Thursday, April 8, 2010

பேருந்து காதல் - தொடர்பதிவு

பேருந்து காதல், தொடர் பதிவுக்கான பேருந்தை, ஓட்ட சொல்லி என் கையில் பேருந்தை
கொடுத்த நண்பர் பிரவின்குமார் அவர்களுக்கு நன்றி.

போலாம் ரைட்டுன்னு, கண்டக்டர் சவுண்ட் விட்டதும், பேருந்து நகர
ஆரம்பிக்க, நிறுத்துங்கன்னு ஒரு குரல், அது அழகிய பெண்ணோட
குரல்ன்னு நீங்க கற்பனை பண்ணின்னா ஐ'ம் சாரி.........
அது கரகரப்பான ஆண் குரல்.

கிரீச்சிட்டு பஸ் நிற்க, ஏறியது சாட்சாத் (அழகிய) இளம்பெண்!!
மலரை மொய்க்கும் வண்டுகளாய், அனைவரின் கண்களும்
அவளிடமே. (பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது
அவளின் அப்பா)

மறு நாள் அதே நேரம், அதே பஸ் ஆனால் அதே
பெண் வரவில்லை :(

மறு வாரம் சோகமாக என் பேக்கை ஸ்டைலாக(!!!) அணிந்து கொண்டு அதே பஸ்சில் ஏறினேன், அட
என்ன வியப்பு, அன்று அதே பெண் மீண்டும் வந்தாள்.

அவளின் கடைக்கண் பார்வைக்கு அனைவரும் ஏங்கி கிடக்க
என் அருகே வந்தாள், என் ஹார்ட் பீட் அருகில் நின்ற எனது நண்பனுக்கே கேட்டது.

புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)

ஹாய் என்றேன் , இந்த ஒத்த வார்த்தையை
சொல்வதற்குள் என் நாக்கு மேல் தாடையில் ஒட்டி
கொண்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்தது,
வலு கட்டாயமாக தாடையில் இருந்து நாக்கை பிரித்து, அதன்பின் மீண்டும் ஹலோ சொன்னேன்.

இந்த பஸ்ல எப்பவும் இப்படிதான் கூட்டமா இருக்குமா
என்று கேட்டாள், ஆமா நீங்க தினமும் இதில் வருவதாக
இருந்தால் சொல்லுங்கள், என் நண்பன் இடம் பிடித்து
வைப்பான்(!!) என்றேன்.

தேங்க்ஸ் என்றாள், அப்படியே ரெண்டு சீட்டா போட்டு வைக்க
சொல்லுங்க என்றாள்...........

அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)

அன்று இரவு வெள்ளை உடை தேவதைகளுக்கு நடுவே
என் தேவதையும் இருந்தது.

மறு நாள், கண்ணாடி பார்க்கும்பொழுது இன்னும் அதிக
அழகாக(!!!!) இருந்தேன்.

வழக்கமாக, புகையை கக்கி கொண்டே வரும் பேருந்து அன்று
மலர்களை தூவி கொண்டே வந்தது, நாரசாரமாக கேட்கும்
நண்பனின் குரல் அன்று எஸ்.பி.பாலாவின் தேன் குரல்
போல இருந்தது.

என் தேவதை ஏறும் ஸ்டாப்பில் வண்டி நின்றது, இன் இருதய
துடிப்பும் ஒரு நிமிடம் நின்று பின் இயங்கியது, என் தேவதை
ஏறியது, அவளுடன் இன்னொரு பெண்ணும்.

என்னை நோக்கி வந்தாள், என் நண்பனும், நானும் எழுந்து
கொண்டு அந்த இருக்கையில் அவளை அமர சொன்னேன்,
நன்றி புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு அமர்ந்தது, தீபா இங்கே உக்காரு, என்றாள்
உடன் வந்த பெண்ணை பார்த்து.

அந்த பெண்ணோ நான் ஜன்னல் ஓரம்தான் உக்காருவேன், நீ
இந்த பக்கம் வா "மம்மி" என்று சிணுங்கியது.

என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் இருந்தது........

:(

:(

ஏமாந்திங்களா!!!!!!

நான் படிச்சது எல்லாம் உள்ளூரிலேதான், தொழில்நுட்ப கல்லூரி
மட்டும் 15km தள்ளி இருந்த இன்னோர் ஊரில்.

