Wednesday, April 14, 2010

ஆச்சி சொன்ன கத - கத கேளு கத கேளு - தொடர்பதிவு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இப்போ என்னதான், DTS, DOLBY சிஸ்டம், I-MAX அரங்குன்னு தேர்வு செய்து படம் பார்த்தாலும், பள்ளி விடுமுறை
நேரத்துல ஆச்சிகிட்ட (அல்லது தாத்தாகிட்ட) கதை கேட்ட அந்த அனுபவம் யாருக்கும்
மறக்க முடியாது!!!

அவர்கள் கதை சொல்லும் போதே, நம் கற்பனயில் அந்த காட்சிகள் விரியும்.

அப்படி ஆச்சியிடம் கேட்ட கதைகளுள் ஒன்றை உங்களுடன்
பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை அளித்த சிநேகிதன்
அக்பர்ருக்கு நன்றி.

ஒரு காட்டுல ஒரு நரியும், ஓநாயும் ரொம்ப கூட்டாளியா
இருந்துச்சாம். ரெண்டும் சேர்ந்துகிட்டு கண்ணுல படுற
குட்டி மிருகங்கள ஆதரவா பேசி ஏமாத்தி, சாப்பிட்டிருமாம்.

ஒரு நாள் அந்த காட்டுக்கு, வழி தவறி போய் ஒரு குதிரை
வந்திச்சாம்.

அத பார்த்த நரி, இது என்ன மிருகம் புதுசா இருக்கே,
இத கொன்னா ஒரு வாரம் வச்சிருந்து சாப்பிடலாமேன்னு
நினச்சி, ஓநாயோட கலந்து பேசி ரெண்டும் குதிரைகிட்ட
போச்சாம்.

நீ யாருப்பா, இதுக்கு முன்னாடி உன்ன பார்த்தது இல்லையே,
உன் பேர் என்னன்னு கேட்டுச்சாம்.

நரியோட தந்திரங்களை பத்தி தெரிஞ்ச குதிரை சொல்லுச்சாம்,
என் பேரு, என் பாத்ததுல (காலின் அடிப்பாகம்) எழுதி இருக்கு, வேணுமின்னா
பக்கத்துல வா காட்றேன்னு சொல்லுச்சாம்.

இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு
சொல்லுச்சாம்.

இத கேட்ட ஓநாய்க்கு கோபம் வந்து, அடேய் மடப்பய நரியே, உனக்கு படிக்க தெரியாதுன்னு சொல்லு, அது உண்மை.....

ஆனா, நான் ரெண்டாப்பு வர படிச்சிருக்கேன்டா, எனக்கு படிக்க தெரியம் அப்படின்னு பெருமையா சொல்ல.......

அப்ப என் கால்ல இருக்குற பேர படின்னு குதிர
சொல்லுச்சாம்.

ஓநாய், நரிய நக்கலா பாத்துகிட்டே, குதிரை கிட்ட போச்சாம்,
குதிரை ஒரு கால மட்டும் தூக்கி, ஓநாய் கிட்டக்க வந்ததும், அது முகத்துல ஓங்கி ஒரு உத விட்டுச்சாம்.

அப்புறம் என்ன நரி முத ஆளா ஓடிபோக, முகத்துல ரத்தத்தோட ஓநாய், நரி பின்னாலேயே
ஓடிச்சாம்..........அவ்ளோதான்.

நீதி:..........................................

டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி.........

********************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

58 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாடா.. நாந்தான் முதல்..
இருங்க படிச்சுட்டு வாரேன்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!
//

ஏண்ணே.. இந்த கதையில எவ்வளவு நீதிகள் இருக்குனு நான் சொல்றேன் சார்..

1.கால்ல உதைச்சா, மூஞ்சியில ரத்தம் வரும்..

2. யார் கூப்பிட்டாலும், முதல்ல முன்னாடி போகக்கூடாது..

3.படிக்காம இருந்தா, மூஞ்சியில ரத்தம் வராது.. தப்பிச்சுக்கலாம்..

ஸ்ரீராம். said...

குதிரை ஒரு காலை மட்டும் தூக்கி...
ஓ...ஆராயாம அனுபவிக்கணும் இல்லையா...
அருமை.
"அவ்வளவு ஏன், தங்கர் பச்சானோட பள்ளிக்கூடம் கூட..."
ரசித்தேன்

க ரா said...

