எனக்கு பிடித்தவற்றுள் பத்து படங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும்
இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைத்த நண்பர் philosophy பிரபாகரன்
அவர்களுக்கு எனது நன்றி.
விதிகள்:
1. தமிழ்ப் படங்கள் மட்டுமே
2. குறைந்த பட்சம் எடுத்த வரைக்கும் திருட்டி டிவிடியாவது வந்திருக்க வேண்டும்.
3. அடல்ட்ஸ் ஒன்லி படங்கள் அனுமதி இல்லை (நியூ உட்பட)
))))))))))))))))))))))))))))))))))))))))))
'ஓஹோ" ப்ரொடக்சன் பத்தி தெரியுமா உங்களுக்கு, தெரியாதுன்னா கண்டிப்பா இந்த படத்த
பாருங்க. பாலையாவும், நாகேசும் அப்பா, மகனா நகைச்சுவையில் கலக்கி இருப்பாங்க,
நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், நேரமில்லைன்னு
சொல்லாம பாருங்க இந்த "காதலிக்க நேரமில்லை" படத்த.
என்னதான் வாயில வெத்தில போட்ட மாதிரி பேசினாலும், இவரோட இயல்பான
நடிப்பும், அந்த துள்ளலான ஸ்டைலும் எனக்கு பிடிக்கும். அழகான ஒரு
குடும்பத்தோட நாமளும் அருகில் இருந்த ஒரு பீல் கிடைக்கும் இந்த படத்த பாக்கும்போது,
நாலே பாட்டுனாலும், நாலும் "நச்', வருடங்கள் பல கடந்தாலும் நினைவில் நிற்கிறது
இந்த "வருஷம் 16"
தம்மாதூண்டு மீசையை வைத்து, தன் பாஸிடம் இரட்டை வேடம் போட்டு ஏமாற்றுவார் ஹீரோ, அவருக்கு அம்மாவாக நடிக்க வந்தவரும், இரட்டை வேடம் போட
வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். அந்த அம்மா, நிறைய
படங்களில் அழு மூஞ்சி கேரக்டரில் மட்டுமே நடித்திருப்பார்,
அவரே இதில் நகைச்சுவை செய்திருக்கிறார், என்றால் பாருங்களேன், இந்த "தில்லு முல்லு"வை.
ரெண்டும் கெட்டான் வயதில் மாயகாதலில் விழுந்து
"ஓடிப்போலாமா" என நினைப்பவர்கள் இந்த படத்தை
பார்த்தால், நிச்சயம் நினைப்பை மறு பரிசீலனை செய்வார்கள்.
உச்ச கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில், அந்த கை இழந்த நபர் முதலில் சாதாரணமாக
பேச ஆரம்பிக்கும்போதே, ஏதோ நடக்க போகிறது என்ற உணர்வில் நம்மை
அறியாமலே, நம் வயிற்றில் பய அமிலம் சுரக்கும் இந்த
"காதல்"லை பார்த்தால்.
காதலியை கைபிடித்தே தீர வேண்டிய சூழ்நிலை, அண்ணனால்
பெற்றோர் மனமுடைந்து இருக்கும் நேரம் வேறு. அப்பாவிடம் இன்டெர்வியு செல்வதாக பொய் சொல்லி கிளம்ப
வெள்ளந்தியாக அப்பாவும் ஆசிர்வாதம் செய்து, பணம் போதுமாப்பா
என கேட்க, குற்ற உணர்ச்சியில் மகன் தவிப்பார். அப்பாவிற்குள்
ஒளிந்திருக்கும், பாசத்தையும், அக்கறையையும் அழகாய் கொடுத்துள்ளார்கள் இந்த
"தவமாய் தவமிருந்து"வில்.
சிரிப்பு போலீசை மட்டும் நிறைய படங்களில் பார்த்த நமக்கு,
அவர்களின் நிஜ பக்கங்களையும் காட்டிய சில படங்களில் இதுவும்
ஒன்று. பிடிபட்ட அந்த தீவிரவாதி உண்மையில்
தீவிரவாதியோ என நாம் அஞ்சும்படி, நடிப்பில் மிரட்டி இருப்பார்,
வீரம்ன்னா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு, வீரத்தை
பற்றி விளக்கிய இந்த "குருதிப்புனல்"லை பாருங்களேன்.
