Monday, November 30, 2009

சிறந்த கிச்சு கிச்சு வெற்றியாளர்

அமோக ஆதரவுடன் சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் பட்டதை "தமிழ் தாத்தா" வென்று விட்டடர்.

அவருக்கு பரிசாக "அம்மா முத்தம்" அளிக்கபடுகிறது.

ஏடா கூடமாக எதையாவது நினைக்காதீர்கள், அதுதாங்க "கலை மாமணி " விருது அளிக்கபடுகிறது.


அப்பாவி அங்கு:இப்படி விருது கொடுத்து, வாங்கி கொண்டு இருந்தால் மத்த பிரச்சனைகளை கவனிக்க நேரம் இருக்குமா.

Sunday, November 29, 2009

இந்த வார சிறந்த கிச்சு கிச்சு


இந்த வாரம் மூன்று சிறந்த போட்டியாளர்கள் களத்தில் உள்ளார்கள். முதலில் அவர்களின் கிச்சு கிச்சு அறிக்கைகளை பார்ப்போம்.


போட்டியாளர் ஒன்று: " தமிழ் தாத்தா"

சகோதர யுத்தம் காரணமாக ஓடு மொத்தமாக நாம் பாதிக்க பட்டோம், " வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன் படுத்த வேண்டும்"


போட்டியாளர் இரண்டு:" மரம் வெட்டி"

தமிழகத்தில் என்னை போன்று "நாகரிகமான" அரசியல்வாதி யார் இருக்கிறார், "தேர்தலில் ஒரு முறை மக்கள் என் பேச்சை கேட்டால் தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும்"


இருவரில் இந்த வார சிறந்த கிச்சு கிச்சு பேச்சாளர் யார் என்று தெரிவு செய்யும் பொறுப்பு உங்களிடம் விடப்படுகிறது. உங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க ஆரம்பிக்கலாம்.


முடிவுகள் நாளை அறிவிக்கப்படும்.

















:))

Saturday, November 28, 2009

இனிப்பான செய்தி


ஒரு வழியாக சமச்சீர் கல்விக்கான புதிய பாடத்திட்டம் வெளி இடப்பட்டுள்ளது. இதன்படி ஆறாம் வகுப்பில் இருந்தே பொருளாதாரம், கணினி கல்வி போன்றவை இருக்கும்.


தனியார் கல்வி நிலையங்களுக்கு ஆப்பு. கொஞ்சமாவது கொள்ளை அடிப்பது குறையும் என நினைக்கிறேன்.


அப்படியே இந்தி மொழி பாடமும் (துணை மொழி) கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே. நம் மாநிலத்தை தவிர அனைத்து இடங்களிலும் உள்ளது, மற்ற மாநிலத்தை சேர்ந்தோர் இடம் நாம் ஆங்கிலத்தில் பேசும்போதே அவர்கள் நக்கலாக "மதராஸ் வாலா" என்கிறான், நெருக்கமான நட்புக்கு தடை விழுகிறது.


இது நான் நேரில் கண்டதும் மற்றும் சொந்த அனுபவமும் உள்ளது.

Monday, November 23, 2009

கவசம்



உன் இதழ்களை மலர் என்று

நினைத்து அமர வந்து வண்டு

முடியாமல் தவித்தது


நான் கொடுத்த முத்தம்

கவசமாய் இருப்பதால்...






மேலே நீங்கள் கண்டது, கவிதை (!!) கதை அல்ல நிஜம், நம்புங்கள்

Friday, November 20, 2009

வேற்று கிரகவாசிகள் 1


வருடம்:1968

இடம் : நகர எல்லைக்கு வெளி உள்ள கிளப்

நேரம் :அதிகாலை இரண்டு மணி.


போதையின் உச்சத்தில் இருந்த பாலாவை இழுத்து கொண்டு வெளி வந்த ரிஷி எலும்பு மஜ்ஜயினை துளைத்த குளிர் தாங்காது ஜெர்கின் தேடி எடுத்து காரை இயக்கினான்.