அங்கு சென்று வர
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள், அதில்தான் சென்று வருவேன். (அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)

ஆகவே, எனக்கு பேருந்து காதல் "வாய்ப்பு" அமையவில்லை.

இந்த தொடரை எழுத வேண்டி, இப்படி
ஒரு "கதை" எழுதினேன்.

எப்பூடி!!!!!!!

டிஸ்கி 1:முந்தைய இடுகையின் போதே (விருது வழங்கும் விழா)
நிறய நண்பர்கள் ஆசையா பரோட்டா கேட்டாங்க, அப்படி
கேட்டவங்க, கேக்காதவங்களுக்கும் சேர்த்து பரோட்டா
சுட்டு வச்சிருக்கேன், இருந்து நிதானமா சாப்பிட்டு போங்க!!!

டிஸ்கி 2 :ருசியா இருந்ததா!!!!!!!!!! :))
*******************************************************

அப்படியே எனக்கான உற்சாக டானிக்கையும் (இனிப்போ, கசப்போ) ஊத்திட்டு போங்க.
(அதாங்க உங்களோட கமெண்ட்ஸ்)
நன்றிகள் பல.

61 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

me the first

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இருங்க படிச்சுக்கிட்டு இருக்கேன்..வெயிட்டு..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
(அந்த பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)
//

ஏன்னா, ஜன்னலுக்கு, கம்பி போட்டிருப்பாங்க..சரிங்களா?..

//
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள்,
//

என்ன சார்.. அப்ப ஒண்ணுமே பண்ணமுடியாதே?..அதுக்குதான் சார்.. அப்பா சார்’க எல்லாம் வேலைக்கு போகக்கூடாதுனு சொல்றது..

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. மிக்க நன்றி கொத்து புரோட்டாவிற்க்கு.

ஸ்ரீராம். said...

ரெண்டு சீட்டாப் போட்டு வைங்க என்றதும் பாய் ஃப்ரெண்டோட பஸ்ல ஏறுவான்னு நினைச்சேன்...மிஸ் ஆயிடுச்சி..மம்மின்னு கூப்பிட்டா என்னங்க...

கடைசி படத்தைப் பார்த்தா சைவம் மாதிரி தெரியலியே.

பத்மா said...

சூப்பரா காலை வாரினீங்க.நல்லாத்தான் இருக்கு படிக்க .பரோட்டா படம் நல்லா இருக்கு

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கதை அருமை.. நானும் இப்படி தான் நினைத்தேன்..
ரெண்டு சீட்டுன்னு சொன்னதும், பாய் பிரண்டு..னு நினச்சேன்..

வட போச்சே.. இருந்தாலும் உங்க கதை திருப்பம் சூப்பர்...

பரோட்டாவுக்கு.. வெஜ். குருமா இருந்திருந்தால் இன்னும் சூபரா இருந்திருக்கும்..

நன்றி.. கதைக்கும், உங்கள் விருந்துக்கும்...

ஜானு... said...

ஹா ஹா ஹா ... நல்லா சிரிக்கவச்சிட்டிங்க ... :D

பரோட்டா சூப்பர்ங்க ...

சசிகுமார் said...

என்னங்க நீங்க கடைசியில இப்படி கவுத்துபுட்டீங்க கதை நல்லா இருந்தது நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பனித்துளி சங்கர் said...

///////என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் /இருந்தது........////////

ஏலே மக்கா !
எதற்குல இப்ப என்னை பயமுறுத்துறீர் ?
நீங்க அதிகமா யோசிக்கிறீங்க போங்க . கலக்கல் !
மீண்டும் வருவேன்

தமிழ் உதயம் said...

உங்க சிறுகதை நல்லா இருந்தது.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருக்கு......க‌டைசியில் ப‌ரோட்டா சூப்ப‌ர்... என்ன‌ சூடு கொஞ்ச‌ம் ஆறி போச்சி.. நான் லேட்டு..

Chitra said...

வாழ்த்துக்கள்!

கண்ணா.. said...

பாஸ்... நீங்க வைச்ச புரோட்டாவ ஏற்கனவே 14 பேர் ருசி பார்த்திட்டு மிச்சம் வைச்சிட்டு போய்ட்டாங்க..

கிளீனர் வைச்சு கிளீன் பண்ணீட்டு வேற புரோட்டா வை தல... பசிக்குது..

:)

Mohan said...

பரோட்டாவப் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு!
நல்லாருந்துச்சு உங்க கதையும்!

