப் அவர்களே கொடுப்பதாக கூறி
வந்த வாய்ப்பினை, "ஏனோ" என் மனம் ஏற்கவில்லை.//

ஹ்ம்ம்.. ஏனென்று புரிகிறது.. அருமையான சிறு கதை. வாழ்த்துக்கள்.. :D

Cable சங்கர் said...

உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:)

நாடோடி said...

உங்க‌ லேபிளே புதுசா இருக்கு.... ஹைக்கூல‌ க‌விதை எழுத‌லாம்!!!!.. க‌தையா?..ம்ம்ம் ந‌ல்ல முய‌ர்ச்சி..

கண்ணா.. said...

//Cable Sankar said...

உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:)//

இதேதான் தல என் கருத்தும்.

தமிழ் உதயம் said...

விரும்புகின்ற சில வற்றையே, சில நேரம் விரும்பாமல் போகிறோம். காரணம்- சில காரணங்களால்.

settaikkaran said...

சில ஈர்ப்புகள் தற்காலிகமாகவே இருந்து, மறைந்து விடுகின்றன போலும்.

மின்மினி RS said...

கதை உங்க கதையா.. நல்லாருக்கு.. உங்க கதை என்றால் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.. நல்ல அருமையான பகிர்வு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் நண்பா.. அருமையான பகிர்வு.. கதை நல்லாருக்கு.

கவிதன் said...

சிறுகதை நல்லா இருக்கு.....! வாழ்த்துக்கள்!

Raghu said...

அவ‌னுங்க‌ 'ம‌ர'‌ம‌ண்டைங்க‌...என்ன‌ ப‌ண்ற‌து?..:(

எல் கே said...

கற்பனை கதைதானே ? உங்க அனுபவம் இல்லையே

ஜெய்லானி said...
This comment has been removed by the author.
ஜெய்லானி said...

பழகிய சில விசயங்கள் மாற்றங்களை விரும்புவதில்லை

பனித்துளி சங்கர் said...

கதை மிகவும் சிறப்பு . இதுபோன்று வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து தனக்குத் தானே குழி தோண்டிகொள்கிறது நமது சமுதாயம் .

Jaleela Kamal said...

கல்லூரி பதிவு கற்பனையா நிஜமா?

அந்த மரங்களை வெட்டியதும், தாத்தாவை அங்கிருந்து அனுப்பியதும் உங்கள மனதை பாதித்து விட்டதா?

vasu balaji said...

கதைன்னா அருமை. நிஜம்னா பாராட்ட வார்த்தைகளில்லை.

Prasanna said...

//முகப்பில் ஆரம்பித்து கல்லூரியின் மத்தி வரை குளுமையான மரங்களின் அணிவகுப்பு!!!//

எனது கல்லூரியும் இப்படித்தான் இருக்கும்..
ஒரே கான்க்ரீட்டாக இருக்கும் கல்லூரிகள் எனக்கும் சுத்தமாக பிடிக்காது :)
கதை சூப்பர்..

Muruganandan M.K. said...

நல்லாயிருக்கு. மிச்சத்தையும் சொல்லுங்களேன்.

ஹுஸைனம்மா said...

சிறுகதையிலுமா ஹைக்கூ? ஆனா, நல்ல கருத்து!!

சைவகொத்துப்பரோட்டா said...

// Ananthi said...
//(உங்க கதை தானே... இல்ல கற்பனை கதையா)//

இது முழுவதும் கற்பனையே.


//ஹ்ம்ம்.. ஏனென்று புரிகிறது.. அருமையான சிறு கதை. வாழ்த்துக்கள்.. :D//

புரிந்ததா!!!!
நன்றி ஆனந்தி கருத்துக்கும், வாழ்த்துக்கும்.




// Cable Sankar said...
உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:)//

இது முழுக்க கற்பனையே,
நன்றி சங்கர்ஜி.





// நாடோடி said...
உங்க‌ லேபிளே புதுசா இருக்கு.... ஹைக்கூல‌ க‌விதை எழுத‌லாம்!!!!.. க‌தையா?..ம்ம்ம் ந‌ல்ல முய‌ர்ச்சி..//

சின்ன கதையா இருக்குறதால "ஹைக்கூ சிறுகதை"
ஹி........ஹி..........
நன்றி ஸ்டீபன்.




// கண்ணா.. said...
//Cable Sankar said...

உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:)//

இதேதான் தல என் கருத்தும்.//

நன்றி கண்ணா.

