அப்போதான் படத்தை "அனுபவித்து" பார்க்க முடியும் என்பதால். (யாருப்பா அது கடைசி பாராவுக்கு ஓடுறது)
கதைபற்றி அனைவரும் தேவையான அளவுஅலசிவிட்டதால் என்னை "பாதித்த"
சில காட்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
மாதவன் மற்றும் த்ரிஷா காரில் சென்று கொண்டே விவாதிக்கும் காட்சி அதன்பின் நடக்கும் விபத்து, மிக சாதாரணமாய் தோன்றினாலும்
அந்த காட்சியே கதையின் திருப்பமாய் வருவது எதிர்பாராதது.
ஆரம்ப காட்சிகள் மிக சீரியஸ் ஆக இருப்பதால் மிக அழுத்தமான காதல் கதை வரப்போகிறது என எதிர்பார்த்தேன். கமல்
என்ட்ரி ஆனபின்தான் கதைக்களன் நகைச்சுவையில் பயனிக்கப்போகிறது என்பது தெரிந்தது.
வாரத்தைகளில் கிச்சுகிச்சு காட்ட முயற்சி செய்துள்ளார்கள். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகிறது. பல இடங்களில் "ஞே".

தூங்கும்போது அந்தச்சிறுவன் கட்டைவிரல் ஆட்டும் காட்சி ஹா...ஹா...
கமலின் நண்பனாக வீடியோ சாட்டில் வரும் அந்த மொட்டையும் ஊர்வசியும் வரும் காட்சிகள் செண்டிமெண்ட்.
அந்த மொட்டைதான் ரமேஷ் அரவிந்த் என்பது படம் பார்க்கும்போது
தெரியவில்லை, படம் பார்த்தபின் நம் பதிவர்களின் விமர்சனத்தை மீண்டும் முழுமையாக படித்த பின்பு தெரிந்தது.
உஷாஉதூப், ஓவியா எல்லாம் வந்து போகிறார்கள்.
மாதவன், கமலிடம் போன் பேசிக்கொண்டே டிரைவ் செய்யும்போது "மாமாவிடம்"
மாட்டிக்கொள்ளும் காட்சி கலகல. நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு இருக்கும் அந்த மலையாளம் பேசும் ஜோடிகள் வரும் சீன்களில் சுத்தமாக நகைச்சுவை இல்லை, முடிவில் வரும் சில காட்சிகள் தவிர்த்து.
த்ரிஷா சோகமாகவே வருகிறார், சொந்த குரலில் பேசி இருக்கிறார்.
கமலும், அவரும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில் த்ரிஷா "நன்றி" என்று
சொல்ல அதற்கு கமல் நீங்கள் நடிக்கும் படங்களில் இது மாதிரி தமிழே வர
மாட்டேங்குதே என்று கேட்பார். ஆனால் இதே படத்தில் நிறைய வசனங்கள் ஆங்கிலத்தில்தான் வரும்!
ஊர்வசி சீரியல் நடிகை மாதிரி கண்ணை கசக்கி கொண்டேதான் இருக்கிறார், அவ்வளவு சோகத்திலும்
சாட்டிங்கில் நிஷாவை (த்ரிஷா) பார்த்தவுடன் மிக கலகலப்பாக நான் உங்க "பேன்" என்பார்.
கதை, திரைக்கதை, வசனம்: கமல்ஹாசன்.
இயக்கம் :K .S .ரவிக்குமார்
இசை :தேவிஸ்ரீபிரசாத்
ஒளிப்பதிவு:மனுஷ்நந்தன்.
மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம்
Picture Thanks: yahoo.com
44 comments:
:))
தரமான மொக்கை படம் சொல்ல வாரீங்களா..
திரிசாவுக்க கூட பாக்கமுடியாத
அப்போ மாதவனுக்காக பார்க்கலாம் .
நல்ல விமர்சனம் அண்ணே
கடைசில வழக்கமா எல்லாரும் சொல்றமாதிரி
மன்மதன் அம்பு = ...
அப்டினு ஒரே வரில நச்சுனு சொல்வீங்கனு எதிர்பாத்தேன் அண்ணாத்தை..
மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம்'////
சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.
படத்த ரொம்ப மேலோட்டமா அலசியிருக்கீங்க பாஸ் ;)
வசனங்களுக்காக பார்க்கலாம் ...
@எல் கே
புன்னகைக்கு நன்றி கார்த்திக்.
@siva
இந்தப்படம் சில பழைய கமல் படங்களை நினைவூட்டுகிறது சிவா.
@இந்திரா
கடைசியில் இருக்கு தங்கச்சி, படிக்கலையா.
@தமிழ் உதயம்
பாத்துட்டீங்க போல, நன்றி நண்பரே.
@Balaji saravana
நன்றி பாலாஜி.
@கே.ஆர்.பி.செந்தில்
சில வசனங்கள் நன்று, கருத்துக்கு நன்றி பாஸ்.