வயதான ஒருவரும், இளம்பெண் ஒருத்தியும் கொண்ட
நட்பை, எந்த விரசமும் இல்லாமல் கிராமிய மணம் கலந்து
வந்த இந்த படத்திற்கு என்றும் "முதல் மரியாதை"தான்.
ம்.....சொல்ல மறந்துட்டேனே பாடல்கள் அத்தனையும் தேன்.
வழக்கமா ஒரே பாட்டுல நம்ம ஹீரோக்கள் எல்லாம் ஊறுகாய்
வித்தே பெரிய ஆள் ஆயிருவாங்க, அல்லது அவங்களோட
"லட்சியத்தை" அடஞ்சிருவாங்க. இப்படி இல்லாம, கொஞ்சம் யதார்த்தமாய் இந்த படம் இருந்தது, என்ட் கார்ட் போடும்
வரையிலும் இந்த ஹீரோ அவரோட இசை அமைப்பாளர்
ஆகணும்கர லட்சியத்தை அடைய முடியாமல் போனாலும்
இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது.
ஒரு விறுவிறுப்பான க்ரைம் நாவல் படிச்ச மாதிரி இருந்துச்சு
இந்த படத்த பாக்கும்போது. ஸ்டைலிஷான மேக்கிங்ம், ரசிக்கும்படியான பாடல்களும் வலு சேர்த்தது,
இந்த "வேட்டையாடு விளையாடு"விற்கு.
ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான திரைக்கதை, நாயக, நாயகி, "மற்றும் பலரின்" நல்ல நடிப்பு, சுகமான பாடல்கள் என அமைந்த படங்களுள்
இந்த 'மொழி" யும் ஒன்று.
)))))))))))))))))))))))))))))))
இதை தொடர நான் அழைப்பது:
சசிகுமார்
பட்டாபட்டி
ரகு
ஜெய்லானி
அக்பர்
கண்ணா
சித்ரா
ஆனந்தி
பத்மா
ஜில் தண்ணி
r.v.saravanan kudandhai
*************************************************
அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.
71 comments:
ஹையா நான் தான்
ஃபஸ்ட்
வரன் இருங்க
படங்கள் பத்து: அத்தனையும் முத்து! நல்ல தேர்வு!
ஆல் டைம் டாப் 10 திரைப்படங்கள்
சூப்பர் அப்பு............
இந்தப் பத்துல நான் எட்டு தான் பாத்திருக்கேன். அதுல நாலு எனக்கும் பிடித்த படங்கள். அவை, ஒன்று, மூன்று, எட்டு, பத்து.
புரோட்டா அவர்களே எங்களையும் தொடர் பதிவிற்க்கு அழைத்தால் வருவோம் !
நல்ல தேர்வு நண்பா.சில படங்களை எத்தனை முறை வேண்டுமானலும் பார்க்கலாம்
நல்ல டேஸ்ட்டுண்ணே உங்களுக்கு..!
சேட்டைக்காரன் நா சொல்ல வந்தத சொல்லிடீங்க .நல்ல தேர்வு சைவகொத்துபரோட்டா .ஹ்ம்ம் நா எழுதணுமா? உங்களை மாதிரிலாம் எழுத வராதே!
பத்து படங்களுமே அருமையான தேர்வு.... அனைத்தும் நானும் ரசித்து பார்த்தவை..
சை கொ ப. டாப் 10 சூப்பர்.
உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்ததோடு அல்லாமல், நேர்த்தியாக இடுகையில் எழுதி இருக்கும் விதம் அருமை.
தொடர வேண்டிய அந்த சித்ரா, நான் இல்லைதானே?
எல்லாமே நல்ல அருமையான படங்கள் நல்ல தேர்வு.
அழைப்பிற்கு நன்றி தல.... எனக்கு ஏற்கனவே நண்பர் செந்தில் வேலனும் இந்த தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். உங்கள் இருவரையும் தொடர்ந்து விடுகிறேன்.
தல... குருதிபுனலும், தவமாய் தவமிருந்தும் நானும் நினைச்சிருந்தது.. இப்போ வட போச்சே...ஏன்னா யாரும் குறிப்பிடாத படங்களா குறிப்பிட்டாதான் தொடர் பதிவு அலுக்காது.
