Wednesday, October 27, 2010

எக்ஸின் அழைப்பு 8 (நிறைவுப்பகுதி)

இரண்டு நாட்கள் கழித்து புதிய நபர் ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது,
யாராக இருக்கும் யோசித்தவாறே ஹலோ என்றேன்.

அருண், விஷ்வா பேசறேன் என்றான்.

ஏய் விஷ்வா என்ன ஆச்சு உனக்கு இரண்டு நாளா ஆளையே காணோம்,
போன் செய்தாலும் எடுக்க வில்லை.

சொல்றேன் அருண் என் வீட்டுக்கு வாயேன் என்றான்.
மாலையில் வருவதாக கூறினேன்.

மாலை சொன்னே நேரத்துக்கு அவன் வீட்டு கதவை தட்டினேன்,
யாரோ ஒரு பெண் கதவை திறந்தாள்.

சாரி விஷ்வா வீடு இதுதானே...

ஆமா அருண் உள்ள வா என்றபடியே விஷ்வா வந்தான்.

கதவை திறந்த பெண் எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள் அறைப்பக்கமாய் நகர்ந்தாள்.

விஷ்வா என்னடா இது இப்போ பொண்ணுங்களை வீட்டுக்கே கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டியா.

உஷ்...அருண் இது நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுடா என்றான் விஷ்வா. அவங்க அம்மா கூட கோவிலுக்கு வந்தவ அப்படியே
என்னை பாத்துட்டு போலாம்ன்னு வந்தா.

எப்படா கல்யாணம், சொல்லவே இல்லை என நான் அதிர்ந்தேன்.

சாரி அருண், என் கடைக்கு அடிக்கடி வர கஸ்டமர் இந்த பொண்ணு, அப்படியே பேசி பழக்கம் ஆச்சு. ஆனா இவ, என்னை ரொம்ப தீவிரமாய் காதலிச்சிருக்கா. நான் அது தெரியாம இவளையும் டைம் பாஸ் கேசுன்னு நினைச்சி கொஞ்சம் அசால்ட்டா
இருந்திட்டேன். இவ தன் காதல சொன்னப்ப நான் ஒத்துக்கல, அப்பறம் அவங்க அப்பாகிட்ட விசயத்த சொல்ல அந்த ஆள் கொஞ்சம்
ஆள் பலம் உள்ளவர்போல, என்னை தூக்கிட்டு போய் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் யோசிச்சி பார்த்தேன், இந்த அளவுக்கு தீவிரமா நம்மளையும் ஒரு பொண்ணு காதலிக்கும்போது அவளை கல்யாணம் செய்து கொள்வதுதான் சரின்னு பட்டதால ஒத்துகிட்டேன்.

ஆனா, இவளோட மாமா பையனுக்கு இவ மேல ஆசை, இவளுக்கு
என் மேல் காதல். எங்க கல்யாணத்தை தடுக்க அந்தப்பையன் முயற்சி செய்றதால யாருக்கும்
சொல்ல முடியலை. நாளைக்கு வடபழனி கோவில்ல கல்யாணம்,
முடிச்சிட்டு அப்படியே மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணப்போறோம்.
இதையே அழைப்பா வச்சுக்கிட்டு வந்திரு என்றான்.

மறு நாள் விஷ்வாவின் திருமணம் நடக்கும் முன்பே அந்தப்பையன்
சொந்தங்களுடன் வந்து தகராறு செய்ய, விசயம் போலிஸ் ஸ்டேசன் வரை சென்றது. இந்த களேபரம் நடக்கும்போது, என் மொபைல் ரிங்கி கொண்டே இருந்தது.
அழைப்பது யாரென்று பார்க்கும் நிலையில் இல்லை எனவே காலை
கட் செய்தேன். அப்புறம் ஒரு வழியாக சமரசம் செய்யப்பட்டு காவல்
நிலையத்தில் திருமணம் நடந்தது.