அருமையான பதிவு நண்பரே. :)

பத்மா said...

நல்லா சுவாரசியமா எழுதிருக்கீங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு //

ஹிஹிஹி... இது சூப்பரு...!!

//என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!! //

நா பாக்கலியே.... குதிரை உதச்ச பிறகும் நீதி என்னனு யாரும் கேட்போம்..
ஹ்ம்ம் ஹ்ம்ம்... :D :D :D
ரொம்ப நல்லா இருக்கு..

= YoYo = said...

எங்க ஆத்தா சொன்ன
நரி கதை எல்லாம் நியாபகத்துக்கு வருது
சைவ கொத்துபரோட்டா
நன்றி

பித்தனின் வாக்கு said...

ஆகா என்ன அருமையான நீதி இது,,,,, எது?????

நல்லாக் கதை விடுறிங்க. ஆனா இதுக்கு நீதி நான் சொல்லிவிடுகின்றேன். யாரு என்ன சொன்னாலும் அதை ஆராயமல் செய்யக் கூடாது. சரிங்களா?

settaikkaran said...

கலக்கலான கதை! ஆச்சிக்கும் பேராண்டிக்கும் பாராட்டுக்கள்!

மங்குனி அமைச்சர் said...

என்னா சைவகோத்துபரோட்டா சார் மூஞ்சி எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு ? குதிர பேரு எதையும் படிச்சு பாதிகளா ?

நாடோடி said...

நீதிக்க‌தை ந‌ல்ல‌ இருக்கு சார்....

கண்ணா.. said...

//அவ்ளோதான்//

இதுதான் இந்த கதையிலயே ரொம்ப பிடிச்சது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

என்ன தலைவரே கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடீங்க, என்ன பொழுது போகலையா. நல்லாயிருக்கு இருக்கு நண்பா. என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா

Prasanna said...

வெஜ்.. பின் நவீனத்துவ கதையா இருக்கும் போல இருக்கு.. கொஞ்சம் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்:)

// தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு//
இது typical வெஜ் டச் :))

Jaleela Kamal said...

உங்கள் நீதி கதை ரொம்ப ஹிஹி ஹி ஜூப்பரு,,ஆச்சி, தங்கர் பச்சானும் ஒரு நரி ,குதிரை, ஓநாயின் கோர்த்து எழுதி இருக்கீங்க..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra said...

நீங்கள் சொன்ன கதையை ஆராயாமல் கமென்ட் பண்ணி வோட்டு போட்டு பரிந்துரை செய்து விட்டேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Chitra said...

நீங்கள் சொன்ன கதையை ஆராயாமல் கமென்ட் பண்ணி வோட்டு போட்டு பரிந்துரை செய்து விட்டேன்.
//

இது செல்லாது.. குதிரை பேரை கண்டுபிடிக்கனுமக்கா..

பின்னோக்கி said...

சின்ன வயசுல இந்த கதைய நான் கேட்டதில்லை.

நீதி ரொம்ப நல்லாயிருக்கு...

சைவகொத்துப்பரோட்டா said...

// பட்டாபட்டி.. said...
அப்பாடா.. நாந்தான் முதல்..
இருங்க படிச்சுட்டு வாரேன்//

வருக!!! வருக!!!
சிங்கை சிங்கமே வருக!!!

//பட்டாபட்டி.. said...
டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!
//

ஏண்ணே.. இந்த கதையில எவ்வளவு நீதிகள் இருக்குனு நான் சொல்றேன் சார்..

1.கால்ல உதைச்சா, மூஞ்சியில ரத்தம் வரும்..

2. யார் கூப்பிட்டாலும், முதல்ல முன்னாடி போகக்கூடாது..

3.படிக்காம இருந்தா, மூஞ்சியில ரத்தம் வராது.. தப்பிச்சுக்கலாம்..

April 14, 2010 5:43 AM//

கதைய பிரிச்சி
மேஞ்சிட்டீங்களே!!!!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஸ்ரீராம். said...
குதிரை ஒரு காலை மட்டும் தூக்கி...
ஓ...ஆராயாம அனுபவிக்கணும் இல்லையா...
அருமை.
"அவ்வளவு ஏன், தங்கர் பச்சானோட பள்ளிக்கூடம் கூட..."
ரசித்தேன்//

குட்...........
பாத்தீங்களா, ஆராச்சிய
நிப்பாட்டுன உடனே
ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்க :))

//இராமசாமி கண்ணண் said...
அருமையான பதிவு நண்பரே. :)//

இப்படியெல்லாம் எனக்கு "ஆறுதல்"
வார்த்தைகள் கூறுவதற்கு நன்றி ராம் :))

// padma said...
நல்லா சுவாரசியமா எழுதிருக்கீங்க//

அப்படியா!!!
மகிழ்ச்சி பத்மா.