ரிஷி பெல்லி டான்ஸ் ஆடினாளே அவ அட்ரஸ் தெரியமா, இந்த நேரத்தில் இது எதுக்கு, அவளுக்கு டிரைவிங் சொல்லி கொடுக்க, அப்படியே உன் தர்மபதிணிக்கும் சொல்லிகொடு என்று நான் கூறும் பொழுது வானில் அந்த பிரகாசமான வெளிச்ச வட்டம் தெரிந்தது.


தொடர்ந்து காரை செலுத்த முடியவில்லை, பாலா அது என்ன என நான் கேட்க பாலாவின் குறட்டை ஒலிதான் கேட்டது. "அது" மெல்ல எனது காரை நோக்கி நகர்ந்து வந்தது.



வருடம் :2004

இடம் :ஒரு நகரம்


கிசோர் தூங்குனது போதும் ஏர்போர்ட் செல்ல ஒரு மணி நேரம் ஆகி விடும், என்றபடியே ஷாலு பேக் செய்து கொண்டிருந்தாள். இருவரும் புதுமண தம்பதியர், ஹனி மூன் கொண்டாட உல்லாச புரி நோக்கி பயணம்.


டேக்சி டிராபிக் ஜெமில் நின்ற பொழுது பெட்டி கடையில் உள்ள பேப்பர் செய்தி என்னை கவர ஷாலு இடம் அதை காட்டினேன். சிட்டி அவுட் டரில் வினோத வெளிச்ச வட்டம் பார்த்ததாக இரு வாலிபர்கள் கூறிய செய்தியும் அவர்கள் படமும் பிரசுரம் ஆகி இருந்தது.


இதை எல்லாம் நம்புறியா கிஷோர் என்ற ஷாலு இடம், பத்திரிக்கை விக்க இவங்க போடுற டுபாகூர் செய்தி என்றேன்.


அப்பொழுது அந்த அதிசயம் நடந்தது.........




Monday, November 16, 2009

தமிழ் திரை படம்

சமீபத்தில் வந்த படத்தில் இது என்னை கவர்ந்த ஒன்று, காமெராவை பார்த்து ஹீரோ வீர வசனம் பேசும் காட்சி இல்லை, நாயகி துகில் உரிக்க வில்லை, வில்லன் டேய், டோய், என கத்த வில்லை, (என்னதான் இருக்கு...)





படிக்காத கூட்டத்தில் இருந்து ஒருவன் படித்து வந்தால் அவனை இறுமாப்பும், தன்னை விட ஒரு (பல) படி குறைவாகும் மதிக்கும் ஒரு கூட்டம் அவனை எப்படி பார்க்கிறது என்பதை இயக்குனர் மனதை தொடும் விதம் கூறி இருக்கும் பாணி அருமை, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் வர்க்கம், "இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசும் நீங்கள் ஏன் ஆங்கிலம் பேச வில்லை என கேட்கும் பொழுது, "நான் என் மக்கிளடம் பேசினால் அவர்களுக்கு புரியாது, உங்களிடம் பேசினால் உங்களுக்கு பிடிக்காது" போன்ற வனசங்கள் யதார்த்தம்.





அடுத்தவன் முதுகில் சவாரி செய்யும் நபர்களை, பொன் வண்ணன் கேரக்டர் மூலமாக சாடி உள்ள பாணி அருமை.





சில காட்சிகளில் வந்தாலும், பொன் வண்ணனிடம் ஆக்ரோசமாக (கையால் நடக்கும்) மோதும் நபரின் பாத்திர படைப்பு அழகு.





சில இடங்களில் லாஜிக் இடித்தாலும் பார்க்க வேண்டிய படம் "பேராண்மை", நேரம் கிடைத்தால் பாருங்கள்.





இயக்குனர் ஜன நாதனுக்கு இந்த வேளையில் நன்றி, அனைவரும் ரசிக்கும்படி நல்ல படம் கொடுத்தமைக்கு.













Thursday, November 12, 2009

சோதனை(!!) கொத்து

அன்பானவர்களே
உங்களின் பொறுமையை சோதிக்க நானும் களத்தில் இறங்குகிறேன் இன்று முதல்.

தமிழ் ஆசான் (இங்கே தமிழில் எழுதி copy செய்து, கமெண்ட் பாக்ஸில் paste செய்யலாம்)