சைவகொத்துப்பரோட்டா said...

// பட்டாபட்டி.. said...
me the first

April 8, 2010 5:49 AM

பட்டாபட்டி.. said...
இருங்க படிச்சுக்கிட்டு இருக்கேன்..வெயிட்டு..

பட்டாபட்டி.. said...
//
(அந்த பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)
//

ஏன்னா, ஜன்னலுக்கு, கம்பி போட்டிருப்பாங்க..சரிங்களா?..

//
என் அப்பா வேலை பார்த்த நிறுவனத்தில் மினி பஸ் வசதி
கொடுத்து இருந்தார்கள்,
//

என்ன சார்.. அப்ப ஒண்ணுமே பண்ணமுடியாதே?..அதுக்குதான் சார்.. அப்பா சார்’க எல்லாம் வேலைக்கு போகக்கூடாதுனு சொல்றது..

April 8, 2010 5:55 AM //

வருக!! வருக!!!!!
ஆவலாய் காத்திருக்கேன்,
ஆமா கம்பி இருக்கும், பேருந்தின் வடிவமே
கிட்டதட்ட நாய் பிடிக்கிற வண்டி மாதிரியே இருக்கும் :(
ஏதாவது பண்ணனும் அப்படின்னு நினச்சாலே
போட்டு விட ஆள் இருந்துச்சு,
நன்றி நண்பரே.

சைவகொத்துப்பரோட்டா said...

// பித்தனின் வாக்கு said...
நல்லா இருக்கு. மிக்க நன்றி கொத்து புரோட்டாவிற்க்கு.//

பொறுமையா சாப்பிட்டதற்கு
உங்களுக்கும் நன்றி.

// ஸ்ரீராம். said...
ரெண்டு சீட்டாப் போட்டு வைங்க என்றதும் பாய் ஃப்ரெண்டோட பஸ்ல ஏறுவான்னு நினைச்சேன்...மிஸ் ஆயிடுச்சி..மம்மின்னு கூப்பிட்டா என்னங்க...

கடைசி படத்தைப் பார்த்தா சைவம் மாதிரி தெரியலியே.//

அவ்வ்............
மம்மின்னு கூப்பிட்டா என்னவா........
நீங்க "அவரோட" படம் அதிகமா பார்ப்பீர்கள் போல............:))
கடைசியா இருப்பது சில்லி பரோட்டா,
நன்றி.

// padma said...
சூப்பரா காலை வாரினீங்க.நல்லாத்தான் இருக்கு படிக்க .பரோட்டா படம் நல்லா இருக்கு//

பரோட்டாவ சாப்பிடீங்களா!!!!
நன்றி பத்மா.

// Ananthi said...
கதை அருமை.. நானும் இப்படி தான் நினைத்தேன்..
ரெண்டு சீட்டுன்னு சொன்னதும், பாய் பிரண்டு..னு நினச்சேன்..

வட போச்சே.. இருந்தாலும் உங்க கதை திருப்பம் சூப்பர்...

பரோட்டாவுக்கு.. வெஜ். குருமா இருந்திருந்தால் இன்னும் சூபரா இருந்திருக்கும்..

நன்றி.. கதைக்கும், உங்கள் விருந்துக்கும்...//

வெஜ் குருமா இங்க கொண்டு
வாப்பா.........
சாப்பிடுங்க.............:))
நன்றி ஆனந்தி.

சைவகொத்துப்பரோட்டா said...

//ஜானு... said...
ஹா ஹா ஹா ... நல்லா சிரிக்கவச்சிட்டிங்க ... :D

பரோட்டா சூப்பர்ங்க ...//

மிக்க மகிழ்ச்சி!!!
தொடர்ந்து வாருங்கள்,
நன்றி ஜானு.

// ஜெய்லானி said...
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
###########//

எடுத்து கடையில
மாட்டி விட்டேன்,
மிக்க நன்றி ஜெய்லானி.

// சசிகுமார் said...
என்னங்க நீங்க கடைசியில இப்படி கவுத்துபுட்டீங்க கதை நல்லா இருந்தது நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//

ஹி.......ஹி.........
அதான் சொன்னேனே "வாய்ப்பு"
அமையல............
நன்றி சசி.