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
விரும்புகின்ற சில வற்றையே, சில நேரம் விரும்பாமல் போகிறோம். காரணம்- சில காரணங்களால்.//

ஆஹா!!!
தமிழ் விளையாடுகிறது வார்த்தைகளில்!!




// சேட்டைக்காரன் said...
சில ஈர்ப்புகள் தற்காலிகமாகவே இருந்து, மறைந்து விடுகின்றன போலும்.//

கா"ரணங்கள்" இருப்பதால்,
நன்றி சேட்டைக்கார நண்பா!!





// மின்மினி said...
கதை உங்க கதையா.. நல்லாருக்கு.. உங்க கதை என்றால் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.. நல்ல அருமையான பகிர்வு.//

என் கதைதான், ஆனால் என்
கற்பனையில் உதித்த கதை,
நன்றி மின்மினி முதல் வருகைக்கு.




// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாழ்த்துக்கள் நண்பா.. அருமையான பகிர்வு.. கதை நல்லாருக்கு.//

நன்றி ஸ்டார்ஜன்.

= YoYo = said...

\\அப்பா சொன்ன அப்புறம் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன்\\

ஆடடா தீவிரமாகவா

பரோட்டாக்கு எந்த அக்காவ பிடிச்சிது
பதிவிற்க்கு நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

// கவிதன் said...
சிறுகதை நல்லா இருக்கு.....! வாழ்த்துக்கள்!//

நன்றி கவிதன், கருத்துக்கும்,
வாழ்த்துக்கும்.




// ர‌கு said...
அவ‌னுங்க‌ 'ம‌ர'‌ம‌ண்டைங்க‌...என்ன‌ ப‌ண்ற‌து?..:(//

எல்லாம் "பணம்" செய்யும் மாயம் ரகு.






// LK said...
கற்பனை கதைதானே ? உங்க அனுபவம் இல்லையே//

இது முழுக்க, கற்பனையே!!!
நன்றி LK.






// ஜெய்லானி said...
பழகிய சில விசயங்கள் மாற்றங்களை விரும்புவதில்லை//

மாற்றங்கள் தீய விளைவுகளை ஏற்படுத்துமானால்!!!
நன்றி ஜெய்லானி.

ஜில்தண்ணி said...

சுப்பரப்பு கதை
நல்ல முயற்சி

பரோட்டா எனக்கும் இப்ப ஆர்வமா இருக்கு
இந்த ஹைக்கூ சிறுகதை எழுத
ஏதாவது ஐடியா கொடுங்க

சைவகொத்துப்பரோட்டா said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கதை மிகவும் சிறப்பு . இதுபோன்று வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து தனக்குத் தானே குழி தோண்டிகொள்கிறது நமது சமுதாயம் .//

இதேதான்!!! நான் சொல்ல நினைத்தது!!
புரிதலுக்கு நன்றி சங்கர்.




// Jaleela said...
கல்லூரி பதிவு கற்பனையா நிஜமா?//

முழுக்க கற்பனையே!!!

//அந்த மரங்களை வெட்டியதும், தாத்தாவை அங்கிருந்து அனுப்பியதும் உங்கள மனதை பாதித்து விட்டதா?//

ஆமாம், இது போன்ற சம்பவங்களால்,
நன்றி ஜலீலா அக்கா.





//வானம்பாடிகள் said...
கதைன்னா அருமை. நிஜம்னா பாராட்ட வார்த்தைகளில்லை.//

இது முழுக்க கற்பனையே!!!
தொடர் கருத்துரைக்கும், வாழ்த்துக்கும்
நன்றி அய்யா.






// பிரசன்னா said...
//முகப்பில் ஆரம்பித்து கல்லூரியின் மத்தி வரை குளுமையான மரங்களின் அணிவகுப்பு!!!//

எனது கல்லூரியும் இப்படித்தான் இருக்கும்..
ஒரே கான்க்ரீட்டாக இருக்கும் கல்லூரிகள் எனக்கும் சுத்தமாக பிடிக்காது :)
கதை சூப்பர்..//

அப்படியா!!! கொடுத்து வைத்தவர்
நீங்கள், நன்றி பிரசன்னா.

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்லாயிருக்கு. மிச்சத்தையும் சொல்லுங்களேன்.//

வாங்க மருத்துவரே!!!
பாகம் - 2 ஆ!!! ரைட்டு
முயற்சி செய்கிறேன் :))
நன்றி.