நான் பேஸிக்கலாவே பயங்கர சோம்பேறி..அதனால சீ....க்கிரம் தொடர்ந்துருதேன்
:))
// +யோகி+ said...
ஹையா நான் தான்
ஃபஸ்ட்
வரன் இருங்க//
வாங்க!! வாங்க!!
காத்திருக்கேன்.
// சேட்டைக்காரன் said...
படங்கள் பத்து: அத்தனையும் முத்து! நல்ல தேர்வு!//
உங்கள் விமர்சனமும் இரத்தின சுருக்கம்!!!
// +யோகி+ said...
ஆல் டைம் டாப் 10 திரைப்படங்கள்
சூப்பர் அப்பு............//
அப்படியா!!
மகிழ்ச்சி, யோகி.
// kggouthaman said...
இந்தப் பத்துல நான் எட்டு தான் பாத்திருக்கேன். அதுல நாலு எனக்கும் பிடித்த படங்கள். அவை, ஒன்று, மூன்று, எட்டு, பத்து.//
பார்க்காத அந்த ரெண்டையும்
பாத்திருங்க :))
அருமையான படங்களை தேர்வு செய்திருக்கிறீர்கள்
// ஜில்தண்ணி said...
புரோட்டா அவர்களே எங்களையும் தொடர் பதிவிற்க்கு அழைத்தால் வருவோம் !//
ரைட்டு.......
உங்களையும் அழைத்து விட்டேன் :))
(உங்க பேரையும் இணைத்துள்ளேன்)
தொடருங்க ஜில்தண்ணி.
// கரிசல்காரன் said...
நல்ல தேர்வு நண்பா.சில படங்களை எத்தனை முறை வேண்டுமானலும் பார்க்கலாம்//
சரியாக சொன்னீர்கள்,
தொடர்ந்து வாருங்கள் நண்பரே,
நன்றி.
// ♠ ராஜு ♠ said...
நல்ல டேஸ்ட்டுண்ணே உங்களுக்கு..!//
அப்போ, உங்களுக்கும் இந்த
படங்கள் பிடிக்கும்ன்னு சொல்றீங்க!!!
// padma said...
சேட்டைக்காரன் நா சொல்ல வந்தத சொல்லிடீங்க .நல்ல தேர்வு சைவகொத்துபரோட்டா .ஹ்ம்ம் நா எழுதணுமா? உங்களை மாதிரிலாம் எழுத வராதே!//
ஆனாலும், உங்களுக்கு இவ்ளோ தன்னடக்கம்
கூடாது, தொடருங்க சொல்லிபோட்டேன் :))
// நாடோடி said...
பத்து படங்களுமே அருமையான தேர்வு.... அனைத்தும் நானும் ரசித்து பார்த்தவை..//
அப்படியா!!!
மகிழ்ச்சி ஸ்டீபன்.
// அன்புடன் மலிக்கா said...
சை கொ ப. டாப் 10 சூப்பர்.//
கவிதாயினுக்கும் இந்த
படங்கள் பிடிக்குமா!!!! :))
// Chitra said...
உங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்ததோடு அல்லாமல், நேர்த்தியாக இடுகையில் எழுதி இருக்கும் விதம் அருமை.
தொடர வேண்டிய அந்த சித்ரா, நான் இல்லைதானே?//
எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறீங்களே,
நீங்களேதான், தொடருங்கள், நன்றி சித்ரா.
// பித்தனின் வாக்கு said...
எல்லாமே நல்ல அருமையான படங்கள் நல்ல தேர்வு.//
நன்றி நண்பரே.
// கண்ணா.. said...
அழைப்பிற்கு நன்றி தல.... எனக்கு ஏற்கனவே நண்பர் செந்தில் வேலனும் இந்த தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார். உங்கள் இருவரையும் தொடர்ந்து விடுகிறேன்.
தல... குருதிபுனலும், தவமாய் தவமிருந்தும் நானும் நினைச்சிருந்தது.. இப்போ வட போச்சே...ஏன்னா யாரும் குறிப்பிடாத படங்களா குறிப்பிட்டாதான் தொடர் பதிவு அலுக்காது.