// Ananthi said...
//இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு //

ஹிஹிஹி... இது சூப்பரு...!!

//என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!! //

நா பாக்கலியே.... குதிரை உதச்ச பிறகும் நீதி என்னனு யாரும் கேட்போம்..
ஹ்ம்ம் ஹ்ம்ம்... :D :D :D
ரொம்ப நல்லா இருக்கு..//

ஹி.........ஹி.........
கதையை "நல்லா"
புரிந்து கொண்டீர்கள் ஆனந்தி, சபாசு :))

சைவகொத்துப்பரோட்டா said...

// +யோகி+ said...
எங்க ஆத்தா சொன்ன
நரி கதை எல்லாம் நியாபகத்துக்கு வருது
சைவ கொத்துபரோட்டா
நன்றி//

அப்படியா!!!!!
அந்த அளவுக்கு "ரீச்" ஆயிருச்சா இந்த
கத..........ரைட்டு..........
அப்போ அந்த நரிகதையை எடுத்து
உடுங்க யோகி :))

// பித்தனின் வாக்கு said...
ஆகா என்ன அருமையான நீதி இது,,,,, எது?????

நல்லாக் கதை விடுறிங்க. ஆனா இதுக்கு நீதி நான் சொல்லிவிடுகின்றேன். யாரு என்ன சொன்னாலும் அதை ஆராயமல் செய்யக் கூடாது. சரிங்களா?//

பித்தன் சார், மீண்டும் டிஸ்கியை
படிக்கவும்...........
படிச்சிட்டீன்களா.....
ஹி..........ஹி............

// சேட்டைக்காரன் said...
கலக்கலான கதை! ஆச்சிக்கும் பேராண்டிக்கும் பாராட்டுக்கள்!//

நன்றி சேட்டைகாரரே!!!

// மங்குனி அமைச்சர் said...
என்னா சைவகோத்துபரோட்டா சார் மூஞ்சி எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு ? குதிர பேரு எதையும் படிச்சு பாதிகளா ?//

ன்னா............
நமக்கு எழுத படிக்க தெரியாதுங்கண்ணா..........
நல்லா பாருங்க இரத்தம் வடியுற அந்த
முகத்த "கண்ணாடில" பாத்திருக்க
போறீங்க..............
ஹி................ஹி............

சைவகொத்துப்பரோட்டா said...

//நாடோடி said...
நீதிக்க‌தை ந‌ல்ல‌ இருக்கு சார்....//

சின்ன திருத்தம் ஸ்டீபன்,
இது "ஆச்சி சொன்ன கதை" :))

// கண்ணா.. said...
//அவ்ளோதான்//

இதுதான் இந்த கதையிலயே ரொம்ப பிடிச்சது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

கதை முடிஞ்சதும் இப்படிதான்
எங்க ஆச்சி, "பினிஷிங் டச்"
கொடுப்பாங்க, அத அப்படியே
நான் உங்களுக்கு கொடுத்து விட்டேன் :))

// Han!F R!fay said...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா!!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

// சசிகுமார் said...
என்ன தலைவரே கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிடீங்க, என்ன பொழுது போகலையா. நல்லாயிருக்கு இருக்கு நண்பா. என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பா//

"தோளுக்கு மேல வேலை இருக்கு"
சசி, அனைவருக்கும் "கதை சேவை"
செய்ய நேரம் ஒதுக்கி இந்த கதையை
சொல்லிட்டேன் :))

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரசன்னா said...
வெஜ்.. பின் நவீனத்துவ கதையா இருக்கும் போல இருக்கு.. கொஞ்சம் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும்:)

// தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு//
இது typical வெஜ் டச் :))//

வாங்க பிரசன்னா!!
நீங்களும் டிஸ்கி மேட்டர
மறுக்கா ஒருக்க
படிக்கவும் :))

// Jaleela said...
உங்கள் நீதி கதை ரொம்ப ஹிஹி ஹி ஜூப்பரு,,ஆச்சி, தங்கர் பச்சானும் ஒரு நரி ,குதிரை, ஓநாயின் கோர்த்து எழுதி இருக்கீங்க..