// ஹுஸைனம்மா said...
சிறுகதையிலுமா ஹைக்கூ? ஆனா, நல்ல கருத்து!!//

கதை சின்னதா இருப்பதால் ஹைக்கூ!!!
ஹி.....ஹி......
நன்றி ஹுஸைனம்மா.






// +யோகி+ said...
\\அப்பா சொன்ன அப்புறம் மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தேன்\\

ஆடடா தீவிரமாகவா

பரோட்டாக்கு எந்த அக்காவ பிடிச்சிது
பதிவிற்க்கு நன்றி//

இது நிஜமல்ல, கதை!!
ஆனா எனக்கு எல்லா அக்காவையும் பிடிக்கும்.
நன்றி யோகி.






// ஜில்தண்ணி said...
சுப்பரப்பு கதை
நல்ல முயற்சி

பரோட்டா எனக்கும் இப்ப ஆர்வமா இருக்கு
இந்த ஹைக்கூ சிறுகதை எழுத
ஏதாவது ஐடியா கொடுங்க//

வாங்க ஜில்தண்ணி!!!
நானே ஒரு கத்துக்குட்டி,
வேற ஒரு "நல்ல" குருவா எனக்கும் சேர்த்து
பாருங்க :)) நன்றி.

அன்புடன் மலிக்கா said...

ஹை நல்லாயிருக்கு .ஹைகூ கதை ..
முயற்ச்சிகு வாழ்த்துக்கள் முதல் மதிபெண்னுக்கும் வாழ்த்துக்கள்...

//இது நிஜமல்ல, கதை!! // சரி சரி டபுள் வாழ்த்துக்கலூம் உங்களூக்குதான்..

அன்புடன் மலிக்கா said...

ஹை நல்லாயிருக்கு .ஹைகூ கதை ..
முயற்ச்சிகு வாழ்த்துக்கள் முதல் மதிபெண்னுக்கும் வாழ்த்துக்கள்...

//இது நிஜமல்ல, கதை!! // சரி சரி டபுள் வாழ்த்துக்கலூம் உங்களூக்குதான்..

ஸ்ரீராம். said...

நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

Jackiesekar said...

நல்ல கருத்து நன்றாக இருந்தது...

சைவகொத்துப்பரோட்டா said...

// அன்புடன் மலிக்கா said...
ஹை நல்லாயிருக்கு .ஹைகூ கதை ..
முயற்ச்சிகு வாழ்த்துக்கள் முதல் மதிபெண்னுக்கும் வாழ்த்துக்கள்...

//இது நிஜமல்ல, கதை!! // சரி சரி டபுள் வாழ்த்துக்கலூம் உங்களூக்குதான்..//

கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி
மலிக்கா.





// ஸ்ரீராம். said...
நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்...வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.//

நன்றி அண்ணா, கருத்துக்கும், வாழ்த்துக்கும்.






// ஜாக்கி சேகர் said...
நல்ல கருத்து நன்றாக இருந்தது...//

நன்றி ஜாக்கி.

மாதேவி said...

நல்ல கதை.

இப்படி வேலை இல்லாமல் போன வேலுத்தாத்தாக்கள் எத்தனை பேர் :(

மரங்களின் பொட்டானிக்கல் பெயரையும் எழுதிவைத்து வளர்க்கும் அதிபர் உடைய பாடசாலையும் உண்டு.

r.v.saravanan said...

பசுமையை விரும்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல பதிவு

சைவகொத்துப்பரோட்டா said...

// மாதேவி said...
நல்ல கதை.

இப்படி வேலை இல்லாமல் போன வேலுத்தாத்தாக்கள் எத்தனை பேர் :(

மரங்களின் பொட்டானிக்கல் பெயரையும் எழுதிவைத்து வளர்க்கும் அதிபர் உடைய பாடசாலையும் உண்டு.//

ஆஹா!!! இப்படியான பாட சாலைகளும்
இருக்கின்றதா!! மகிழ்ச்சியாக இருக்கிறது மாதேவி.

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan said...
பசுமையை விரும்பும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல பதிவு//

மிக்க நன்றி சரவணன், இப்பொழுது இந்த
பசுமை மிக அவசியமான ஒன்று.

Chitra said...

அருமை. பாராட்டுக்கள்!
நல்லா கதை சொல்றீங்க.

பித்தனின் வாக்கு said...

// உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:) //


நானும் இதையேதான் சொல்ல விரும்புகின்றேன்.

ஜெய் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இன்னும் பெரிய சிறுகதைகளை எழுதுங்க..

ஆர்வா said...

அருமையான Feel.. அழகான வார்த்தை நடை.

Mohan said...