இந்த களேபரங்கள் முடிந்த பின்னர் அழைத்தது யாரென பார்த்தேன்.
அட ஜோதி! உடனே அவளுக்கு கால் செய்தேன்.
**********************************************
ரிசல்டுக்கு காத்திருக்கும் மாணவி போல் அப்பா சொல்லப்போகும் விசயத்தை கேட்க மிக ஆவலாய்
செவிகளை கூர்மையாக்கி கொண்டேன்.

மாப்பிள்ளையைபத்தி வந்த தகவல்கள் எல்லாம் ரொம்ப திருப்தியா
இருக்கு, எனக்கு சம்மதம் ஜோதி என்று அப்பா சொன்னவுடன் ஆனந்தத்தில்
துள்ளிகுதிக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.

ஒரு மாதம் ஓடி விட்டது, விஷ்வா கால் பண்ணியிருந்தான்,
எங்கள் கல்யாண பத்திரிக்கை பிரிண்ட் செய்தாகிவிட்டதாம். நானும்
அவனும் சென்று அழைப்பிதழை வாங்கி மீண்டும் ஒருமுறை சரி
பார்த்தோம்.

விஷ்வா என்ற அருண்விஷ்வாவிற்கும், ஜோதிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...என்று தொடங்கி
அனைத்தும் சரியாக இருந்தது.

எனது சைடில் முதல் அழைப்பை என் தோழி சுதாவிடம் இருந்து
ஆரம்பித்தேன்.


Picture Thanks:alter...names.com

விஷ்வாவின் பி.கு: பள்ளி காலத்தில் என் பெயரும், விஷ்வாவின் பெயரும் ஒன்றாக
இருந்ததால் எங்களுக்குள் செய்த ஒப்பந்தத்தின்படி விஷ்வா என் பெயரின் முன் பாதியான "அருண்" என்றே அழைப்பான்.

அழைப்பு முடிந்தது.

29 comments:

ஸ்ரீராம். said...

ஓ ...பெயர்க் குழப்பம்...அதைக் கடைசியில் சொன்னால் எப்படி... கடைசி வரை சஸ்பென்ஸ் மெய்ன்டென் பண்ணிட்டீங்க...சுபம்.

Anonymous said...

ஒரு சுபமான முடிவு :) இரு வேறு நிலையிலிருந்து கதை சொல்லியிருக்கீங்க .. ரொம்ப நல்லா இருந்துச்சு.. ஹாட்ஸ் ஆப்..

எல் கே said...

அருமை. சூப்பர் சை.கொ ப

Chitra said...

பெயர் குழப்ப suspense - கலக்கல் கதைங்க!

புதிய மனிதா. said...

claimax அருமை

VISA said...

சை.கொ ப
:)

RVS said...

பின்னீட்டீங்க. பெயர் மாறாட்டம். நல்ல ஒரு கொத்து பரோட்டா. ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

@ஸ்ரீராம்.
ஆரம்பத்தில் சொல்லிவிட்டால் சுவராசியம் இருந்திருக்காதே! நன்றி அண்ணா.

@Balaji saravana
கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி பாலாஜி.

@LK
நன்றி கார்த்திக்.

@Chitra
நன்றி சித்ரா.

@புதிய மனிதா.
நன்றி நண்பரே.

@VISA
புன்னகை முகத்திற்கு நன்றி விசா.

@RVS
நன்றி RVS.

அஹ‌ம‌து இர்ஷாத் said...

சுவ‌ராஸ்ய‌மா கொண்டு போய் அருமையா முடிச்சிட்டீங்க‌..சூப்ப‌ர்..

erodethangadurai said...

ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

Thenammai Lakshmanan said...

விட்டு விட்டுத்தான் படிச்சேன்.. ஆனாலும் சுவாரசியம்.. சை கொ ப.. நீங்க டீவியில் முயற்சிக்கலாம் சை கொ ப.. வாழ்த்துக்கள்..

சசிகுமார் said...