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி அக்கா,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

//Chitra said...
நீங்கள் சொன்ன கதையை ஆராயாமல் கமென்ட் பண்ணி வோட்டு போட்டு பரிந்துரை செய்து விட்டேன்.//

வெரி குட் :))
நன்றி சித்ரா.

// பட்டாபட்டி.. said...
Chitra said...

நீங்கள் சொன்ன கதையை ஆராயாமல் கமென்ட் பண்ணி வோட்டு போட்டு பரிந்துரை செய்து விட்டேன்.
//

இது செல்லாது.. குதிரை பேரை கண்டுபிடிக்கனுமக்கா..//

பட்டாபட்டி சார்,
குதிரை பேர கண்டு
பிடிக்கிறவங்களுக்கு பரிசு திட்டம்
ஒன்னு ஆரம்பிக்கலாம் போல............:))

சைவகொத்துப்பரோட்டா said...

// பின்னோக்கி said...
சின்ன வயசுல இந்த கதைய நான் கேட்டதில்லை.

நீதி ரொம்ப நல்லாயிருக்கு...//

அதான் இப்போ கேட்டுட்டீங்களே!!!!
நன்றி பின்னோக்கி சார்.

சிநேகிதன் அக்பர் said...

கதையில நீதி இருக்கு அதே போல ஓ நாய்க்கு குதிரையைக்கண்டா இனி பீதியும் இருக்கும்.

நல்ல சுவாரஸ்யமா கதை சொல்லியிருக்கீங்க பாஸ்.

அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி.

malar said...

கதை நல்லா இருக்கு....

Raghu said...

அவ‌ர் ந‌டிச்சா அவ‌ர் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு அவ‌ர் ம‌ட்டும்தான் போக‌ணும் ;)

இனிய‌ த‌மிழ் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக‌ள் :)

Radhakrishnan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கதை சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தது.

ஸாதிகா said...

//கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... //

கதை நல்லா இருக்குங்கோ.கதையைவிட இந்த டிஸ்கி இன்னும் நல்லா இருக்குங்கோ.என்னோட ஓட்டையும் போட்டுடேனுங்கோ

சைவகொத்துப்பரோட்டா said...

// அக்பர் said...
கதையில நீதி இருக்கு அதே போல ஓ நாய்க்கு குதிரையைக்கண்டா இனி பீதியும் இருக்கும்.

நல்ல சுவாரஸ்யமா கதை சொல்லியிருக்கீங்க பாஸ்.

அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி.//

இந்த வாய்ப்பை கொடுத்த உங்களுக்கு
நன்றி மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள் அக்பர்.

// malar said...
கதை நல்லா இருக்கு....//

நன்றி மலர்.

// ர‌கு said...
அவ‌ர் ந‌டிச்சா அவ‌ர் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு அவ‌ர் ம‌ட்டும்தான் போக‌ணும் ;)

இனிய‌ த‌மிழ் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக‌ள் :)//

ஹி..........ஹி............
உங்களுக்கும் இனிய தமிழ்
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ரகு.

// V.Radhakrishnan said...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள். கதை சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தது.//

அப்போ, புத்தாண்டை மகிழ்ச்சியாக
வரவேற்க இந்த கதையும் கொஞ்சூண்டு
பங்கேற்றதுன்னு நினைக்கிறேன் :))
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.
நன்றி ராதாகிருஷ்ணன்.

// ஸாதிகா said...
//கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... //

கதை நல்லா இருக்குங்கோ.கதையைவிட இந்த டிஸ்கி இன்னும் நல்லா இருக்குங்கோ.என்னோட ஓட்டையும் போட்டுடேனுங்கோ//

மிக்க நன்றிங்கோ...........
தொடர்ந்து வாங்கங்கோ...........
இனிய தமிழ் புத்தாண்டு நல்
வாழ்த்துக்கல்ங்கோ............:))

துபாய் ராஜா said...

அழகான கதை.அருமையான கருத்து.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

இந்த கதையிலே என்ன நீதி இருக்குதுன்னா குதிரை கிட்டே வர சொன்னாபோக கூடாது

கரெக்ட்

எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

உங்களின் நீதியில்லாத கதை நன்று!