கதை நல்லாருக்குங்க!

சைவகொத்துப்பரோட்டா said...

// Chitra said...
அருமை. பாராட்டுக்கள்!
நல்லா கதை சொல்றீங்க.//

கருத்துக்கும், வாழ்த்துக்கும்,நன்றி சித்ரா.






// பித்தனின் வாக்கு said...
// உங்க வாழ்க்கையில நடந்ததா இருந்தா, முதல் மாணவருக்காக வாழ்த்துக்கள்.

கதைக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு..:) //


நானும் இதையேதான் சொல்ல விரும்புகின்றேன்.//

நன்றி சுதாகர்.








// ஜெய் said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. இன்னும் பெரிய சிறுகதைகளை எழுதுங்க..//

முயற்சி செய்கிறேன், பெரிய சிறுகதையை :))
நன்றி ஜெய்.






// கவிதை காதலன் said...
அருமையான Feel.. அழகான வார்த்தை நடை.//

மகிழ்ச்சி!!!
நன்றி நண்பா.






// Mohan said...
கதை நல்லாருக்குங்க!//

நன்றி மோகன்.

சாய்ராம் கோபாலன் said...

நான் தினமும் ஸ்ட்ரைக் என்று கல்லூரி செல்லவில்லை என்றாலும் பச்சையப்பன் கல்லூரி அப்படித்தான் பச்சைப்பசேலென்று இருக்கும். ஞாபகம் வருதே ஞாபகம்!!

க ரா said...

நல்லா எழுதீருகிங்க நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// சாய்ராம் கோபாலன் said...
நான் தினமும் ஸ்ட்ரைக் என்று கல்லூரி செல்லவில்லை என்றாலும் பச்சையப்பன் கல்லூரி அப்படித்தான் பச்சைப்பசேலென்று இருக்கும். ஞாபகம் வருதே ஞாபகம்!!//

தினமும் ஸ்ட்ரைக்கா...ஆ........ஆ.........
ம்.....கொடுத்து வைத்தவர்தான் நீங்கள் :))







// இராமசாமி கண்ணண் said...
நல்லா எழுதீருகிங்க நண்பரே.//

அப்படியா!!! மகிழ்ச்சி ராம்.

r.v.saravanan said...

மிக்க நன்றி சரவணன், இப்பொழுது இந்த
பசுமை மிக அவசியமான ஒன்று.


எப்பொழுதுமே பசுமை தேவை

அதற்காக நாம் முயற்சி செய்வோம் வருங்கால நம் சந்ததியர் வாழ

பத்மா said...

நல்லா வந்துருக்கு பரோட்டா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சின்ன கதைதான், ஆனால் பெரிய கரு(த்து)!
பாராட்டுக்கள்!
எங்கள் கல்லூரியும் இதுபோல், தோப்போ என்று
வியக்கும்வண்ணம் இருக்கும். நினைவில்
நிழலாட வைத்துவிட்டீர்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan said...
மிக்க நன்றி சரவணன், இப்பொழுது இந்த
பசுமை மிக அவசியமான ஒன்று.


எப்பொழுதுமே பசுமை தேவை

அதற்காக நாம் முயற்சி செய்வோம் வருங்கால நம் சந்ததியர் வாழ//

நிச்சயமாக!!! நம் கடமை இது,
நன்றி சரவணன்.







// padma said...
நல்லா வந்துருக்கு பரோட்டா//

அப்படின்னா, பத்மாவிற்கு ரெண்டு பரோட்டா பார்சல் :))






// NIZAMUDEEN said...
சின்ன கதைதான், ஆனால் பெரிய கரு(த்து)!
பாராட்டுக்கள்!
எங்கள் கல்லூரியும் இதுபோல், தோப்போ என்று
வியக்கும்வண்ணம் இருக்கும். நினைவில்
நிழலாட வைத்துவிட்டீர்கள்!//

மிக்க மகிழ்ச்சி நண்பரே.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பழைய நினைவுகள்.. கிளரிவிட்டுவிட்டீர்...

சைவகொத்துப்பரோட்டா said...

// பட்டாபட்டி.. said...
பழைய நினைவுகள்.. கிளரிவிட்டுவிட்டீர்...//

அப்புறம் என்ன!!! உங்களின் மலரும்
நினைவுகளை எழுதுங்கள்.

மங்குனி அமைச்சர் said...

அருமை , எங்கள் கல்லூரியும் அப்படிதான் தோப்பு போல இருக்கும்

சைவகொத்துப்பரோட்டா said...