உண்மையில் என்னை அறியாமல் ஆபிசில் பகீரென சிரித்து விட்டேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

@அஹ‌ம‌து இர்ஷாத்
நன்றி இர்ஷாத்.

@ஈரோடு தங்கதுரை
எனது வாக்களித்து விட்டேன், நன்றி தங்கதுரை.

@தேனம்மை லெக்ஷ்மணன்
கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி அக்கா.

@சசிகுமார்
அப்படியா!! நன்றி சசி.

Unknown said...

என்ன தொடர் முடிந்து விட்டதா ....

ம் சுபம்..உங்களுக்குள ஒரு இரண்டு டைரக்டர் இருக்கார்.

நல்ல இருக்கு அண்ணா..

அடுத்த kadthaikka வைட்டிங்

r.v.saravanan said...

கடைசி வரை சஸ்பென்ஸ் கதையில் கொடுத்து நல்லா முடிச்சிருக்கீங்க வாழ்த்துக்கள் சைவ கொத்து பரோட்டா

Nithu Bala said...

கடைசிவரை ஒரே பெயருடைய நண்பர்கள் என்று எங்குமே நினைத்துவிடாதபடி தாங்கள் கதையை கொண்டு சென்ற விதம் அருமை..ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படித்து முடித்தேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

@siva
நன்றி சிவா.

@r.v.saravanan
கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சரவணன்.

@Nithu Bala
நன்றி Nithu.

Muruganandan M.K. said...

சுவார்ஸமான பதிவு. பெயர் குழப்பம் எனக்கும் வந்தது.

Anonymous said...

அப்பாடா.. ஒருவழியா முடிஞ்சுடுச்சா??

இனிமே தைரியமா இந்தப் பக்கம் வரலாம்..
சரிதானே அண்ணாத்தை??

சைவகொத்துப்பரோட்டா said...

@Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி டாக்டர்.

@இந்திரா
அவ்வ்வ்....ரொம்ப கொடுமைப்படுத்திட்டேனோ!
இனி தெகிரியமா வரலாம். நன்றி தங்கச்சி.

Praveenkumar said...

ஆள்மாறாட்டம் போல் பெயர்மாறாட்டம் செய்து இந்த எக்ஸின் அழைப்பை ஒரு வழி பண்ணீடீங்க..!! ஒரே குழப்பமாக இருந்தாலும் ஒருவழியா முடித்து அசத்தடீங்க.. தல.!! வாழத்துகள்.

Anisha Yunus said...

பெயர்களால் வரும் பிரச்சினை என்றாலும் கடைசி வரை மெயின்டெயின் பண்ணிய விதம் அழகு. ஃப்ளோவில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் போல தோணியது அவ்வப்போது. மற்றபடி, ஓகே!! :)

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரவின்குமார்
நன்றி பிரவின்.

@அன்னு
விரிவான அலசல்! கவனத்தில் கொள்கிறேன், விம்சர்சனதிற்கு நன்றி அன்னு.

Prasanna said...

அண்ணே திரும்ப வந்துட்டீங்களா (ம்கூம் சுத்தம்னு நீங்க சொல்றது கேக்குது :) நாந்தான் கொஞ்சம் வேலைய இருந்துட்டேன்.. சௌக்யமா..

சைவகொத்துப்பரோட்டா said...

@பிரசன்னா
வாங்க பிரசன்னா! அடியேன் நல்லா இருக்கேன், நீங்கள் நலமா.

அன்பரசன் said...

கதை நல்லா இருக்குங்க.

அந்நியன் said...

பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..

சைவகொத்துப்பரோட்டா said...

@அன்பரசன்
நன்றி அன்பரசன்.

@அந்நியன்
அப்படியா! நன்றி அந்நியன்.

Vikijuju said...

இன்று தான் முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வந்தேன். ஒரே மூச்சில் இக்கதையை படித்தேன்.. அட்டகாசமாய் இருந்தது..

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)