நான் பேஸிக்கலாவே பயங்கர சோம்பேறி..அதனால சீ....க்கிரம் தொடர்ந்துருதேன்
:))//
வாங்க கண்ணா வாங்க!!!
காத்திருக்கிறோம்.
// r.v.saravanan kudandhai said...
அருமையான படங்களை தேர்வு செய்திருக்கிறீர்கள்//
நன்றி சரவணன்.
காதல், தவமாய் தவமிருந்து இதெல்லாம் பார்த்தா, உங்களுக்கு பின்னாடி ஒரு ஆடோக்ராப் இருக்கும் போல இருக்கே :))
எல்லாமே சூப்பர்..
நல்ல படங்களைத்தான் தேர்வு செய்து இருக்கிறீர்கள்! Good..
ரொம்ப நல்ல படங்கள்.. சூப்பர்.. அதுவும் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் செலக்ட் பண்ணி இருக்கீங்க..
நல்ல தேர்வு, நீங்க சொன்ன முதல் படமே 'ஓஹோ'!...:))
அழைப்பிற்கு நன்றி சைகொப, அவசியம் எழுதறேன்
சை.கொ.ப, பத்து படங்களும் டாப்போ டாப்பு,அதை சொல்லி உள்ள முறையும் டாப் டக்கர்.
சில படஙக்ள் பார்க்கவில்லை.
twenty20 கிரிக்கெட் மாதிரி அடிச்சி விளாசியிருக்கீங்க... ஒரு எடத்துல கூட தேவையில்லாம மொக்கை போடல... உங்க லிஸ்டுல நான் 6 படங்கள் தான் பார்த்திருக்கேன்... ஆறுமே எனக்கு பிடித்தவைதான்.... மற்ற நான்கு படங்களையும் பார்க்க முயல்கிறேன்...
நல்ல தேர்வு!!!
நல்ல ரசனை. எல்லாமே மிக அருமையான படங்கள். "இந்த" பரோட்டா ரொம்ப ருசியாய் இருந்தது
அருமையான படங்களை தேர்வு செய்துள்ளீர்கள் நண்பா.. நான் சிறுவயதில் மிகவும் ரசித்துப்பார்த்தது...
ஹை. எனக்கும் பிடிச்ச படங்கள்தான்.
:)
//நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், //
எத்தனை முறை வேணாலும் பார்க்கலாம். :)
படங்கள் வரிசை சூப்பர்.. ஓட்டு போட்டாச்சு,,,
இந்த லிஸ்ட்டுல மற்றவர்கள் சொல்லாத படங்களைச் சொல்லுவதும் முக்கியம்.
நல்ல தெரிவு.
முகவரி மட்டும் சற்றுப் பொறுமை வேண்டும்!
நம்மல வேற கூப்பிட்டு விட்டார். தலைவா நம்முடைய அடுத்த பதிவு இதுதான்.
/////ரெண்டும் கெட்டான் வயதில் மாயகாதலில் விழுந்து
"ஓடிப்போலாமா" என நினைப்பவர்கள் இந்த படத்தை
பார்த்தால், நிச்சயம் நினைப்பை மறு பரிசீலனை செய்வார்கள்.
உச்ச கட்ட காட்சிக்கு முந்தைய காட்சியில், அந்த கை இழந்த நபர் முதலில் சாதாரணமாக
பேச ஆரம்பிக்கும்போதே, ஏதோ நடக்க போகிறது என்ற உணர்வில் நம்மை
அறியாமலே, நம் வயிற்றில் பய அமிலம் சுரக்கும் இந்த
"காதல்"லை பார்த்தால்.////////
ஏலே மக்கா எதுக்குல அமிலம் , அருவானு சொல்லி இப்பவே என்னை பயமுறுத்துரீரு .
உங்களின் பார்வையில் வெளிவந்த அனைத்துப் படங்களும் அருமை .
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவோம்ல . படம் பார்க்க இல்லை . உங்க பத்திவை படிக்க
முதல் மரியாதை, தில்லு முல்லு ஒக்கே. மற்ற படங்கள் ஆல் டைம் டாப் டென்னில் வருமளவுக்கு பிடிக்குமா என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. nice post,anyways
நல்ல தேர்வு சைகொப.
// பிரசன்னா said...