சைவகொத்துப்பரோட்டா said...

// துபாய் ராஜா said...
அழகான கதை.அருமையான கருத்து.

இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

// r.v.saravanan kudandhai said...
இந்த கதையிலே என்ன நீதி இருக்குதுன்னா குதிரை கிட்டே வர சொன்னாபோக கூடாது

கரெக்ட்

எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

நீங்க சொன்னா ரைட்டுதான்!!!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

//NIZAMUDEEN said...
உங்களின் நீதியில்லாத கதை நன்று!//

நன்றி நண்பரே, உங்களுக்கும், உங்கள்
குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

ஜாலியான கதை.

VISA said...

சரி கால தூக்கி ஒதச்சப்போ பேர படிச்சிருக்கலாமோண்ணோ?

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
ஜாலியான கதை.//

மெய்யாலுமா!!!! :))

//VISA said...
சரி கால தூக்கி ஒதச்சப்போ பேர படிச்சிருக்கலாமோண்ணோ?//

நேக்கு படிக்க தெரியாதுண்ணா :))

தாராபுரத்தான் said...

கதை நல்லாத்தான் இருக்குங்கோ.

மாதேவி said...

புதுவருட நாளில் குதிரைக்கதை சொன்ன சைவகொத்து பரோட்டாவுக்கு என்ன கொடுக்கலாம் ஓ...ரு... உதை :)))))

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

// தாராபுரத்தான் said...
கதை நல்லாத்தான் இருக்குங்கோ.//

ரொம்ப நன்றிங்கோ.......
தொடர்ந்து வாங்கங்கோ.......:))

// மாதேவி said...
புதுவருட நாளில் குதிரைக்கதை சொன்ன சைவகொத்து பரோட்டாவுக்கு என்ன கொடுக்கலாம் ஓ...ரு... உதை :)))))

இனிய புதுவருட வாழ்த்துக்கள்.//

எனக்கு சுவீட்தான் வேண்டும் :))
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

Mohan said...

கதை நல்லாருக்கு! பட்டாப்பட்டி சொன்ன நீதியும் நல்லாருக்கு!

பனித்துளி சங்கர் said...

////இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு சொல்லுச்சாம்.////////

ஏலே மக்கா இதுல எங்கிருந்துல தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் வந்துச்சு ???

கலக்கல் கதைதான் போங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

பனித்துளி சங்கர் said...

///////நீதி:..........................................

டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... //////

ஏலே மக்கா என்னல அப்படி பாக்குற ???? அதுதான் மீண்டும் வருவேன் என்று சொன்னேன்ல . எங்களுக்கு அவளவு அறிவு இருந்தாதான் எப்பவோ இந்த கதைய படிக்காம போயய்ருப்போம்ல
....ஹி..............ஹி.........

Muruganandan M.K. said...

கதை நல்லாயிருக்கு. ஆச்சி சொன்ன கதை, ஆச்சி சுட்ட வடை எல்லாமே சுவைதான்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Mohan said...
கதை நல்லாருக்கு! பட்டாப்பட்டி சொன்ன நீதியும் நல்லாருக்கு!//

அப்போ, இதுவும் நீதிகதைதான்னு
சொல்றீங்க!!! ரைட்டு :))

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
////இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு புரிஞ்சுகிட்ட நரி, எங்களுக்கு
படிக்க தெரியாதேப்பா, நாங்க மழைக்கு கூட பள்ளிக்கூடம்
ஒதுங்குனதில்ல இவ்வளவு ஏன் தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் படத்துக்கு
கூட போனதில்லன்னு சொல்லுச்சாம்.////////

ஏலே மக்கா இதுல எங்கிருந்துல தங்கர்பச்சானோட பள்ளிக்கூடம் வந்துச்சு ???

கலக்கல் கதைதான் போங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .//

தாரளமா வாங்க, இது உங்க கடை!!

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////நீதி:..........................................

டிஸ்கி: என்ன இது நீதின்னு போட்டுட்டு ஒன்னும் எழுதலைன்னு
பாக்குறீங்களா!!!!!!

கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... //////

ஏலே மக்கா என்னல அப்படி பாக்குற ???? அதுதான் மீண்டும் வருவேன் என்று சொன்னேன்ல . எங்களுக்கு அவளவு அறிவு இருந்தாதான் எப்பவோ இந்த கதைய படிக்காம போயய்ருப்போம்ல
....ஹி..............ஹி.........//

அப்படியா!!!!!!!
மீண்டும்........மீண்டும் வாங்க மக்கா.

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
கதை நல்லாயிருக்கு. ஆச்சி சொன்ன கதை, ஆச்சி சுட்ட வடை எல்லாமே சுவைதான்.//

நிச்சயமான உண்மை!!
நன்றி மருத்துவரே.

DREAMER said...

என்னதான் STUART LITTLE, ICE AGEனு ஆங்கிலப் படங்கள் வந்தாலும், பாட்டி சொல்ற கதையில மிருகங்கள் பேசி கதை நகரும் விதம் மிகவும் அருமையாக இருக்கும். என் பாட்டியும் எனக்கு நிறைய கதை சொன்னார், சொல்லிக் கொண்டும் இருக்கிறார். அருமையான (நீதிக்கோடு ப்ளாங்க்கா இருந்தாலும்)கதை நண்பரே...!

-
DREAMER

சைவகொத்துப்பரோட்டா said...

// DREAMER said...
என்னதான் STUART LITTLE, ICE AGEனு ஆங்கிலப் படங்கள் வந்தாலும், பாட்டி சொல்ற கதையில மிருகங்கள் பேசி கதை நகரும் விதம் மிகவும் அருமையாக இருக்கும். என் பாட்டியும் எனக்கு நிறைய கதை சொன்னார், சொல்லிக் கொண்டும் இருக்கிறார். அருமையான (நீதிக்கோடு ப்ளாங்க்கா இருந்தாலும்)கதை நண்பரே...!//

இப்பவும் பாட்டியிடம் கதை கேட்கும்
நல்ல வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறதா!!
பாராட்டுக்கள்.
(என் ஆச்சி இப்போது இல்லை)

சென்னைத்தமிழன் said...

அண்ணே, வணக்கம், பதிவு நல்லாஇருக்குங்க அண்ணே.... நம்மபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கண்ணே....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்

சைவகொத்துப்பரோட்டா said...

// சென்னைத்தமிழன் said...
அண்ணே, வணக்கம், பதிவு நல்லாஇருக்குங்க அண்ணே.... நம்மபக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்கண்ணே....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்//

படிச்சிட்டேன், அப்படியே உங்க follower - ஆகிட்டேன்,
உங்க பதிவு கலக்கல் அண்ணாத்தே!!!

தக்குடு said...

//கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... // suuuper disc and suuuuper kadhai...:)

சைவகொத்துப்பரோட்டா said...

// தக்குடுபாண்டி said...
//கத சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது..............ஹி..............ஹி......... // suuuper disc and suuuuper kadhai...:)//

நன்றி நண்பரே, ஆமா தக்குடுன்னா என்ன
அர்த்தம் :))

ஜெய்லானி said...

சை கொ அண்ணே!! இது நீங்க பாட்டிகிட்ட அடிவாங்கின கதை மாதிரி இருக்கே!!முதல்ல தூர ஓடியது உங்க தம்பியா ?

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜெய்லானி said...
சை கொ அண்ணே!! இது நீங்க பாட்டிகிட்ட அடிவாங்கின கதை மாதிரி இருக்கே!!முதல்ல தூர ஓடியது உங்க தம்பியா ?//

அவ்வ்.................
கதையை திசை திருப்பிட்டீங்களே,
அப்பு
"இது நிஜமல்ல கதை" :))

lolly999 said...

போதும்! போதும்! பொங்கல் (உதை) ரொம்ப நல்லா இருக்கு, நன்றி!

சைவகொத்துப்பரோட்டா said...

// lolly999 said...
போதும்! போதும்! பொங்கல் (உதை) ரொம்ப நல்லா இருக்கு, நன்றி!//

போதும்......போதும்ன்னு சொல்ற அளவுக்கு
திருப்தியா இருந்துச்சு போல...........ஹி..........ஹி..........
நன்றி.

wiki said...

super story pa

visit my blog @
www.kothangudi.blogspot.com

சைவகொத்துப்பரோட்டா said...

// wiki said...
super story pa

visit my blog @
www.kothangudi.blogspot.com//

நன்றி விக்கி, இதோ
பாத்துடறேன்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)