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////என் காலடியில் மட்டும் பூமி (பஸ்) இரண்டாக பிளந்து அப்படியே
என்னை விழுங்கியது போல் /இருந்தது........////////

ஏலே மக்கா !
எதற்குல இப்ப என்னை பயமுறுத்துறீர் ?
நீங்க அதிகமா யோசிக்கிறீங்க போங்க . கலக்கல் !
மீண்டும் வருவேன்//

அம்பூட்டு பயமாவா இருக்கு!!!
மீண்டும், மீண்டும் வாங்க!!!!!!!!
நன்றி சங்கர்.

சைவகொத்துப்பரோட்டா said...

// தமிழ் உதயம் said...
உங்க சிறுகதை நல்லா இருந்தது.//

அப்படியா!!
மகிழ்ச்சி,
நன்றி நண்பரே.

// நாடோடி said...
க‌தை ந‌ல்லா இருக்கு......க‌டைசியில் ப‌ரோட்டா சூப்ப‌ர்... என்ன‌ சூடு கொஞ்ச‌ம் ஆறி போச்சி.. நான் லேட்டு..//

அச்சச்சோ!!!!!
சூடா இல்லையா,
ஹாட் பேக் உள்ளதான
வச்சிருந்தேன்.............
அடுத்தமுறை இன்னும் சூடா
வச்சிருக்கேன்........:))
நன்றி ஸ்டீபன்.

// Chitra said...
வாழ்த்துக்கள்!//

நன்றி சித்ரா.

// கண்ணா.. said...
பாஸ்... நீங்க வைச்ச புரோட்டாவ ஏற்கனவே 14 பேர் ருசி பார்த்திட்டு மிச்சம் வைச்சிட்டு போய்ட்டாங்க..

கிளீனர் வைச்சு கிளீன் பண்ணீட்டு வேற புரோட்டா வை தல... பசிக்குது..

:)//

வாங்க!! வாங்க!!
ஹையோ...........
இது புதுசு கண்ணா புதுசு.......:))
நன்றி கண்ணா.

// Mohan said...
பரோட்டாவப் பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு!
நல்லாருந்துச்சு உங்க கதையும்!//

தாராளமா சாப்பிடுங்க!!!!!
நன்றி மோகன்.

ஹுஸைனம்மா said...

பரோட்டா, கொத்துபரோட்டா, சில்லி பரோட்டா - வாவ்!! நாக்கு ஊறுது; என்னா அழகு, என்னா பக்குவம்!!

இது எல்லாமே சூப்பர்ங்க!!

Raghu said...

பாதி ப‌டிக்கும்போதே தெரிஞ்சிடுச்சு உட்டால‌க்க‌டின்னு ;)

கொத்து ப‌ரோட்டா போட்டோ சூப்ப‌ர‌ப்பு!

சைவகொத்துப்பரோட்டா said...

// ஹுஸைனம்மா said...
பரோட்டா, கொத்துபரோட்டா, சில்லி பரோட்டா - வாவ்!! நாக்கு ஊறுது; என்னா அழகு, என்னா பக்குவம்!!

இது எல்லாமே சூப்பர்ங்க!!//

அப்படின்னா என்ன தயக்கம்,
சாப்பிடுங்க!!!!!!! :))
நன்றி.

// ர‌கு said...
பாதி ப‌டிக்கும்போதே தெரிஞ்சிடுச்சு உட்டால‌க்க‌டின்னு ;)

கொத்து ப‌ரோட்டா போட்டோ சூப்ப‌ர‌ப்பு!//

ஹி.....ஹி.......
நன்றி ரகு.

"உழவன்" "Uzhavan" said...

பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. அருமை :-)

சைவகொத்துப்பரோட்டா said...

// "உழவன்" "Uzhavan" said...
பல இடங்களில் சிரிக்க வைத்துவிட்டீர்கள்.. அருமை :-)//

ஆஹா!!! கேட்கவே (படிக்கும்போதே)
மகிழ்ச்சியாக இருக்கு, மிக்க
நன்றி நண்பரே.

Muruganandan M.K. said...

சிரிக்க வைத்து ஏய்க்கும் சுவையான படையல்

சாய்ராம் கோபாலன் said...

Good one. Girl's fathers are pain and kids even more painful here !!

Prasanna said...

//பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது அவளின் அப்பா//
ஆனா பஸ் நின்னது அவருக்காக இல்ல :)

நல்லா இருக்கு வெஜ் :)

சைவகொத்துப்பரோட்டா said...

// Dr.எம்.கே.முருகானந்தன் said...
சிரிக்க வைத்து ஏய்க்கும் சுவையான படையல்//

மகிழ்ச்சி!!!
நன்றி மருத்துவர் அய்யா.