காதல், தவமாய் தவமிருந்து இதெல்லாம் பார்த்தா, உங்களுக்கு பின்னாடி ஒரு ஆடோக்ராப் இருக்கும் போல இருக்கே :))
எல்லாமே சூப்பர்..//
அப்படி ஒன்றும் இல்லை :(
நன்றி பிரசன்னா.
// Mohan said...
நல்ல படங்களைத்தான் தேர்வு செய்து இருக்கிறீர்கள்! Good..//
மகிழ்ச்சி மோகன்.
// ஜெய் said...
ரொம்ப நல்ல படங்கள்.. சூப்பர்.. அதுவும் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் செலக்ட் பண்ணி இருக்கீங்க..//
நன்றி ஜெய்,
தொடர்ந்து வாருங்கள்.
// ரகு said...
நல்ல தேர்வு, நீங்க சொன்ன முதல் படமே 'ஓஹோ'!...:))
அழைப்பிற்கு நன்றி சைகொப, அவசியம் எழுதறேன்//
எழுதுங்கள்,
காத்திருக்கிறேன்.
// Jaleela said...
சை.கொ.ப, பத்து படங்களும் டாப்போ டாப்பு,அதை சொல்லி உள்ள முறையும் டாப் டக்கர்.
சில படஙக்ள் பார்க்கவில்லை.//
விடு பட்டதை பார்த்து
விடுங்கள் சமையலரசி :))
// philosophy prabhakaran said...
twenty20 கிரிக்கெட் மாதிரி அடிச்சி விளாசியிருக்கீங்க... ஒரு எடத்துல கூட தேவையில்லாம மொக்கை போடல... உங்க லிஸ்டுல நான் 6 படங்கள் தான் பார்த்திருக்கேன்... ஆறுமே எனக்கு பிடித்தவைதான்.... மற்ற நான்கு படங்களையும் பார்க்க முயல்கிறேன்...//
வாங்க!!! நண்பா,
அப்படியா, பார்த்து விடுங்கள்.
// VISA said...
நல்ல தேர்வு!!!//
நன்றி VISA
// கவிதை காதலன் said...
நல்ல ரசனை. எல்லாமே மிக அருமையான படங்கள். "இந்த" பரோட்டா ரொம்ப ருசியாய் இருந்தது//
அப்படியா!!!
கவிதை காதலருக்கு இன்னொன்னு
பார்சல் பண்ணுங்கப்பா!!! :))
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான படங்களை தேர்வு செய்துள்ளீர்கள் நண்பா.. நான் சிறுவயதில் மிகவும் ரசித்துப்பார்த்தது...//
நன்றி ஸ்டார்ஜன்.
// 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஹை. எனக்கும் பிடிச்ச படங்கள்தான்.
:)
//நாகேஷ், பாலையா கிட்ட கத சொல்ற அந்த சீன் அற்புதமா இருக்கும், //
எத்தனை முறை வேணாலும் பார்க்கலாம். :)//
உண்மைதான் ஷங்கர்,
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
// ஜாக்கி சேகர் said...
படங்கள் வரிசை சூப்பர்.. ஓட்டு போட்டாச்சு,,,//
மகிழ்ச்சி,நன்றி ஜாக்கி.
// ஸ்ரீராம். said...
இந்த லிஸ்ட்டுல மற்றவர்கள் சொல்லாத படங்களைச் சொல்லுவதும் முக்கியம்.
நல்ல தெரிவு.
முகவரி மட்டும் சற்றுப் பொறுமை வேண்டும்!//
பொறுத்தார் பூமி ஆள்வார் :))
பத்து படத்தையும் நான் பார்த்து இருக்கிறேன்
// சசிகுமார் said...
நம்மல வேற கூப்பிட்டு விட்டார். தலைவா நம்முடைய அடுத்த பதிவு இதுதான்.//
வாங்க சசி!!!
அப்படியா, மகிழ்ச்சி.
// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ஏலே மக்கா எதுக்குல அமிலம் , அருவானு சொல்லி இப்பவே என்னை பயமுறுத்துரீரு .
உங்களின் பார்வையில் வெளிவந்த அனைத்துப் படங்களும் அருமை .
பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவோம்ல . படம் பார்க்க இல்லை . உங்க பத்திவை படிக்க//
வாங்க!!!