//மங்குனி அமைச்சர் said...
அருமை , எங்கள் கல்லூரியும் அப்படிதான் தோப்பு போல இருக்கும்//

ம்ம்......அமைச்சர் கொடுத்து வைத்தவர்தான்.

Unknown said...

நல்ல கொசுவர்த்தி வாசனை.மணக்கட்டும்.அது சரி.அந்த கல்லூரியின் பெயர் என்ன?

சைவகொத்துப்பரோட்டா said...

// மின்னல் said...
நல்ல கொசுவர்த்தி வாசனை.மணக்கட்டும்.அது சரி.அந்த கல்லூரியின் பெயர் என்ன?//

அந்த கல்லூரியின் பெயர் : "கூகுள் தொழில் நுட்ப கல்லூரி"
ஹி...........ஹி...........

Philosophy Prabhakaran said...

/* நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன் */

உண்மைய சொல்லுங்க... கற்பனை தானே...

Thenammai Lakshmanan said...

உண்மை சை கொ ப
நாம் நேஎசிப்பவர்கள் இல்லத இடம் பாலை வனமாகி விடுகிறது

Praveenkumar said...

உங்க பதிவுகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் உள்ளது. பாராட்டுகள் நண்பரே..! தொடர்ந்து முதலாவதாக வருவதற்கு... படிப்பிலேயும் பதிவுகளிலும் நீங்க எப்பவும் முன்னணி என்பதை அறிந்து கொண்டோம்.

சைவகொத்துப்பரோட்டா said...

// philosophy prabhakaran said...
/* நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன் */

உண்மைய சொல்லுங்க... கற்பனை தானே...//

மீண்டும் உண்மையை சொல்கிறேன், இது
நிஜமாகவே...........கற்பனைதான்.






// thenammailakshmanan said...
உண்மை சை கொ ப
நாம் நேஎசிப்பவர்கள் இல்லத இடம் பாலை வனமாகி விடுகிறது//

வாங்க......வாங்க.......
வேலைப்பளு அதிகமாகி விட்டது போல,
நன்றி அக்கா.







// பிரவின்குமார் said...
உங்க பதிவுகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் உள்ளது. பாராட்டுகள் நண்பரே..! தொடர்ந்து முதலாவதாக வருவதற்கு... படிப்பிலேயும் பதிவுகளிலும் நீங்க எப்பவும் முன்னணி என்பதை அறிந்து கொண்டோம்.//

வாங்க பிரவீன், இவ்ளோ அப்பாவியா
இருக்கீங்களே :))
இது உண்மையல்ல, முழுக்க, முழுக்க என் கற்பனையில்
உதித்த கதை மட்டுமே,
மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

தக்குடு said...

short story nalla irunthathu sir!!

சைவகொத்துப்பரோட்டா said...

// தக்குடுபாண்டி said...
short story nalla irunthathu sir!!//

மிக்க மகிழ்ச்சி தக்குடுபாண்டி, நன்றி.

சசிகுமார் said...

எல்லாத்தையும் நம்பினேன் நண்பா ஆனால்

//நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.//

இதை மட்டும் ஏனோ என் மனம் நம்ப மறுக்கிறது நண்பா ஏனென்று புரியவில்லை.

Anonymous said...

கல்லூரி
வேலு தாத்தா
மரம்
எல்லாமே நல்ல தான் இருக்கு.
ஆனா "நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஆனேன்." அப்படின்னு சொல்லி காமெடி பண்ணிட்டிங்களே அண்ணாத்தை..
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

சைவகொத்துப்பரோட்டா said...

// சசிகுமார் said...
எல்லாத்தையும் நம்பினேன் நண்பா ஆனால்

//நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற
மாணவன் ஆனேன்.//

இதை மட்டும் ஏனோ என் மனம் நம்ப மறுக்கிறது நண்பா ஏனென்று புரியவில்லை.//

நம்புங்க சசி, ஏன்னா இது "நிஜமல்ல கதை" மட்டுமே.






// எனது கிறுக்கல்கள் said...
கல்லூரி
வேலு தாத்தா
மரம்
எல்லாமே நல்ல தான் இருக்கு.
ஆனா "நான் எதிர்பார்த்ததற்கும் மேலாக எங்கள் மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஆனேன்." அப்படின்னு சொல்லி காமெடி பண்ணிட்டிங்களே அண்ணாத்தை..
நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்//

அவ்வ்..............அது காமெடி இல்ல
தங்கச்சி........"கதையில் வரும் உண்மை" :))

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)