அம்பு தச்சுருச்சா? ;-)
கடைசி பாரா முழுவதையும் படிக்கணும்னு அவசியம் இல்லை.... கடைசி ஒரு வரியை மட்டும் படித்தாலே போதும்...
// மன் மதன் அம்பு : காஸ்ட்லி மேடை நாடகம் //
அருமை...
அம்பு குறி தவறி விட்டது போலும்...!
@RVS
அதேதான், நன்றி RVS.
@philosophy prabhakaran
நன்றி நண்பா.
@ஸ்ரீராம்.
கருத்துக்கு நன்றி அண்ணா.
பார்க்கலாமா வேண்டாமா
@சசிகுமார்
வாங்க நண்பா, என்ன பதில் சொல்ல :))
படத்த ரொம்ப டீப்பா அலசியிருக்கீங்க பாஸ்..
Wish you happy new year..
Pls follow me..
http://sakthistudycentre.blogspot.com
@sakthistudycentre.blogspot.com
கருத்துக்கு நன்றி பாஸ், உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@r.v.saravanan
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சரவணன்.
படம் பார்த்தேன்.. என்னை அவ்வளவாக கவரவில்லை.. சிற்சில விஷயங்களில் கைதட்ட வைத்தார்கள்..
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
@கவிதை காதலன்
நன்றி நண்பா, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நீங்க எல்லாம் பார்த்து சொன்னா சரிதான் அத படிச்சிக்கிரேன்,
உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கிறேன் நேரம் கிடைக்க்கும் போது வந்து பெற்று கொள்ளுங்கள்.
http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html
@Jaleela Kamal
எடுத்து நம்ம கடையில் வைத்து விட்டேன்! நன்றி அக்கா. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
@பிரஷா
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் பிரஷா.
Vimarsanamum arumai...padamum arumai..
@டக்கால்டி
வாங்க நண்பா, இன்னும் படம் பாக்கலையோ.
படம் பார்த்தாச்சு பாஸ்... மாதவன் நடிப்பு அருமை.
@டக்கால்டி
கருத்துக்கு நன்றி நண்பரே.
என்ன சை கொ ப எப்படியிருக்கீங்க.
விமர்சனம் அருமை.
@அன்புடன் மலிக்கா
வாங்க மலிக்கா! நான் நலமாய் இருக்கேன், கருத்துக்கும் விசாரிப்புக்கும் மிக்க நன்றி.
@Ashok
மகிழ்ச்சி! நன்றி அசோக், இதோ உங்கள் பக்கம் வருகிறேன்.
இத்தை விட சின்ன ஃபோட்டோ கிடைக்கலியாங்ண்ணா?
எங்கே எங்க கடை பக்கமும் காணாம்? நாந்தேன் லீவு, நீங்களுமா?? ஓட்டு போட்டா எல்லாருமே அரசியல்வியாதி ஆயிடுரோமோ?
@அன்னு
வாங்க அன்னு, உங்கள் குழந்தை நலமா. சற்றே வேலைப்பளு அதனால்தான் கமெண்ட் எழுத இயலவில்லை. அனைவரின் தளங்களையும் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.
நன்றி அன்னு.
வாழ்த்துக்கள்..!
@Pranavam Ravikumar a.k.a. Kochuravi
நன்றி ரவி.
யப்பா.. நான் ரொம்ப லேட்டு.. நல்ல விமர்சனமே.. இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கல.. பார்க்கவும் தோணல ...
@சாமக்கோடங்கி
வாங்க நண்பரே, கருத்துக்கு நன்றி.
www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.
New Classified Website Launch in India - Tamil nadu
No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com
என்ன ஆளையே காணோம். பதிவும் போடலை..
@அன்புடன் மலிக்கா
விசாரிப்பிற்கு நன்றி மலிக்கா, அனைவரின் பதிவுகளையும் படித்து கொண்டு இருக்கிறேன். (எழுத சோம்பேறித்தனம் + நேரமின்மை) விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
சித்திரை புதுவருட வாழ்த்துகள்.
@மாதேவி
நன்றி மாதேவி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நண்பரே நீண்ட நாட்களிற்கு பின் தொடர்புகொள்வதில் சந்தோசம்
நலமாய் இருக்கிறீங்களா?
நல்லாயிருக்குங்க........................நம்ம பக்கமும் வாங்க..............
அண்ணாத்தை... நல்லா இருக்கீங்களா???
இன்னைக்கு வலைச்சரத்துல உங்களோட பதிவுகள் பத்தி சொல்லிருக்கேன்.
முடிஞ்சா வந்து பாருங்களேன்..
http://blogintamil.blogspot.com/2011/08/2_16.html
@vidivelli
நலம், நன்றி நண்பரே.
@ஸ்ரீராம்.
உள்ளேன் அண்ணா.
@இந்திரா
வந்தேன், நன்றி தங்கச்சி.
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
Post a Comment