மீண்டும்......மீண்டும் வாங்க சங்கர்,
மகிழ்ச்சி.
//damildumil said...
முதல் மரியாதை, தில்லு முல்லு ஒக்கே. மற்ற படங்கள் ஆல் டைம் டாப் டென்னில் வருமளவுக்கு பிடிக்குமா என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. nice post,anyways//
அடேங்கப்பா!!! பேர படிச்சதும்
பயந்துட்டேன் சுட்டு விடுவீர்களோ என்று :))
ஹி.........ஹி........
நிச்சயம் அவரவர் விருப்பம்,
மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்து வாருங்கள்.
// இராமசாமி கண்ணண் said...
நல்ல தேர்வு சைகொப.//
மகிழ்ச்சி ராம்.
// தமிழ் உதயம் said...
பத்து படத்தையும் நான் பார்த்து இருக்கிறேன்//
அப்படியா!!!
இதில் உங்களுக்கு பிடித்தது
எத்தனை நண்பரே.
இந்தத் தொடர்பதிவினால் நிறைய மறந்துவிட்ட நல்ல படங்கள் ஞாபகம் வருகிறது. நன்றி.
// ஹுஸைனம்மா said...
இந்தத் தொடர்பதிவினால் நிறைய மறந்துவிட்ட நல்ல படங்கள் ஞாபகம் வருகிறது. நன்றி.//
அப்படியா!!! மகிழ்ச்சி.
நன்றி ஹுஸைனம்மா.
சார்.. சும்மா, பொட்டி தட்டீட்டு இருப்பவனை.. தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறீர்கள்..
(பிரபாக வேற எழுதச்சொல்றார்.. உள்குத்து எதுமில்லையே.. ஹி..ஹி..)
ரைட் சார்...சீக்கிரம் எழுதுகிறேன்..
தொடர் பதிவுக்கு நானும் உண்டா ...........
// பட்டாபட்டி.. said...
சார்.. சும்மா, பொட்டி தட்டீட்டு இருப்பவனை.. தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறீர்கள்..
(பிரபாக வேற எழுதச்சொல்றார்.. உள்குத்து எதுமில்லையே.. ஹி..ஹி..)
ரைட் சார்...சீக்கிரம் எழுதுகிறேன்..//
வாங்க பாஸ்!!!
என்ன இப்படி சொல்லிட்டீங்க,
உங்க பட்டியலோட வாங்க
காத்திருக்கேன்.
// r.v.saravanan kudandhai said...
தொடர் பதிவுக்கு நானும் உண்டா ...........//
தாராளமா எழுதலாம் சரவணன்!!!
எழுதுங்க, இதோ இப்பவே உங்க பேரையும்
பட்டியல்ல சேர்த்து விடுகிறேன்.
//இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது// இந்த பாத்து படங்களும் அப்புறம் சில பல பரோட்டா சுடும் உபகரணங்களும் சகிதம் 21 -04 -2010 நம்ம ஏரியாவுக்கு வந்திடுங்க..ஏன்னா அன்னைக்கு நீங்க தான் நம்ம chief chef ..
1, 3, and 4 are liked by me 4ever
நல்ல தேர்வு:)
உங்களுக்குப் பிடித்த பத்து படங்களும் அருமை..
அதில் குருதிபுனல் மட்டும் தான் நான் பார்க்காத படம்.. :)
நல்ல ரசனை உங்களுக்கு..!!
தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி..
விரைவில் தொடர்கிறேன்.. :) :)
எல்லாப் படங்களுமே மிகவும் அருமை.
ஒவ்வொன்றையும் சுமார் 4 முதல் 6 வரையாவது பார்த்திருப்பேன்
அருமையான தேர்வு. நல்ல விமர்சகரும் கூட என்பதை நிரூபித்திருக்கின்றீர்கள்
இனியன் பாலாஜி
// ப்ரின்ஸ் said...
//இந்த "முகவரி" எனக்கு பிடித்து இருந்தது// இந்த பாத்து படங்களும் அப்புறம் சில பல பரோட்டா சுடும் உபகரணங்களும் சகிதம் 21 -04 -2010 நம்ம ஏரியாவுக்கு வந்திடுங்க..ஏன்னா அன்னைக்கு நீங்க தான் நம்ம chief chef ..//
நிச்சயம், உபகரணங்கள் அனைத்தும்
தயார் நிலையில் உள்ளது விஞ்ஞானி அவர்களே!!!