// சாய்ராம் கோபாலன் said...
Good one. Girl's fathers are pain and kids even more painful here !!//

ஆமா!!!!
நன்றி அண்ணா.

// பிரசன்னா said...
//பஸ்ஸ நிறுத்த சொல்லி குரல் விட்டது அவளின் அப்பா//
ஆனா பஸ் நின்னது அவருக்காக இல்ல :)

நல்லா இருக்கு வெஜ் :)//

அதேதான்!!!!!
நல்லாயிருக்கா,
ரைட்டு...
நன்றி பிரசன்னா.

r.v.saravanan said...

கொத்து பரோட்டா ஸ்டால் னுசொல்றீங்க வெறும் பரோட்டா வச்சாஎப்படி

சாப்பிடறது

சைவகொத்துப்பரோட்டா said...

// r.v.saravanan kudandhai said...
கொத்து பரோட்டா ஸ்டால் னுசொல்றீங்க வெறும் பரோட்டா வச்சாஎப்படி

சாப்பிடறது//

வாங்க சரவணன், இரண்டாவது தட்டுல
பாருங்க குருமாவும் இருக்கு :))
நன்றி நண்பரே.

மங்குனி அமைச்சர் said...

//(அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)///

இந்த பதிவ படிச்சப்புறம் தான் தெரிஞ்சது உண்மைலே அது ____________ வண்டிதான்

சைவகொத்துப்பரோட்டா said...

// மங்குனி அமைச்சர் said...
//(அந்த
பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)///

இந்த பதிவ படிச்சப்புறம் தான் தெரிஞ்சது உண்மைலே அது ____________ வண்டிதான்//

அவ்வ்................
அமைச்சரே, பேருந்தோட வடிவம்தான் அப்படி
இருக்கும், அதுல பயணம் போனது, பச்ச புள்ளகளாகிய
நாங்களே!!!
நன்றி.

Thenammai Lakshmanan said...

அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)//

லொல்லு மன்னன் என்ற பட்டம் அளிக்கப் படுகிறது ஹிஹிஹி சை கொ ப விற்கு

Thenammai Lakshmanan said...

ஹ்ஹாஹாஹா கடைசில ஏமாந்தீங்களா அல்லது ஏமாத்திட்டீஙளா எங்களை

சிநேகிதன் அக்பர் said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html

(தெரிவிப்பதற்கு தாமதமாகிவிட்டது)

சைவகொத்துப்பரோட்டா said...

// thenammailakshmanan said...
அதற்கப்புறம் அவள் பேசியது எதுவும் என் காதில்
விழவில்லை, அப்போ நான் தலையை ஆட்டி கொண்டே இருந்ததை
பார்த்துதான் டைரக்டர் சசி, அந்த சீனை சுப்ரமணியபுரதில்
நுழைத்து விட்டார் (காப்பி ரைட்ஸ் இனிமே போட்டுக்கணும்ப்பா!!)//

லொல்லு மன்னன் என்ற பட்டம் அளிக்கப் படுகிறது ஹிஹிஹி சை கொ ப விற்கு

April 9, 2010 8:36 PM//

"பட்டமளிப்பு விழா" எப்போ!!!!
நன்றி அக்கா.

// thenammailakshmanan said...
ஹ்ஹாஹாஹா கடைசில ஏமாந்தீங்களா அல்லது ஏமாத்திட்டீஙளா எங்களை

April 9, 2010 8:38 PM//

இது கதைதானே!!! அதனாலே
நான்தான் ஏமாத்திட்டேன்!!!
நன்றி அக்கா.

// அக்பர் said...
உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_08.html

(தெரிவிப்பதற்கு தாமதமாகிவிட்டது)//

மிக்க நன்றி அக்பர்,
நிச்சயம் எழுதுகிறேன், உங்கள்
பதிவையும் படித்து பின்னூட்டம்
போட்டு இருக்கேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

செம டேஸ்ட்டுடுடுடு...

சைவகொத்துப்பரோட்டா said...

// NIZAMUDEEN said...
செம டேஸ்ட்டுடுடுடு...//

அப்படியா!!! சாருக்கு இன்னொரு
ப்ளேட் பரோட்டா கொடுப்பா :))
நன்றி நண்பரே.

சாமக்கோடங்கி said...