சரியான நேரத்துல வந்துடறேன், நம்ம ஸ்பேஸ் ஷிப்
தயாரா :))
// angel said...
1, 3, and 4 are liked by me 4ever//
அப்படியா Angel, மகிழ்ச்சி!!
// வானம்பாடிகள் said...
நல்ல தேர்வு:)//
வாங்க!! மகிழ்ச்சி அய்யா.
// Ananthi said...
உங்களுக்குப் பிடித்த பத்து படங்களும் அருமை..
அதில் குருதிபுனல் மட்டும் தான் நான் பார்க்காத படம்.. :)
நல்ல ரசனை உங்களுக்கு..!!
தொடர் பதிவிற்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி..
விரைவில் தொடர்கிறேன்.. :) :)//
தொடருங்கள் ஆனந்தி, காத்திருக்கிறோம்.
// இனியன் பாலாஜி said...
எல்லாப் படங்களுமே மிகவும் அருமை.
ஒவ்வொன்றையும் சுமார் 4 முதல் 6 வரையாவது பார்த்திருப்பேன்
அருமையான தேர்வு. நல்ல விமர்சகரும் கூட என்பதை நிரூபித்திருக்கின்றீர்கள்
இனியன் பாலாஜி//
வாங்க பாலாஜி, உங்களுக்கும் இந்த
படங்கள் பிடிக்குமா!!! மகிழ்ச்சி,
அப்புறம், இது விமர்சனம் அல்ல,
எனக்கு பிடித்த படங்களை தொகுத்து இருக்கிறேன்,
அம்புட்டுதேன் :)) நன்றி பாலாஜி.
எல்லா படமும் அருமையான படங்கள். ஏறகனவே முகிலனும் அழைத்திருக்கிறார். சீக்கிரமே போட்டுடலாம், அழைப்புக்கு நன்றி.
// ஜெய்லானி said...
எல்லா படமும் அருமையான படங்கள். ஏறகனவே முகிலனும் அழைத்திருக்கிறார். சீக்கிரமே போட்டுடலாம், அழைப்புக்கு நன்றி.//
வாருங்கள் பட்டியலோடு,
காத்திருக்கிறேன், நன்றி ஜெய்லானி.
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி
எனக்கு பிடித்த பத்து படங்களோடு வருகிறேன்
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி
எனக்கு பிடித்த பத்து படங்களோடு வருகிறேன்
// r.v.saravanan kudandhai said...
தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி
எனக்கு பிடித்த பத்து படங்களோடு வருகிறேன்//
வாங்க சரவணன்!!!
காத்திருக்கிறேன், நன்றி.
எல்லோரும் எனக்கு பிடிச்ச படமாவே எழுதுனா நான் என்னத்த எழுதுறது. :)
படத்தேர்வு அருமை.
கண்டிப்பாக தொடர்கிறேன் மக்கா.
நல்ல தலைப்பு! பத்து படங்களும் அருமையான தேர்வுகள் நண்பரே!
-
DREAMER
// அக்பர் said...
எல்லோரும் எனக்கு பிடிச்ச படமாவே எழுதுனா நான் என்னத்த எழுதுறது. :)
படத்தேர்வு அருமை.
கண்டிப்பாக தொடர்கிறேன் மக்கா.//
வாங்க!! தொடருங்க அக்பர், நன்றி.
// DREAMER said...
நல்ல தலைப்பு! பத்து படங்களும் அருமையான தேர்வுகள் நண்பரே!
-
DREAMER//
நன்றி ஹரீஷ்.
// அன்புடன் மலிக்கா said...
சை கொ ப. டாப் 10 சூப்பர்.//
கவிதாயினுக்கும் இந்த
படங்கள் பிடிக்குமா!!!! :))//
முதல் மரியாதை. [ரொம்ப]
காதல்
மொழி
வேட்டையாடு விளையாடு
வருசம் 16
பிடிக்கும் சை கொ ப.
//அன்புடன் மலிக்கா said...
// அன்புடன் மலிக்கா said...
சை கொ ப. டாப் 10 சூப்பர்.//
கவிதாயினுக்கும் இந்த
படங்கள் பிடிக்குமா!!!! :))//
முதல் மரியாதை. [ரொம்ப]
காதல்
மொழி
வேட்டையாடு விளையாடு
வருசம் 16
பிடிக்கும் சை கொ ப.//
வாங்க!! கவிதாயினி,
அப்படியா!!!
மகிழ்ச்சி. நன்றி உங்கள் கருத்தை
பதிந்ததற்கு.
//அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)///
யோவ் உனக்கு எக்ஸ்பரியான மாத்திர thaan தரனும் , போதும் எத்தின நாளைக்கு இந்த தொடர் பதிவு போடுவிக
//மங்குனி அமைச்சர் said...
//அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)///
யோவ் உனக்கு எக்ஸ்பரியான மாத்திர thaan தரனும் , போதும் எத்தின நாளைக்கு இந்த தொடர் பதிவு போடுவிக//
வாங்க அமைச்சரே!!
ஏன் இம்பூட்டு கோவம், ரைட்டு அடுத்தாப்ல
ஒரு கவிதை அல்லது கதை ஒன்னு
போட்டுறலாம்.
யாருப்பா அங்க, அமைச்சருக்கு பரோட்டா பார்சல்ல்ல்ல்.............:))
நீங்கள் ரசனையில் உன் ரகம் போலிருக்கிறது. பெரும்பாலானவை நான் ரசித்த படங்களே.
// Dr.எம்.கே.முருகானந்தன் said...
நீங்கள் ரசனையில் உன் ரகம் போலிருக்கிறது. பெரும்பாலானவை நான் ரசித்த படங்களே.//
ஆஹா, அப்படியா!!!
மகிழ்ச்சி மருத்துவரே.
படங்களின் தலைப்புகளை பார்த்தவுடன் "அடடே இது நமக்கும் பிடித்த படம் அல்லவா" என்று சொல்ல வைக்கிறது. நல்ல தேர்வு. என்னுடைய முதல் ஓட்டு மொழி படத்திற்கு தான். வாழ்த்துக்கள்.
ஒன்றும் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள். மொழி படம் நன்றாக இருந்தாலும் கடைசியில் ரொம்பவே இழுத்து இருப்பார்கள். வருஷம் பதினாறு நல்ல படம் தான். எனக்கு பிடித்த பத்து படங்கள் பற்றி எழுத வைப்பீர்கள் போலிருக்கே ? வரிசை படுத்துவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் ட்ரை பண்ணனும் ?
// எனது கிறுக்கல்கள் said...
படங்களின் தலைப்புகளை பார்த்தவுடன் "அடடே இது நமக்கும் பிடித்த படம் அல்லவா" என்று சொல்ல வைக்கிறது. நல்ல தேர்வு. என்னுடைய முதல் ஓட்டு மொழி படத்திற்கு தான். வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் பிடிக்குமா!!!
மகிழ்ச்சி.
// சாய்ராம் கோபாலன் said...
ஒன்றும் மூன்றும் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத படங்கள். மொழி படம் நன்றாக இருந்தாலும் கடைசியில் ரொம்பவே இழுத்து இருப்பார்கள். வருஷம் பதினாறு நல்ல படம் தான். எனக்கு பிடித்த பத்து படங்கள் பற்றி எழுத வைப்பீர்கள் போலிருக்கே ? வரிசை படுத்துவது கொஞ்சம் கஷ்டம் இருந்தாலும் ட்ரை பண்ணனும் ?//
எழுதுங்களேன் உங்களுக்கு பிடித்த
பத்தை!!! வரிசை முக்கியமில்லை.
உங்க தேர்வில் உள்ள அனைத்து படங்களும் சிறந்த படங்கள். இதில் எனக்கு ரொம்ப பிடித்தது காதலிக்க நேரமில்லை!
// Priya said...
உங்க தேர்வில் உள்ள அனைத்து படங்களும் சிறந்த படங்கள். இதில் எனக்கு ரொம்ப பிடித்தது காதலிக்க நேரமில்லை!//
மகிழ்ச்சி பிரியா!!!
இந்த படத்தை எத்தனை முறை
பார்த்தாலும், புதிதாக இருக்கும்.
Post a Comment