ஏமாந்தது நீங்க தான்.. நாயபுடிக்கிற கம்பெனி'ல போய் வேலை பார்த்து இருக்கீங்களே...

ஆனா நீங்க சொன்ன விதம் ஒரு டைரக்டருக்கே உரிய நடை...

நீங்க சினிமா பக்கம் கிளம்பலாம்.. இப்படி எல்லா பஸ்களும் பூத்தூவ ஆரம்பித்தால் எப்படி இருக்கும்..

சூப்பர்...

நானும் கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்..

நன்றி..

Jackiesekar said...

புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)-// கவிதை கவிதை..

சைவகொத்துப்பரோட்டா said...

// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
ஏமாந்தது நீங்க தான்.. நாயபுடிக்கிற கம்பெனி'ல போய் வேலை பார்த்து இருக்கீங்களே...

ஆனா நீங்க சொன்ன விதம் ஒரு டைரக்டருக்கே உரிய நடை...

நீங்க சினிமா பக்கம் கிளம்பலாம்.. இப்படி எல்லா பஸ்களும் பூத்தூவ ஆரம்பித்தால் எப்படி இருக்கும்..

சூப்பர்...

நானும் கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்..

நன்றி..//

பிரகாஷ் சார், அந்த பஸ்இன் வடிவத்தை
வைத்து என் நண்பர்கள் அந்த பேரை
வைத்தார்கள் :))
டைரக்டர் ரேஞ்சுக்கா இருக்கு, யாரவது
டைரக்டர் படிச்சா கோவிச்சிக்க போறாங்க.......:))
நன்றி பிரகாஷ்.

// ஜாக்கி சேகர் said...
புன்னகை பூவை
உதிர்த்தது
அந்த நடமாடும்
பூச்செடி(!!!)-// கவிதை கவிதை..//

அடடே!!! அந்த கவிதையை(!!!)
கவனிச்சு இருக்கீங்களே :))
நன்றி ஜாக்கி.

துபாய் ராஜா said...

கலக்கல் கற்பனை.

Thenammai Lakshmanan said...

பரோட்டாவுக்கு நன்றி சை கொ ப

சைவகொத்துப்பரோட்டா said...

// துபாய் ராஜா said...
கலக்கல் கற்பனை.//

மகிழ்ச்சி!!!
நன்றி ராஜா.
ஆமா துபாயோட ராஜா நீங்கதானா :))

// thenammailakshmanan said...
பரோட்டாவுக்கு நன்றி சை கொ ப//

இது உங்க (அனைவரும்தான்) கடை,
தாரளாமா சாப்பிடுங்க......:))
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்,
நன்றி அக்கா.

கவிதன் said...

அருமை உங்கள் பேருந்துப்பயணக் கதையும் அந்த பரோட்டா படங்களும்....!!!
வாழ்த்துக்கள்!

சைவகொத்துப்பரோட்டா said...

//கவிதன் said...
அருமை உங்கள் பேருந்துப்பயணக் கதையும் அந்த பரோட்டா படங்களும்....!!!
வாழ்த்துக்கள்!//

மிக்க மகிழ்ச்சி!!!
நன்றி கவிதன்,
தொடர்ந்து வாருங்கள்.

Jaleela Kamal said...

பேருந்து கற்பனை நல்ல இருக்கு,
இர‌ண்டு சீட்டு என்ற‌தும் அவ‌ங‌க் அப்பாவுக்கும் சேர்த்தோன்னு நினைத்தேன்

அதோடு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கம போனதை நினைத்து வருத்தப்பட்டதையும் ஹி ஹி தெரிந்து கொண்டேன்.

பரோட்டா சைட் டிஷுடன் சூப்பர்.

சைவகொத்துப்பரோட்டா said...

// Jaleela said...
பேருந்து கற்பனை நல்ல இருக்கு,
இர‌ண்டு சீட்டு என்ற‌தும் அவ‌ங‌க் அப்பாவுக்கும் சேர்த்தோன்னு நினைத்தேன்

அதோடு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கம போனதை நினைத்து வருத்தப்பட்டதையும் ஹி ஹி தெரிந்து கொண்டேன்.

பரோட்டா சைட் டிஷுடன் சூப்பர்.//

வாங்க!!!
எனக்கு வாய்ப்பு கிடைக்காத ரகசியத்தை
தெரிஞ்சுகிட்டீங்களா!!!!! :))
நன்றி அக்கா.

அன்புடன் மலிக்கா said...

ரெண்டு நாள்லீவ் விட்டேன் அதுக்குள்ளே இவ்ளோ நடந்துரிச்சா.

மன்னர்களும் மங்குனிக்களும் பரோட்டா மிச்சமில்லாமல் காலி செய்துட்டாகளே!

எனக்கு இப்ப சுட்டு வேணும்.

நல்ல லொள்ளு மனோம்மா சொன்ன பட்டம் நானும் உங்கலூக்கு தருகிறேன் ஓகே.

டபுள் ஆம்லெட்லில் 5,ம் போட்டு பரோட்ட பத்தும் பார்சல்..

// அன்புடன் மலிக்கா said...
ரெண்டு நாள்லீவ் விட்டேன் அதுக்குள்ளே இவ்ளோ நடந்துரிச்சா.

மன்னர்களும் மங்குனிக்களும் பரோட்டா மிச்சமில்லாமல் காலி செய்துட்டாகளே!

எனக்கு இப்ப சுட்டு வேணும்.

நல்ல லொள்ளு மனோம்மா சொன்ன பட்டம் நானும் உங்கலூக்கு தருகிறேன் ஓகே.

டபுள் ஆம்லெட்லில் 5,ம் போட்டு பரோட்ட பத்தும் பார்சல்..//

பட்டத்தை பெற்று கொண்டேன்,
ரெண்டு ஆம்லேட் போட்டு பத்து
பரோட்டா பார்சல்..............:))
நன்றி மலிக்கா.

= YoYo = said...

அருமை நண்பா
அந்த "புரொட்டா" படம்

கதை ரொம்ப சூப்பர்
விருவிருப்பா ஆரம்பித்து
"அம்மா" என்று முடித்த விதம்
சுப்பர் சைவ கொத்து புரொட்டா ரகம்

சைவகொத்துப்பரோட்டா said...

//+யோகி+ said...
அருமை நண்பா
அந்த "புரொட்டா" படம்

கதை ரொம்ப சூப்பர்
விருவிருப்பா ஆரம்பித்து
"அம்மா" என்று முடித்த விதம்
சுப்பர் சைவ கொத்து புரொட்டா ரகம்//

நன்றி யோகி,
கருத்துக்கும், வருகைக்கும்.

ஜில்தண்ணி said...

தல
ஜில் தண்ணி
ரெடி
குடிக்க உள்ள வாங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்

சைவகொத்துப்பரோட்டா said...

// ஜில்தண்ணி said...
தல
ஜில் தண்ணி
ரெடி
குடிக்க உள்ள வாங்க

www.jillthanni.blogspot.com

ஒரு விளம்பரம் தான்//

குடிச்சிட்டேன் பாஸ்,
இதுக்கும் க்ளப்பா!!!
ரைட்டு :))
நன்றி.

பின்னோக்கி said...

என்னது ? நாக்கு தாடையில ஒட்டிக்கிச்சா ? நெனைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே :)

thiyaa said...

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

lolly999 said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! இன்றைக்கும் பரோட்டாவா? பொங்கல் இல்லையா?

சைவகொத்துப்பரோட்டா said...

// பின்னோக்கி said...
என்னது ? நாக்கு தாடையில ஒட்டிக்கிச்சா ? நெனைச்சுப் பார்க்கவே பயங்கரமா இருக்கே :)//

ச்சு.......ம்மா.............
ஒரு பில்ட்அப்புக்கு.........
ஹி...........ஹி.........
நன்றி.

//தியாவின் பேனா said...
நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.//

நலம் பெற்று வந்ததிற்கு
வாழ்த்துக்கள்.
உடல்நலம் குறைந்த நேரத்திலும்
"ரிஸ்க்" எடுத்து எனது பதிவுகளை
படித்ததற்கு நன்றி :))

// lolly999 said...
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! இன்றைக்கும் பரோட்டாவா? பொங்கல் இல்லையா?//

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொங்கல்தானே கொடுத்திட்டா
போச்சு.........:))
நன்றி.

Anonymous said...

test

Shannon said...

//(அந்த பேருந்தை "நாய் வண்டி" என என் நண்பர்கள் கேலி செய்வர், அந்த "ரகசியத்தை" இங்க நான் சொல்ல மாட்டேன்)/// இந்த பதிவ படிச்சப்புறம் தான் தெரிஞ்சது உண்மைலே அது ____________ வண்டிதான்

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)